Category: புஹாரி

Bukhari

Bukhari-7274

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7274. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன. அவற்றைக் காணும் மக்கள் ‘நம்பியே ஆகவேண்டிய’ அல்லது ‘பாதுகாப்புப் பெற்றே தீர வேண்டிய’ நிலை இருந்தது. எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம், அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு (வஹீ) தான். எனவே, நபிமார்களிலேயே மறுமைநாளில், பின்பற்றுவோர் அதிகமுள்ள நபியாக நானே இருப்பேன் என எதிர்பார்க்கிறேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.9

Book :96


«مَا مِنَ الأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مِنَ الآيَاتِ مَا مِثْلُهُ أُومِنَ، أَوْ آمَنَ، عَلَيْهِ البَشَرُ، وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ، فَأَرْجُو أَنِّي أَكْثَرُهُمْ تَابِعًا يَوْمَ القِيَامَةِ»


Bukhari-7273

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப்பட்டு அனுப்பப் பெற்றுள்ளேன் என நபி (ஸல்) அவர்கள் கூறியது7

7273. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒருங்கிணைந்த பொருள்கள் கொண்ட வார்த்தைகள் வழங்கப் பெற்று அனுப்பப்பட்டுள்ளேன். (எதிரிகளுக்கு என்னைப் பற்றியும் மதிப்பும்) அச்ச(மு)ம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு வெற்றி அளிக்கப்பட்டுள்ளது. (நேற்றிரவு) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் (கனவில்) பூமியின் கருவூலங்களுடைய திறவுகோல்கள் கொண்டுவரப்பட்டு என்னுடைய கையில் வைக்கப்பெற்றதை கண்டேன்.

இந்த ஹதீஸை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்துவிட்டு, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்றார்கள்; நீங்கள் அவற்றை இயன்றவாறெல்லாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள்’ அல்லது ‘நீங்கள் அவற்றைப் பரும்க் கொண்டிருக்கின்றீர்கள்’ என்று, அல்லது அதைப் போன்றதொரு வார்த்தையைக் கூறினார்கள்.8

Book : 96


«بُعِثْتُ بِجَوَامِعِ الكَلِمِ، وَنُصِرْتُ بِالرُّعْبِ، وَبَيْنَا أَنَا نَائِمٌ رَأَيْتُنِي أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ فَوُضِعَتْ فِي يَدِي»، قَالَ أَبُو هُرَيْرَةَ: فَقَدْ ذَهَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنْتُمْ تَلْغَثُونَهَا، أَوْ تَرْغَثُونَهَا، أَوْ كَلِمَةً تُشْبِهُهَا


Bukhari-7272

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7272. அப்துல்லாஹ் இப்னு தீனார்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அவர்கள் அப்துல் மலிக் இப்னு மர்வான் அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து (பின்வருமாறு) எழுதினார்கள்: நான் அல்லாஹ் வகுத்த நெறிமுறைப்படியும் அவனுடைய தூதர் காட்டிய வழிமுறைப்படியும் என்னால் இயன்றவரை உங்கள் கட்டளைகளைச் செவியேற்றுக் கீழ்ப்படிந்து நடப்பேன் என உறுதி அளிக்கிறேன்.6

Book :96


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، ” كَتَبَ إِلَى عَبْدِ المَلِكِ بْنِ مَرْوَانَ يُبَايِعُهُ: وَأُقِرُّ لَكَ بِذَلِكَ بِالسَّمْعِ وَالطَّاعَةِ عَلَى سُنَّةِ اللَّهِ وَسُنَّةِ رَسُولِهِ فِيمَا اسْتَطَعْتُ


Bukhari-7271

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7271. அபூ பர்ஸா அல்அஸ்லமீ(ரலி) அறிவித்தார்.

அல்லாஹ் உங்களை இஸ்லாத்தின் வாயிலாகவும் முஹம்மத்(ஸல்) அவர்கள் வாயிலாகவும் ‘தன்னிறைவு கொள்ளச் செய்தான்’ அல்லது ‘உயர்வாக்கினான்’.5

அபூ அப்தில்லாஹ் (புகாரியாகிய நான்) கூறுகிறேன்: இவ்விடத்தில் ‘தன்னிறைவு கொள்ளச் செய்தான்’ என்றே இடம்பெற்றுள்ளது. ஆனால், ‘உயர்வாக்கினான்’ என்றே இருக்கவேண்டும். இதே தலைப்பிலுள்ள என்னுடைய தனி நூலின் மூலத்தில் காண்க.

Book :96


«إِنَّ اللَّهَ يُغْنِيكُمْ – أَوْ نَعَشَكُمْ – بِالإِسْلاَمِ وَبِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: «وَقَعَ هَاهُنَا يُغْنِيكُمْ، وَإِنَّمَا هُوَ نَعَشَكُمْ يُنْظَرُ فِي أَصْلِ كِتَابِ الِاعْتِصَامِ»


Bukhari-7270

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7270. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் என்னைத் தம்முடன் அணைத்துக் கொண்டு, ‘இறைவா! இவருக்கு வேதத்தைக் கற்றுக்கொடுப்பாயாக’ என்றுசொன்னார்கள்.4

Book :96


ضَمَّنِي إِلَيْهِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «اللَّهُمَّ عَلِّمْهُ الكِتَابَ»


Bukhari-7269

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7269. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

(நபி(ஸல்) அவர்கள் இறந்த) மறுநாள் முஸ்லிம்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு (அவர்களை கலீஃபாவாக ஏற்று) விசுவாசப் பிரமாணம் (பைஅத்) செய்து கொடுத்தபோது உமர்(ரலி) அவர்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களின் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது அமர்ந்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கு முன்பாக ஏகத்துவ உறுதிமொழியைக் கூறினார்கள். பிறகு ‘இறைவனைப் போற்றிப் புகழ்ந்த பின் (கூறுகிறேன்:) உங்களிடம் (உலகில்) உள்ள (செல்வத்)தைவிட (மறுமையில்) தன்னிடம் இருப்பதையே தன் தூதருக்கு (வழங்கிட) அல்லாஹ் தேர்ந்தெடுத்தான். அல்லாஹ் எந்த வேதத்தைக்கொண்டு உங்கள் தூதரை வழி நடத்தினானோ அதை நீங்கள் பற்றிக் கொள்ளுங்கள்; நேர்வழி பெறுவீர்கள். ஏனெனில், அல்லாஹ் தன் தூதரை நேர் வழியில் செலுத்தியதெல்லாம் அந்த வேதத்தின் வாயிலாகத்தான்’ என்றார்கள்.3

Book :96


أَنَّهُ سَمِعَ عُمَرَ، الغَدَ حِينَ بَايَعَ المُسْلِمُونَ أَبَا بَكْرٍ، وَاسْتَوَى عَلَى مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، تَشَهَّدَ قَبْلَ أَبِي بَكْرٍ فَقَالَ: «أَمَّا بَعْدُ، فَاخْتَارَ اللَّهُ لِرَسُولِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي عِنْدَهُ عَلَى الَّذِي عِنْدَكُمْ، وَهَذَا الكِتَابُ الَّذِي هَدَى اللَّهُ بِهِ رَسُولَكُمْ، فَخُذُوا بِهِ تَهْتَدُوا وَإِنَّمَا هَدَى اللَّهُ بِهِ رَسُولَهُ»


Bukhari-7268

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 எதிர்பார்ப்பு குறித்து வந்துள்ளவையும், (இறைவழியில்) உயிர்த் தியாகம் செய்வதை எதிர்பார்ப்பதும்.
7268. தாரிக் இப்னு ஷிஹாப்(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
யூதர்களில் ஒருவர் உமர்(ரலி) அவர்களிடம், ‘இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! ‘இன்று உங்களின் மார்க்கத்தை உங்களுக்காக நான் முழுமையாக்கிவிட்டேன். என்னுடைய அருட்கொடையையும் உங்களின் மீது நான் நிறைவு செய்துவிட்டேன். இன்னும் உங்களுக்காக இஸ்லாத்தை மார்க்கமாக அங்கீகரித்துவிட்டேன்’ எனும் இந்த (திருக்குர்ஆன் 05:3 வது) இறைவசனம் எங்களுக்கு அருளப்பட்டிருந்தால் நாங்கள் (வசனம் அருளப்பட்ட) அந்த நாளை பண்டிகை நாளாக ஆக்கிக்கெண்டிருப்போம்’ என்றார். அப்போது உமர்(ரலி) அவர்கள், ‘இந்த வசனம் எந்த நாளில் இறங்கியது என்பதை அறிவேன். இது அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் வெள்ளிக்கிழமையன்று அருளப்பெற்றது’ என்றார்கள்.2
Book : 96

قَالَ رَجُلٌ مِنَ اليَهُودِ لِعُمَرَ: يَا أَمِيرَ المُؤْمِنِينَ، لَوْ أَنَّ عَلَيْنَا نَزَلَتْ هَذِهِ الآيَةُ: {اليَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الإِسْلاَمَ دِينًا} [المائدة: 3]، لاَتَّخَذْنَا ذَلِكَ اليَوْمَ عِيدًا، فَقَالَ عُمَرُ: «إِنِّي لَأَعْلَمُ أَيَّ يَوْمٍ نَزَلَتْ هَذِهِ الآيَةُ، نَزَلَتْ يَوْمَ عَرَفَةَ، فِي يَوْمِ جُمُعَةٍ» سَمِعَ سُفْيَانُ مِنْ مِسْعَرٍ، وَمِسْعَرٌ قَيْسًا، وَقَيْسٌ طَارِقًا


Bukhari-7267

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6 தனியான ஒரு பெண் அளிக்கும் தகவல் (ஆதாரமாகுமா?)

7267. தவ்பா இப்னு கைசான் அல் அம்பரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

என்னிடம் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: ஹஸன் அல்பஸ்ரீ(ரஹ்) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து (பிறர் சொல்லக்கேட்டு நிறைய) ஹதீஸ்களை அறிவிப்பதைப் பார்த்தீர்களா? நான் இப்னு உமர்(ரலி) அவர்களுடன் ஏறத்தாழ இரண்டு அல்து ஒன்றரை ஆண்டுகள் அமர்ந்து ஹதீஸ்களைக் கற்று)ள்ளேன். ஆனால், அவர்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அதைத் தவிர வேறெதையும் அறிவித்து நான் கேட்டதில்லை.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்கள் உள்ளிட்ட நபித்தோழர்களில் சிலர் ஓர் இறைச்சியை உண்ணச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர், அது உடும்பு இறைச்சி என்று அவர்களை அழைத்துச் சொன்னார்கள். உடனே அவர்கள் (அதை உண்ணுவதை) நிறுத்திவிட்டார்கள். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘சாப்பிடுங்கள்’ அல்லது ‘உண்ணுங்கள்’. ஏனெனில், அது, ‘அனுமதிக்கப்பட்டதாகும்’ அல்லது, ‘அதனால் குற்றமில்லை’ – அறிவிப்பாளர் தவ்பா(ரஹ்) அவர்கள் இந்த இடத்தில்

كَانَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهِمْ سَعْدٌ، فَذَهَبُوا يَأْكُلُونَ مِنْ لَحْمٍ، فَنَادَتْهُمُ امْرَأَةٌ مِنْ بَعْضِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ [ص:91]: إِنَّهُ لَحْمُ ضَبٍّ، فَأَمْسَكُوا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُوا أَوِ اطْعَمُوا، فَإِنَّهُ حَلاَلٌ – أَوْ قَالَ لاَ بَأْسَ بِهِ شَكَّ فِيهِ – وَلَكِنَّهُ لَيْسَ مِنْ طَعَامِي»


Bukhari-7266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5 நபி (ஸல்) அவர்கள் அரபு தூதுக் குழுக் களிடம், உங்களுக்குப் பின்னால் (ஊரில்) இருப்பவர்களுக்கு எடுத்துரையுங்கள் என்று உபதேசம் செய்தது. இது தொடர்பாக மா-க் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள் ளார்கள்.24

7266. அபூ ஜம்ரா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னைக் கட்டிலின் மீது (தம்முடன்) அமரச் செய்து (தாம் கூறும் ஹதீஸ்களை மக்களுக்கு மொழிபெயர்த்துக் கூறுமாறு சொல்லி வந்தார்கள். (ஒரு முறை பின்வருமாறு) கூறினார்கள்: அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் வந்தபோது ‘தூதுக் குழுவினர் யார்?’ என்று நபியவர்கள் கேட்க, ‘(நாங்கள்) ‘ரபீஆ’ குலத்தார்’ என்று தூதுக் குழுவினர் பதிலளித்தனர். நபி(ஸல்) அவர்கள், ‘இழிவுக்குள்ளாகாமலும் மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருகை புரிந்த ‘தூதுக் குழுவினரே!’ அல்லது ‘சமூகத்தாரே!’ வருக’ என்று (வாழ்த்துக்) கூறினார்கள். அப்போது அக்குழுவினர் ‘இறைத்தூதர் அவர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையே ‘முளர்’ குலத்து இறைமறுப்பாளர்கள் (தடையாக) உள்ளனர். எனவே, எந்தக்

كَانَ ابْنُ عَبَّاسٍ يُقْعِدُنِي عَلَى سَرِيرِهِ، فَقَالَ لِي: إِنَّ وَفْدَ عَبْدِ القَيْسِ لَمَّا أَتَوْا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنِ الوَفْدُ؟»، قَالُوا: رَبِيعَةُ، قَالَ: «مَرْحَبًا بِالوَفْدِ – أَوِ القَوْمِ – غَيْرَ خَزَايَا وَلاَ نَدَامَى»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ بَيْنَنَا وَبَيْنَكَ كُفَّارَ مُضَرَ، فَمُرْنَا بِأَمْرٍ نَدْخُلُ بِهِ الجَنَّةَ وَنُخْبِرُ بِهِ مَنْ وَرَاءَنَا، فَسَأَلُوا عَنِ الأَشْرِبَةِ، فَنَهَاهُمْ عَنْ أَرْبَعٍ، وَأَمَرَهُمْ بِأَرْبَعٍ، أَمَرَهُمْ: بِالإِيمَانِ بِاللَّهِ، قَالَ: «هَلْ تَدْرُونَ مَا الإِيمَانُ بِاللَّهِ؟»، قَالُوا: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «شَهَادَةُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامُ الصَّلاَةِ، وَإِيتَاءُ الزَّكَاةِ، – وَأَظُنُّ فِيهِ صِيَامُ رَمَضَانَ – وَتُؤْتُوا مِنَ المَغَانِمِ الخُمُسَ» وَنَهَاهُمْ عَنْ: الدُّبَّاءِ، وَالحَنْتَمِ، وَالمُزَفَّتِ، وَالنَّقِيرِ، وَرُبَّمَا قَالَ: «المُقَيَّرِ»، قَالَ: «احْفَظُوهُنَّ وَأَبْلِغُوهُنَّ مَنْ وَرَاءَكُمْ»


Next Page » « Previous Page