Category: புஹாரி

Bukhari

Bukhari-7253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7253. அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

நான் அபூ தல்ஹா அல்அன்சாரி(ரலி), அபூ உபைதா இப்னு அல்ஜர்ராஹ்(ரலி), உபை இப்னு கஅப்(ரலி) ஆகியோருககு பேரீச்சங்காய்களால் தயாரித்த மதுவை ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அது பேரீச்சங்கனியாலும் தயாரிக்கப்பட்டு வந்தது. அப்போது ஒருவர் வந்து, ‘மது தடை செய்யப்பட்டுவிட்டது’ என்றார். உடனே அபூ தல்ஹா(ரலி) அவர்கள், ‘அனஸே! எழுந்து சென்று இந்த மண் பாத்திரங்கள் உடைத்தெறியும்’ என்றார்கள். நான் எழுந்து சென்று (மது ஊற்றிவைக்கும்) எங்களுடைய சாடியொன்றை எடுத்து அதன் அடிப்பாகத்தில் அடித்தேன். அது உடைந்தது.11

Book :95


«كُنْتُ أَسْقِي أَبَا طَلْحَةَ الأَنْصَارِيَّ، وَأَبَا عُبَيْدَةَ بْنَ الجَرَّاحِ، وَأُبَيَّ بْنَ كَعْبٍ شَرَابًا مِنْ فَضِيخٍ – وَهُوَ تَمْرٌ -»، فَجَاءَهُمْ آتٍ فَقَالَ: إِنَّ الخَمْرَ قَدْ حُرِّمَتْ، فَقَالَ أَبُو طَلْحَةَ: يَا أَنَسُ، قُمْ إِلَى هَذِهِ الجِرَارِ فَاكْسِرْهَا، قَالَ أَنَسٌ: «فَقُمْتُ إِلَى مِهْرَاسٍ لَنَا فَضَرَبْتُهَا بِأَسْفَلِهِ حَتَّى انْكَسَرَتْ»


Bukhari-7252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7252. பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்தபோது பைத்துல் மக்தீஸ் (நகரிலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா இறையில்லத்தை) நோக்கி பதினாறு அல்லது பதினேழு மாதங்கள் தொழுதார்கள். (தொழுகையில்) கஅபாவை நோக்கி முகம் திருப்புவதையே அவர்கள் விரும்பிவந்தார்கள். எனவே, அல்லாஹ் ‘(நபியே!) உம்முடைய முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம்; எனவே, நீர் விரும்பும் கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் (இதோ) உம்மைத் திடமாக திருப்பி விடுகிறோம்’ எனும் (திருக்குர்ஆன் 02:144 வது) வசனத்தை அருளினான். இவ்விதம் (தொழுகையிலிருந்தபோதே) கஅபாவை நோக்கி முகம் திருப்பப்பட்டார்கள். அந்த அஸ்ர்தொழுகையில் நபி(ஸல்) அவர்களுடன் ஒருவர் தொழுதார். அவர் (பள்ளிவாசலிலிருந்து) வெளியேறி அன்சாரிகளில் ஒரு குலத்தாரைக் கடந்து சென்றபோது, ‘நபி(ஸல்) அவர்களுடன் தாம் தொழுததாகவும், (தொழுகையிலேயே) அவர்கள் முகம் கஅபாவை நோக்கித் திருப்பப்பட்டதாகவும் தாம் சாட்சியம் அளிப்பதாகச் சொன்னார். உடனே அம்மக்கள் அஸ்ர் தொழுகையில் ருகூஉ செய்து கொண்டிருந்த நிலையில் அப்படியே கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.10

لَمَّا قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَدِينَةَ صَلَّى نَحْوَ بَيْتِ المَقْدِسِ سِتَّةَ عَشَرَ أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا، وَكَانَ يُحِبُّ أَنْ يُوَجَّهَ إِلَى الكَعْبَةِ، فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى: {قَدْ نَرَى تَقَلُّبَ وَجْهِكَ فِي السَّمَاءِ فَلَنُوَلِّيَنَّكَ قِبْلَةً تَرْضَاهَا} [البقرة: 144]، فَوُجِّهَ نَحْوَ الكَعْبَةِ، وَصَلَّى مَعَهُ رَجُلٌ العَصْرَ “، ثُمَّ خَرَجَ فَمَرَّ عَلَى قَوْمٍ مِنَ الأَنْصَارِ، فَقَالَ: هُوَ يَشْهَدُ أَنَّهُ صَلَّى مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَنَّهُ  قَدْ وُجِّهَ إِلَى الكَعْبَةِ، فَانْحَرَفُوا وَهُمْ رُكُوعٌ فِي صَلاَةِ العَصْرِ


Bukhari-7251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7251. அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.

மக்கள் ‘குபா’ எனுமிடத்தில் தொழுகையில் இருந்தபோது ஒருவர் வந்து, ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சென்ற இரவு குர்ஆன் (வசனம் ஒன்று) அருளப்பட்டுள்ளது. (மக்காவிலுள்ள இறையில்லம்) கஅபாவை (தொழுகையில்) முன்னோக்கும் படி அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. எனவே, (மக்களே) கஅபாவையே நீங்களும் முன்னோக்கித் தொழுங்கள்’ என்றார். அப்போது மக்களின் முகம் (மஸ்ஜிதுல் அக்ஸா அமைந்திருந்த) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. (இந்த அறிவிப்பைக் கேட்ட) உடனே அவர்கள் அப்படியே சுற்றி கஅபாவை நோக்கித் திரும்பினார்கள்.9

Book :95


بَيْنَا النَّاسُ بِقُبَاءٍ فِي صَلاَةِ الصُّبْحِ، إِذْ جَاءَهُمْ آتٍ فَقَالَ: «إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ قُرْآنٌ وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ الكَعْبَةَ فَاسْتَقْبِلُوهَا»، وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى الشَّأْمِ فَاسْتَدَارُوا إِلَى الكَعْبَةِ


Bukhari-7250

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7250. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (லுஹ்ர் அல்லது அஸ்ர் தொழுகையில்) இரண்டு ரக்அத்கள் தொழுதவுடன் (சலாம் கொடுத்துத்) திரும்பிவிட்டார்கள். உடனே துல்யதைன்(ரலி) அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! தொழுகையின் ரக்அத் குறைக்கப்பட்டுவிட்டதா?’ என்று கேட்டார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), ‘துல்யதைன் கூறுவது உண்மையா?’ என்று கேட்டார்கள். மக்கள், ‘ஆம்’ என்றார்கள். உடனே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் எழுந்து பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு சலாம் கொடுத்தார்கள். பிறகு, ‘அல்லாஹு அக்பர்’ என்று சொல்லித் தம் (வழக்கமான) சஜ்தாவைப் போன்று சஜ்தாச் செய்துவிட்டு பிறகு தலையை உயர்த்தினார்கள்.8

Book :95


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ انْصَرَفَ مِنَ اثْنَتَيْنِ، فَقَالَ لَهُ ذُو اليَدَيْنِ: أَقَصُرَتِ الصَّلاَةُ يَا رَسُولَ اللَّهِ، أَمْ نَسِيتَ؟ فَقَالَ: «أَصَدَقَ ذُو اليَدَيْنِ؟»، فَقَالَ النَّاسُ: نَعَمْ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَصَلَّى رَكْعَتَيْنِ أُخْرَيَيْنِ، ثُمَّ سَلَّمَ، ثُمَّ كَبَّرَ، ثُمَّ سَجَدَ مِثْلَ سُجُودِهِ أَوْ أَطْوَلَ، ثُمَّ رَفَعَ، ثُمَّ كَبَّرَ فَسَجَدَ مِثْلَ سُجُودِهِ، ثُمَّ رَفَعَ


Bukhari-7249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7249. அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

(ஒரு நாள்) நபி(ஸல்) அவர்கள் லுஹ்ர் தொழுகையை எங்களுக்கு ஐந்து ரக்அத்களாகத் தொழுகை நடத்தினார்கள். அப்போது அவர்களிடம், ‘தொழுகையின் (ரக்அத்) அதிகரிக்கப்பட்டுவிட்டதா?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘என்ன அது?’ என்று (வியப்புடன்) கேட்டார்கள். மக்கள், ‘ஐந்து ரக்அத்கள் தொழுதுவிட்டீர்களே?’ என்று கூறினார்கள். உடனே நபி(ஸல்) அவர்கள் சலாம் கொடுத்த பின்பு (மறதிக்குரிய) சிரவணக்கங்கள் (சஜ்தா சஹ்வு) இரண்டு முறை செய்தார்கள்.7

Book :95


صَلَّى بِنَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ خَمْسًا، فَقِيلَ: أَزِيدَ فِي الصَّلاَةِ؟ قَالَ: «وَمَا ذَاكَ؟»، قَالُوا: صَلَّيْتَ خَمْسًا، فَسَجَدَ سَجْدَتَيْنِ بَعْدَ مَا سَلَّمَ


Bukhari-7248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7248. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

பிலால் (ரமளான் மாதத்தின்) இரவில் முன்னறிவிப்புக்காகப் பாங்கு) அழைப்புக் கொடுப்பார். எனவே, அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஃபஜ்ர் தொழுகைக்கு) அழைக்கிற வரை உண்ணுங்கள்; பருகுங்கள். என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.6

Book :95


«إِنَّ بِلاَلًا يُنَادِي بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُنَادِيَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»


Bukhari-7247

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7247. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

நீங்கள் (நோன்பின் போது) சஹ்ர் உணவு உண்பதிலிருந்து பிலாலின் தொழுகை அறிவிப்பு (பாங்கு) உங்களைத் தடுத்துவிட வேண்டாம். ஏனெனில், இரவில் அவர் தொழுகை அறிவிப்புச் செய்வது’ அல்லது ‘அவர் அழைப்பது’ உங்களில் (இரவுத்) தொழுகையில் ஈடுபட்டிருப்போர் திரும்புவதற்காகவும் உறங்குவோருக்கு விழிப்பூட்டுவதற்காகவும் தான். ஃபஜ்ர் (நேரம்) என்பது இவ்வாறு (அகலவாட்டில் அடிவானில் மட்டும்) தென்படும் வெளிச்சமன்று. (நீளவாட்டில் எல்லாத் திசைகளிலும் பரவிவரும் வெளிச்சமே ஃபஜ்ருக்கு அடையாளமாகும்.)

அறிவிப்பாளர் யஹ்யா இப்னு ஸயீத் அல்கத்தான்(ரஹ்) அவர்கள் தம் இரண்டு கைகளையும் ஒன்று சேர்த்து, இவ்வாறு வெளிப்படுத்தி, தம் இரண்டு சுட்டு விரல்களையும் நீட்டிக் காட்டினார்கள்.5

Book :95


«لاَ يَمْنَعَنَّ أَحَدَكُمْ أَذَانُ بِلاَلٍ مِنْ سَحُورِهِ، فَإِنَّهُ يُؤَذِّنُ – أَوْ قَالَ يُنَادِي – لِيَرْجِعَ قَائِمَكُمْ، وَيُنَبِّهَ نَائِمَكُمْ، وَلَيْسَ الفَجْرُ أَنْ يَقُولَ هَكَذَا – وَجَمَعَ يَحْيَى كَفَّيْهِ – حَتَّى يَقُولَ هَكَذَا» وَمَدَّ يَحْيَى إِصْبَعَيْهِ السَّبَّابَتَيْنِ


Bukhari-7246

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 1 தொழுகை அறிவிப்பு (பாங்கு), தொழுகை, நோன்பு, பாகப் பிரிவினை மற்றும் இதரச் சட்டங்கள் ஆகியவற்றில் வாய்மையான ஒருவரின் செய்தியை அனுமதிப்பது தொடர்பாக வந்துள்ளவை.2 அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களில் ஒவ்வொரு குழுவினரிலிருந்தும் சிலர் புறப்பட்டுச் சென்று, மார்க்கத்தைக் கற்றுத் திரும்பிவந்து, தம் சமூகத்தாருக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்ய வேண்டாமா? இதைக் கொண்டே அவர்கள் தங்களை(த் தீமையிலிருந்து) பாதுகாத்துக்கொள்வார்கள். (9:122)3 ஒரு தனிமனிதர்கூட சிலர்’ (தாயிஃபத்) என அழைக்கப்படுவதுண்டு. இறைநம்பிக்கை யாளர்களில் இரு குழுவினர் சண்டையிட்டுக் கொண்டால் அவர்களிடையே சமாதானம் செய்துவையுங்கள் என அல்லாஹ் கூறுகின்றான் (49:9). (இங்கு குழுவினர்’ என்பதைக் குறிக்க தாயிஃபத்’ எனும் சொல் மூலத்தில் ஆளப்பட்டுள்ளது.) இரு தனி நபர்கள் சண்டையிட்டுக்கொள்வதும் இவ்வசனத்தின் பொருளில் அடங்கும். மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இறைநம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்கமாக விசாரித்துக் கொள்ளுங்கள் (49:6). (தனிநபர் தகவலுக்கு மரியாதை இல்லாயானால்,) நபி (ஸல்)

أَتَيْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ شَبَبَةٌ مُتَقَارِبُونَ، فَأَقَمْنَا عِنْدَهُ عِشْرِينَ لَيْلَةً، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفِيقًا، فَلَمَّا ظَنَّ أَنَّا قَدِ اشْتَهَيْنَا أَهْلَنَا – أَوْ قَدِ اشْتَقْنَا – سَأَلَنَا عَمَّنْ تَرَكْنَا بَعْدَنَا فَأَخْبَرْنَاهُ ، قَالَ: «ارْجِعُوا إِلَى أَهْلِيكُمْ، فَأَقِيمُوا فِيهِمْ، وَعَلِّمُوهُمْ وَمُرُوهُمْ، – وَذَكَرَ أَشْيَاءَ أَحْفَظُهَا أَوْ لاَ أَحْفَظُهَا، – وَصَلُّوا كَمَا رَأَيْتُمُونِي أُصَلِّي، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ لَكُمْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْبَرُكُمْ»


Bukhari-7245

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7245. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஹிஜ்ரத் மட்டும் நடந்திராவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்கள் ஒரு ‘பள்ளத்தாக்கில்’ அல்லது ‘கணவாயில்’ நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் பள்ளத்தாக்கிலும் கணவாயிலும்தான் நடந்து செல்வேன்.

என அப்துல்லாஹ் இப்னு ஸைத்(ரலி) அறிவித்தார்.22

இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book :94


«لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا أَوْ شِعْبًا لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ وَشِعْبَهَا»


Bukhari-7244

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7244. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’

ஹிஜ்ரத் (மார்க்கத்திற்காகப் பிறந்தகத்தைத் துறந்து செல்வது) மட்டும் நடைபெறாமல் இருந்திருந்தால் நான் அன்சாரிகளில் ஒருவனாயிருந்திருப்பேன். மக்கள் ஒரு பள்ளத்தாக்கிலும் அன்சாரிகள் ‘வேறொரு பள்ளத்தாக்கிலும்’ அல்லது ‘மலைக் கணவாயிலும்’ நடந்து சென்றால் நான் அன்சாரிகளின் ‘பள்ளத்தாக்கு’ அல்லது ‘கணவாயில்’ தான் நடந்து செல்வேன்.

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.21

Book :94


«لَوْلاَ الهِجْرَةُ لَكُنْتُ امْرَأً مِنَ الأَنْصَارِ، وَلَوْ سَلَكَ النَّاسُ وَادِيًا وَسَلَكَتِ الأَنْصَارُ وَادِيًا – أَوْ شِعْبًا – لَسَلَكْتُ وَادِيَ الأَنْصَارِ، – أَوْ شِعْبَ الأَنْصَارِ -»


Next Page » « Previous Page