7243. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் (ஒருமுறை) நபி (ஸல்) அவர்களிடம், (புனித கஅபாவை ஒட்டியுள்ள ஹத்தீம் எனும்) வளைந்த சுவரைப் பற்றி, “இது கஅபாவில் சேர்ந்ததா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம்” என்று பதிலளித்தார்கள். நான், “அப்படியானால் கஅபாவுடன் இதை அவர்கள் இணைக்காததற்குக் காரணமென்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உன் (குறைஷி) சமூகத்தாருக்குப் பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது” என்று பதிலளித்தார்கள். நான், “கஅபாவின் வாயிலை உயரமாக வைத்திருப்பதன் காரணம் என்ன?” என்று கேட்டேன்.
நபி (ஸல்) அவர்கள், “தாம் விரும்பியவர்களை உள்ளே அனுமதிப்பதற்காகவும் தாம் விரும்பாதவர்களை (உள்ளே நுழைய விடாமல்) தடுத்துவிடுவதற்காகவும் தான் உன் சமூகத்தார் இவ்வாறு செய்தார்கள். உன் சமுதாயத்தார் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாயிருப்பதால், அவர்களின் மனதில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால், நான் இந்த வளைந்த சுவரை கஅபாவுடன் இணைத்து அதன் வாயிலை(க் கீழிறக்கி) பூமியுடன் சேர்ந்தாற்போன்று ஆக்கியிருப்பேன்” என்று சொன்னார்கள்.20
அத்தியாயம் : 94
سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الجَدْرِ، أَمِنَ البَيْتِ هُوَ؟ قَالَ: «نَعَمْ»، قُلْتُ: فَمَا لَهُمْ لَمْ يُدْخِلُوهُ فِي البَيْتِ؟ قَالَ: «إِنَّ قَوْمَكِ قَصَّرَتْ بِهِمُ النَّفَقَةُ»، قُلْتُ: فَمَا شَأْنُ بَابِهِ مُرْتَفِعًا، قَالَ: «فَعَلَ ذَاكِ قَوْمُكِ لِيُدْخِلُوا مَنْ شَاءُوا، وَيَمْنَعُوا مَنْ شَاءُوا، وَلَوْلاَ أَنَّ قَوْمَكِ حَدِيثٌ عَهْدُهُمْ بِالْجَاهِلِيَّةِ فَأَخَافُ أَنْ تُنْكِرَ قُلُوبُهُمْ، أَنْ أُدْخِلَ الجَدْرَ فِي البَيْتِ، وَأَنْ أَلْصِقْ بَابَهُ فِي الأَرْضِ»
சமீப விமர்சனங்கள்