பாடம் : 6 விரும்பத்தகாத எதிர்பார்ப்பு அல்லாஹ் கூறுகின்றான்: மேலும், எதன் மூலம் உங்களில் சிலரை வேறு சிலரைவிட அல்லாஹ் மேன்மையாக்கி யிருக்கின்றானோ, அதனை (அடைய வேண்டுமென்று) பேராசைகொள்ளாதீர்கள். ஆண்களுக்கு, அவர்கள் தேடியவற்றில் உரிய பங்குண்டு; (அவ்வாறே) பெண்களுக்கும், அவர்கள் தேடியவற்றில் உரிய பங்குண்டு. எனவே, அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களையும் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (4:32)
7233. அனஸ்(ரலி) அறிவித்தார்.
‘இறப்பை (எதிர்பார்த்து) ஆசைப்படாதீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றிருக்காவிட்டால் (இறப்பின் மீது) ஆசைகொண்டிருப்பேன்.
என நள்ர் இப்னு அனஸ்(ரஹ்) அறிவித்தார்.
Book : 94
لَوْلاَ أَنِّي سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لاَ تَتَمَنَّوُا المَوْتَ» لَتَمَنَّيْتُ
சமீப விமர்சனங்கள்