பாடம் : 9 சிறைக் கைதிகள், குழப்பவாதிகள் மற்றும் இணைவைப்போர் காணும் கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: (நம் தூதர்) யூசுஃபுடன் இரு இளைஞர் களும் சிறைக்குள் நுழைந்தனர். அவ்விருவரில் ஒருவர், நான் திராட்சை மது பிழிவதாக ஒரு கனவு கண்டேன் என்று கூறினார். மற்றவர், நான் என் தலைமீது ரொட்டியைச் சுமப்ப தாகவும், அதிலிருந்து பறவைகள் தின்று கொண்டிருப்பதாகவும் கனவு கண்டேன்என்று கூறினார். (பின் இருவரும் யூசுஃபே!) எங்களுக்கு இவற்றின் விளக்கத்தை அறிவிப்பீ ராக;மெய்யாக நாங்கள் உம்மை (ஞானமிக்க) நல்ல மனிதர்களில் ஒருவராகக் காண்கிறோம் (என்று கூறினார்கள்). அதற்கு அவர் கூறினார்: (இங்கு) உங்களிருவருக்கும் வழங்கப்படும் உணவு உங்களிடம் வ(ந்து சே)ருவதற்கு முன்பே உங்களது கனவின் விளக்கத்தை உங்களுக்கு அறிவித்துவிடுவேன். என் இறைவன் எனக்குக் கற்றுக்கொடுத்துள்ள அறிவுகளில் இதுவும் ஒன்றாகும். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களும், மறுமையை நிராகரிப்ப வர்களுமான சமூகத்தாரின் மார்க்கத்தை நான் நிச்சயமாக விட்டுவிட்டேன். நான் என் மூதாதையர்களான இப்ராஹீம், இஸ்ஹாக், யஅகூப் ஆகியோரின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறேன். அல்லாஹ்வுக்கு எதையும் நாங்கள் இணைவைப்பது எங்களுக்குத் தகுமானதன்று. இது எங்கள் மீதும் (இதர) மக்கள் «لَوْ لَبِثْتُ فِي السِّجْنِ مَا لَبِثَ يُوسُفُ، ثُمَّ أَتَانِي الدَّاعِي لَأَجَبْتُهُ»
Category: புஹாரி
Bukhari
Bukhari-6991
பாடம் : 6
(இறைத்தூதர்) யூசுஃப் (அலை) அவர்கள் கண்ட கனவு. அல்லாஹ் கூறுகின்றான்: யூசுஃப் தம் தந்தையாரிடம், என் அருமைத் தந்தையே! பதினோரு நட்சத்திரங் களும், சூரியனும்,சந்திரனும் – (இவை யாவும்) எனக்குச் சிரம்பணிவதை மெய்யாகவே (கனவில்) நான் கண்டேன் என்று கூறிய பொழுது, என் அருமை மகனே! உனது கனவைப் பற்றி உன் சகோதரர்களிடம் எடுத்துரைக்க வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு (எதிராக) சதி செய்வார்கள்; ஏனெனில், (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக் கின்றான். இவ்வாறே உம் இறைவன் உம்மைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உமக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உம்மீதும், யஅகூபின் சந்ததியார் மீதும் முழுமையாகச் சொரிவான். இதற்கு முன்னர் உம்முடைய மூதாதையராகிய இப்ராஹீம், இஸ்ஹாக் ஆகியோர் மீதும் தன் அருளை அவன் முழுமையாகச் சொரிந்ததைப் போன்று. நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையோனுமாய் இருக்கின் றான். (12:4-6) மேலும், அல்லாஹ் கூறுகின்றான்: இன்னும், அவர் தம் தாய் தந்தையரை அரியாசனத்தின் மீது உயர்த்தி (அமர்த்தி)னார்; அவர்கள் (எல்லாரும்) அவருக்கு (மரியாதை செலுத்தியவர்களாகச்) أَنَّ أُنَاسًا أُرُوا لَيْلَةَ القَدْرِ فِي السَّبْعِ الأَوَاخِرِ، وَأَنَّ أُنَاسًا أُرُوا أَنَّهَا فِي العَشْرِ الأَوَاخِرِ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «التَمِسُوهَا فِي السَّبْعِ الأَوَاخِرِ»
Bukhari-6990
பாடம்: 5
நற்செய்தி(கூறும் கனவு)கள்.
6990. அபூஹுரைரா (ரலி) அறிவித்தார்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நற்செய்தி கூறுகின்றவை (‘முபஷ்ஷிராத்’) தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை’ என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் ‘நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?’ என்று வினவினர். நபி (ஸல்) அவர்கள் ‘நல்ல (உண்மையான) கனவு’ என்று விடையளித்தார்கள்.
அத்தியாயம்: 91
«لَمْ يَبْقَ مِنَ النُّبُوَّةِ إِلَّا المُبَشِّرَاتُ» قَالُوا: وَمَا المُبَشِّرَاتُ؟ قَالَ: «الرُّؤْيَا الصَّالِحَةُ»
Bukhari-6989
6989. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
Book :91
«الرُّؤْيَا الصَّالِحَةُ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
Bukhari-6988
6988. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாக அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் வந்துள்ளது.
Book :91
«رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
Bukhari-6987
6987. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.5
என உபாதா இப்னு அஸ்ஸாமித் (ரலி) அறிவித்தார்.
Book :91
«رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
Bukhari-6986
பாடம் : 4
நல்ல (உண்மையான) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
6986. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும்; கெட்ட (பொய்க்) கனவுகள் ஷைத்தானிடமிருந்து வருவதாகும். எனவே, ஒருவர் கெட்ட கனவு கண்டால் அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) அவர் பாதுகாப்புக் கோரட்டும். தம் இடப் பக்கத்தில் துப்பட்டும். ஏனெனில், அப்போது அவருக்கு அது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ கத்தாதா (ரலி) அறிவித்தார்.
மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இதே ஹதீஸ் வந்துள்ளது.
Book : 91
«الرُّؤْيَا الصَّالِحَةُ مِنَ اللَّهِ، وَالحُلْمُ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا حَلَمَ فَلْيَتَعَوَّذْ مِنْهُ، وَلْيَبْصُقْ عَنْ شِمَالِهِ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ»
Bukhari-6985
6985. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும். அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது.
என அபூ ஸயீத் அல்குத்ரீ (ரலி) அறிவித்தார்.
Book :91
«إِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يُحِبُّهَا، فَإِنَّمَا هِيَ مِنَ اللَّهِ، فَلْيَحْمَدِ اللَّهَ عَلَيْهَا وَلْيُحَدِّثْ بِهَا، وَإِذَا رَأَى غَيْرَ ذَلِكَ مِمَّا يَكْرَهُ، فَإِنَّمَا هِيَ مِنَ الشَّيْطَانِ، فَلْيَسْتَعِذْ مِنْ شَرِّهَا، وَلاَ يَذْكُرْهَا لِأَحَدٍ، فَإِنَّهَا لاَ تَضُرُّهُ»
Bukhari-6984
பாடம் : 3
கனவு அல்லாஹ்வாலேயே தோன்றுகிறது.
6984. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
என அபூ கத்தாதா அல்அன்சாரி (ரலி) அறிவித்தார்.4
Book : 91
«الرُّؤْيَا الصَّادِقَةُ مِنَ اللَّهِ، وَالحُلْمُ مِنَ الشَّيْطَانِ»
Bukhari-6983
பாடம் : 2
நல்லோரின் கனவு
அல்லாஹ் கூறுகின்றான்: நிச்சயமாக அல்லாஹ் தன் தூதருக்கு (அவர் கண்ட) கனவை நனவாக்கிவிட்டான்; அல்லாஹ் நாடினால்,நிச்சயமாக நீங்கள் மஸ்ஜிதுல் ஹராமில் அச்சமற்றவர்களாகவும் தலையை மழித்துக் கொண்டவர்களாகவும் (அல்லது) கத்தரித்துக் கொண்டவர்களாகவும் நுழைவீர்கள். (அப்போது எவருக்கும்) நீங்கள் பயப்படமாட்டீர்கள். ஏனெனில், நீங்கள் அறியாதிருப்பதை அவன் அறிகிறான். (அதன் பின்னர்) இதையன்றி நெருக்கமானதொரு வெற்றியையும் (உங்களுக்கு) அமைத்துக் கொடுத்தான். (48:27)
6983. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். 3
என அனஸ் இப்னு மாலிக் (ரலி) அறிவித்தார்.
Book : 91
«الرُّؤْيَا الحَسَنَةُ، مِنَ الرَّجُلِ الصَّالِحِ، جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»
சமீப விமர்சனங்கள்