Category: புஹாரி

Bukhari

Bukhari-6870

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6870. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

இறைவனுக்கு இணைகற்பிப்பதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது பொய்ச் சத்தியம் செய்வதும்’ பெரும் பாவங்களாகும்.

மற்றோர் அறிவிப்பில், ‘இறைவனுக்கு இணைகற்பிப்பதும் பொய்ச் சத்தியம் செய்வதும் ‘தாய் தந்தையரைப் புண்படுத்துவதும்’ அல்லது ‘மனிதனைக் கொலை செய்வதும்’ பெரும் பாவங்களாகும்’ என்று வந்துள்ளது.

இந்த ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார்.9

(மேற்காணும் இரண்டு அறிவிப்புகளில் இவற்றின் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா (ரஹ்) அவர்களே ஐயப்பாட்டுடன் அறிவித்தார்கள்.

Book :87


الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، – أَوْ قَالَ: – اليَمِينُ الغَمُوسُ ” شَكَّ شُعْبَةُ وَقَالَ مُعَاذٌ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: ” الكَبَائِرُ: الإِشْرَاكُ بِاللَّهِ، وَاليَمِينُ الغَمُوسُ، وَعُقُوقُ الوَالِدَيْنِ، أَوْ قَالَ: وَقَتْلُ النَّفْسِ


Bukhari-6869

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6869. ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், ‘மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்’ என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) ‘எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)’ என்றார்கள்.8

இந்த ஹதீஸை, நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.

Book :87


قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الوَدَاعِ: «اسْتَنْصِتِ النَّاسَ، لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-6868

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6868. (நபி (ஸல்) அவர்கள் தமது ‘விடைபெறும்’ ஹஜ் உரையில்) எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக் கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறி விடாதீர்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 87


«لاَ تَرْجِعُوا بَعْدِي كُفَّارًا، يَضْرِبُ بَعْضُكُمْ رِقَابَ بَعْضٍ»


Bukhari-6867

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

ஓர் உயிரை வாழவைப்பவன் மக்கள் அனைவரையும் வாழவைப்பவனைப் போன்றவனாவன் எனும் (5:32ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அதாவது) முறையின்றி ஓர் உயிரைக் கொலை செய்வதிலிருந்து யார் விலகிக்கொள்கின்றாரோ அவர் மனிதர்கள் அனைவரையும் வாழவைத்தவரைப் போன்றவர் ஆவார்.

6867. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

உலகில் அநியாயமாக ஒரு கொலை நடைபெறும்போது அந்தக் கொலையின் பாவத்தில் (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களின் முதலாவது மகனுக்கும் ஒரு பங்கு இருக்கவே செய்யும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.6

Book : 87


«لاَ تُقْتَلُ نَفْسٌ إِلَّا كَانَ عَلَى ابْنِ آدَمَ الأَوَّلِ كِفْلٌ مِنْهَا»


Bukhari-6866

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6866. இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார்.

நபி (ஸல்) அவர்கள் மிக்தாத் (ரலி) அவர்களிடம், ‘இறைமறுப்பாளர்களான சமூகத்தாரிடையே தம் இறைநம்பிக்கையை (மனத்திற்குள்) மறைத்து வைத்துக் கொண்டிருந்த ஒருவர் தம் இறைநம்பிக்கையை வெளிப்படுத்தும் தருவாயில் அவரை நீர் கொன்றுவிட்டீரே! அவ்வாறாயின், இதற்கு முன்னர் நீரும் இவ்வாறுதானே மக்காவில் உம்முடைய இறைநம்பிக்கையை (மனத்தில்) மறைத்து வைத்துக்கொண்டிருந்தீர்?’ என்று கேட்டார்கள்.5

Book :87


قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْمِقْدَادِ: «إِذَا كَانَ رَجُلٌ مُؤْمِنٌ يُخْفِي إِيمَانَهُ مَعَ قَوْمٍ كُفَّارٍ، فَأَظْهَرَ إِيمَانَهُ فَقَتَلْتَهُ؟ فَكَذَلِكَ كُنْتَ أَنْتَ تُخْفِي إِيمَانَكَ بِمَكَّةَ مِنْ قَبْلُ»


Bukhari-6865

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6865. உபைதுல்லாஹ் இப்னு அதீ (ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

பனூ ஸுஹ்ரா குலத்தாரின் ஒப்பந்த நண்பரும் நபி (ஸல்) அவர்களுடன் பத்ருப் போரில் பங்கெடுத்தவருமான மிக்தாத் இப்னு அம்ர் அல்கிந்தீ (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்,) ‘இறைத்தூதர் அவர்களே! இறைமறுப்பாளன் ஒருவனை நான் சந்தித்து நாங்கள் இருவரும் சண்டையிட்டோம். அப்போது அவன் என்னுடைய கை ஒன்றை வாளால் வெட்டித் துண்டித்துவிட்டான். பிறகு அவன் (என்னை விட்டுப்போய்) ஒரு மரத்தில் அபயம் தேடி (ஒளிந்து) கொண்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்(து இஸ்லாத்தில் இணைந்)தேன்’ என்று சொன்னான். அவன் இதைச் சொன்னதற்குப் பிறகு நான் அவனைக் கொல்லலாமா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘(வேண்டாம்.) அவனைக் கொல்லாதே’ என்று பதிலளித்தார்கள். அதற்கு மிக்தாத்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! அவன் என் கை ஒன்றைத் துண்டித்துவிட்டான். அதைத் துண்டித்த பிறகு தானே இதைச் சொன்னான்!’ என்று கேட்க, இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘அவனை நீ கொல்லாதே! அவ்வாறு நீ அவனைக் கொன்றுவிட்டால் அவனைக் கொல்வதற்கு முன்பு நீயிருந்த (குற்றமற்ற) நிலைக்கு அவன் வந்துவிடுவான்.

أَنَّ المِقْدَادَ بْنَ عَمْرٍو الكِنْدِيَّ، حَلِيفَ بَنِي زُهْرَةَ، حَدَّثَهُ، وَكَانَ شَهِدَ بَدْرًا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنِّي لَقِيتُ كَافِرًا فَاقْتَتَلْنَا، فَضَرَبَ يَدِي بِالسَّيْفِ فَقَطَعَهَا، ثُمَّ لاَذَ مِنِّي بِشَجَرَةٍ، وَقَالَ: أَسْلَمْتُ لِلَّهِ، آقْتُلُهُ بَعْدَ أَنْ قَالَهَا؟ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَقْتُلْهُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ، فَإِنَّهُ طَرَحَ إِحْدَى يَدَيَّ، ثُمَّ قَالَ ذَلِكَ بَعْدَ مَا قَطَعَهَا، آقْتُلُهُ؟ قَالَ: «لاَ تَقْتُلْهُ، فَإِنْ قَتَلْتَهُ فَإِنَّهُ بِمَنْزِلَتِكَ قَبْلَ أَنْ تَقْتُلَهُ، وَأَنْتَ بِمَنْزِلَتِهِ قَبْلَ أَنْ يَقُولَ كَلِمَتَهُ الَّتِي قَالَ»


Bukhari-6864

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6864. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில் மனித உரிமைகள் தொடர்பான வழக்குகளில்) முதல்முதலாக மனிதர்களிடையே வழங்கப்படும் தீர்ப்பு, கொலைகள் தொடர்பானதாகத் தான் இருக்கும்.

என அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார்.

Book :87


أَوَّلُ مَا يُقْضَى بَيْنَ النَّاسِ فِي الدِّمَاءِ


Bukhari-6863

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6863. அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

புனிதமிக்கதாகக் கருதப்படும் (மனித) உயிரை (மார்க்க ரீதியான) அனுமதியின்றி கொலை செய்வதானது, விழுந்தால் வெளிவர முடியாத நாசப் படுகுழிகளில் ஒன்றாகும்.

என ஸயீத் இப்னு அம்ர் (ரஹ்) அறிவித்தார்.

Book :87


«إِنَّ مِنْ وَرَطَاتِ الأُمُورِ، الَّتِي لاَ مَخْرَجَ لِمَنْ أَوْقَعَ نَفْسَهُ فِيهَا، سَفْكَ الدَّمِ الحَرَامِ بِغَيْرِ حِلِّهِ»


Bukhari-6862

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

6862. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்’

புனிதம் வாய்ந்ததாகக் கருதப்படும் (மனித) உயிர் எதனையும் கொலை செய்யாமல் இருக்கும் வரை ஓர் இறைநம்பிக்கையாளர் தம் மார்க்கத்தின் தாராள குணத்தைக் கண்ட வண்ணமிருப்பார்.

என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவித்தார்.

Book :87


«لَنْ يَزَالَ المُؤْمِنُ فِي فُسْحَةٍ مِنْ دِينِهِ، مَا لَمْ يُصِبْ دَمًا حَرَامًا»


Bukhari-6861

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

Next Page » « Previous Page