Category: ஹதீஸ் கலை

ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகல்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸில் ஏற்படும் இடைச்செருகல் பற்றிய விளக்கம்: ஹதீஸ் வகைகளில் “முத்ரஜ்-இடைச்செருகல்” என்ற ஒரு வகை உள்ளது. அதாவது நபி (ஸல்) அவர்கள் சொல்லாத வார்த்தையோ அல்லது வாக்கியமோ அவர்கள் சொன்னது போன்று கலந்துவிடும் செய்திக்கு முத்ரஜ் என்று கூறப்படும். இவ்வாறே அறிவிப்பாளரின் தவறின் காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமாக அறிவிப்பாளர்தொடரில் ஏற்படும் கூடுதல் குறைவும், அறிவிப்பாளர்தொடருக்கு சம்பந்தமில்லாத செய்தி கலப்பதும் முத்ரஜ் ஆகும்....

ஹதீஸ்துறையின் முக்கிய அம்சங்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸ்துறையும், ஃபிக்ஹ் எனும் சட்டதுறையும். வலீத் பின் இப்ராஹீம் என்பவர் புகாரீ இமாமிடம் ஹதீஸ்துறையில் தான் ஈடுபடுவது பற்றி கேட்டபோது புகாரீ அவர்கள் கூறிய நான்கு, நான்கு அம்சங்கள்: 16*4 = 64 விசயங்கள். இதை சரியாக கடைபிடிக்கமுடியாவிட்டால் ஃபிக்ஹ் எனும் மார்க்க சட்டதுறையில் ஈடுபடுமாறு புகாரீ இமாம் கூறிவிட்டார். இந்த சம்பவம் சில ஹதீஸ்கலை நூல்களில் கூறப்பட்டுள்ளது. الإلماع إلى معرفة أصول...

அல்அர்பஈன் நவவீ

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ நவவீ இமாம் அவர்கள் தொகுத்துள்ள அல்அர்பஈன் எனும் 42 முக்கிய ஹதீஸ்கள். இத்துடன் இப்னு ரஜப் அவர்கள் தனது ஜாமிஉல் உலூமி வல்ஹிகம் எனும் நூலில் இணைத்துள்ள 8 ஹதீஸ்கள் சேர்த்து 50 ஹதீஸ்களின் தொகுப்பு: 1 . ஹதீஸ்: புகாரி-1 . 2 . ஹதீஸ்: முஸ்லிம்-1 . 3 . ஹதீஸ்: முஸ்லிம்-21 . 4 . ஹதீஸ்: புகாரி-6594 ....

முன்னுரிமை தரும் காரணங்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قرائن الترجيح - முன்னுரிமை தரும் காரணங்கள்: ஒரு ஹதீஸை ஒரே ஆசிரியரிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர்கள் வெவ்வேறு அறிவிப்பாளர்தொடர்களை அறிவித்திருப்பார்கள். இதை اختلاف طرق الحديث - இக்திலாஃபு துருகில் ஹதீஸ் என்று கூறுவர். சில நேரம் வார்த்தைகளில் மாற்றம் செய்தும்; கூடுதல் குறைவாகவும் அறிவித்திருப்பார்கள். எடுத்தவுடனே இவற்றை முள்தரப்-குளறுபடியானவை என்று முடிவு செய்துவிடக்கூடாது. முதலில் இவற்றில் எது சரியாக இருக்கும் என்று பார்க்க...

அறிவிப்பாளர்கள்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஜவாமிஉல் கலிம் அறிவிப்பாளர் எண் வரிசைப்படி இதுவரை நாம் தொகுத்துள்ள சில அறிவிப்பாளர்கள் விவரம். இன்ஷா அல்லாஹ், அறிவிப்பாளர்கள் விவரம் என்ற தனிப்பகுதியில் இனி ஒவ்வொரு அறிவிப்பாளர் பற்றியும் தனித்தனியாக பதிவு செய்யப்படும். ராவீ நம்பர் பெயர் - ஜவாமிஃ-49845 அறிவிப்பாளர்கள் தரம் -11236- ஹபீப் பின் யஸீத் -16227- ஸுஹைர் பின் முஹம்மத் -26597- அப்துல்மலிக் பின் அம்ர் -4991- அஹ்மத் பின்...

ஹதீஸை ஆய்வு செய்யும் முறை

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸை ஆய்வு செய்யும் முறை. முன்னுரை: ஹதீஸை ஆய்வு செய்வதற்கு முன் தெரிந்துக் கொள்ள வேண்டியவை: ஒரு ஹதீஸை ஆய்வு செய்வதின் மூலமே அது சரியானதா? அல்லது பலவீனமானதா? அல்லது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியா? என்பதை நாம் அறிந்துக் கொள்ளமுடியும். பல்வேறு ஹதீஸ்கலை அறிஞர்கள் இந்த ஆய்வின் அடிப்படையில் தான் ஹதீஸ் வகைகளையும், தரங்களையும் நமக்கு அடையாளம் காட்டியுள்ளனர். ஹதீஸ் ஆய்வுக்குத்தான் ஹதீஸ்கலை என்ற...

ஸதூக் எனும் தரமுடைய அறிவிப்பாளர்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஸதூக் எனும் தரமுடைய அறிவிப்பாளர். ஹதீஸ்கலை நூல்களில் ஒரு அறிவிப்பாளரைப் பற்றி -صدوق-ஸதூக் எனும் தரமுடையவர் என்று கூறப்படுவதை நாம் காணலாம். இதன் அரபு அகராதிப் பொருள் (ஸதக-ஸித்க்-உண்மை கூறினார் என்பதிலிருந்து ஃபஊல் எனும் வார்த்தை அமைப்பில் உள்ள, மிகைப் பொருளைத் தரும்) மிகவும் உண்மையாளர்; எப்போதும் உண்மையாளர் என்பதாகும். ஹதீஸ்கலை வழக்கில் இந்த வார்த்தையை ஹதீஸ்கலை அறிஞர்கள் பல பொருள்களில் கூறியுள்ளனர். (1...

பலமானவரின் கூடுதல் தகவல் எப்போது ஏற்கப்படும்?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ பலமானவரின் கூடுதல் தகவல் எப்போது ஏற்கப்படும்? ஹதீஸ்கலை நூல்களில் ஸியாததுஸ் ஸிகதி மக்பூலதுன்- زيادة الثقة مقبولة - பலமானவரின் கூடுதல் தகவல் ஏற்கப்படும் என்ற விதி கூறப்படுவதைக் காணலாம். இதைப் பற்றிய விவரம் (சுருக்கம்): 1 . ஹதீஸ்கலை அறிஞர்களில் சிலர் பலமானவரின் கூடுதல் தகவலை பொதுவாக எல்லா நிலையிலும் ஏற்கவேண்டும் என்று கூறுகின்றனர். 2 . சிலர் பலமானவரின் கூடுதல் தகவலை...

முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம்

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ முர்ஸல், முர்ஸலுல் கஃபீ, தத்லீஸ் இவற்றின் வித்தியாசம். 1 . முர்ஸல். அறிவிப்பாளர் வரிசையில் எல்லா அறிவிப்பாளர்களும் இடம் பெற்று நபித்தோழர்கள் மட்டும் விடுபட்டிருக்கும் ஹதீஸ்களுக்கு முர்ஸல் எனப்படும். நபித்தோழரை விட்டு விட்டு ஒரு தாபிஈ, நபிகள் நாயகம் (ஸல்) சொன்னதாக இதில் அறிவிப்பார். உதாரணம்: “நபி (ஸல்) அவர்கள் தனது வலது கண்ணில் மூன்று தடவையும், இடது கண்ணில் மூன்று தடவையும் சுர்மா...

அறிவிப்பாளர் பற்றிய தகவலை தொகுப்பது எப்படி?

بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ அறிவிப்பாளர் பற்றிய தகவலை (சுருக்கமாக) தொகுப்பது எப்படி? 1 . அறிவிப்பாளின் பெயர், குறிப்புப் பெயர் (குன்னியத்) , பட்டப்பெயர் (லகப்), பிறப்பு, இறப்பு, வமிசம்-வகையரா போன்றவற்றை குறிப்பிடுவது. 2 . பெயரை அரபு உச்சரிப்பின்படி சரியாக குறிப்பிடுவது. (a . காரணம் ஒருவரே பலபெயரால் குறிப்பிடப்படுவார். இதனால் ஒருவர் பலர் என கருதநேரிடும். b . பெயர், குன்னியத்தை தெரிவது அவசியம். ஒரு...
Next Page »