அல்மசீது ஃபீ முத்தஸிலில் அஸானித். (இதன் பொருள்: இடைமுறிவு ஏற்படாத; சங்கிலித்தொடராக உள்ள அறிவிப்பாளர்தொடரில் அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவித்தல்) ஒரு ஹதீஸ் குறிப்பிட்ட அறிவிப்பாளர் தொடரில் அறிவிக்கப்பட்டிருக்கும். அந்த அறிவிப்பாளர் தொடர் முறிவில்லாத அறிவிப்பாளர் தொடராகவும் இருக்கும். இந்நிலையில் மற்றொரு அறிவிப்பாளர் அதே கருத்தில் வந்துள்ள செய்தியில் அறிவிப்பாளர்களை அதிகப்படுத்தி அறிவிப்பார். இத்தகைய செய்திக்குத்தான் ”அல்மஸீத் ஃபீ முத்தஸிலில் அஸானீத்” என்று கூறப்படும். இதற்கு பின் வரும் ஹதீஸை உதாரணமாகக்...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸூலுத் தஃப்ஸீர் (أصول التفسير) கலையில், ஒரு வசனத்தின் பொருளை முறையாகவும் பிழையின்றியும் அறிவதற்குக் கட்டமைக்கப்பட்ட விதிகள் உள்ளன. இஸ்லாமிய அறிஞர்கள் வகுத்துத் தந்த அந்த முழுமையான விதிகளை, அவை அணுகப்பட வேண்டிய சரியான வரிசைப்படி (الترتيب) கீழே காண்போம். 1. தஃப்ஸீரின் முதன்மை ஆதார வரிசை (مراتب أدلة التفسير) ஒரு வசனத்தை விளக்க முற்படும்போது, முதலில் எந்த ஆதாரத்தை நாட வேண்டும்...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ உஸூலுல் பிக்ஹ் (இஸ்லாமிய சட்டவியல் ஆதாரங்கள் மற்றும் விதிகள்) என்பது குர்ஆன் வசனங்களையும், நபிமொழிகளையும் எவ்வாறு அணுக வேண்டும், அதிலிருந்து எவ்வாறு சட்டங்களை சட்டவல்லுநர்கள் (முஜ்தஹிதீன்கள்) பிரித்தெடுக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு கலையாகும். உஸூலுல் பிக்ஹில் கூறப்பட்டுள்ள மிக முக்கியமான, குர்ஆன் மற்றும் சரியான ஹதீஸ்களின் அடிப்படையில் அமைந்த அடிப்படை விதிகளை (அல்கவாஇதுல் உஸூலிய்யா) பின்வருமாறு வகைப்படுத்தலாம்: 1. சட்டங்களை உருவாக்குவதற்கான அடிப்படை...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ சில ஹதீஸ்களின் தரம் பற்றி குறிப்பிடும்போது முர்ஸலான செய்தி என்று கூறுகிறோம். முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை முற்கால அறிஞர்கள் முன்கதிஃ - அறிவிப்பாளர்தொடர் இடைமுறிந்த செய்திக்கும் கூறியுள்ளனர். இவ்வாறே அறிவிப்பாளர்தொடரில் வரும் ஆசிரியர், மாணவருக்கிடையில் சந்திப்பு நிகழாவிட்டாலும் அல்லது நேரடியாக கேட்டல் என்ற அம்சம் இல்லாவிட்டாலும் முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை பயன்படுத்தியுள்ளனர். பிற்கால அறிஞர்கள், முர்ஸல் என்ற வழக்குச் சொல்லை ஒரு...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இத்திஸால், இன்கிதாஃ ஒரு ஹதீஸை சரியானது என்று கூறுவதற்கு 5 நிபந்தனைகள் இருக்க வேண்டும். இதில் முதல் நிபந்தனை - اتصال السند - அறிவிப்பாளர்தொடர் முத்தஸிலாக அதாவது இடைமுறிவு ஏற்படாததாக இருக்க வேண்டும் என்பதாகும். ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரை முத்தஸில் (முறிவில்லாத அறிவிப்பாளர் தொடர்) என்றோ, அல்லது முன்கதிஃ இடை முறிவு ஏற்பட்ட அறிவிப்பாளர்தொடர் என்றோ முடிவு செய்யும் காரணங்கள்: 1 ....
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ஹதீஸை பெறும் வழிகள் 8 ஆகும். 1 . السماع – ஹதீஸை அறிவிப்பவரிடமிருந்து நேரடியாக செவியேற்பது. 2 . القراءة على الشيخ حفظاً أو من كتاب – மனனம் செய்த ஹதீஸ்களை அல்லது எழுதிவைத்திருந்த ஹதீஸ்களை ஹதீஸை அறிவிப்பவரிடம் கூறி சரிபார்த்துக் கொள்ளுதல். 3 . الإجازة – ஹதீஸ்களை நூலாக தொகுத்துள்ளவர், அதை தனது மாணவர்களிடம் கொடுத்து இதிலிருந்து...
கபருல் ஆஹாத் (தனிநபர் செய்திகள்) முதவாதிராக அமையாத ஹதீஸ்களுக்கு கபருல் ஆஹாத் என்று பெயர். இது மூன்று வகையாகப் பிரிகிறது. 1. ஃகரீப். 2. அஸீஸ். 3. மஷ்ஹூர். இவற்றின் விளக்கம், வரைப்படம், உதாரணம் போன்றவற்றை இப்போது பார்ப்போம்... 1 . ஃகரீப் அறிவிப்பாளர் வரிசையின் ஏதேனும் ஒரு தலைமுறையிலோ அல்லது அனைத்து தலைமுறையிலோ ஒருவர் மட்டுமே தனித்து அறிவிக்கும் ஹதீஸாகும். உதாரணம்: “பயணம் வேதனையின் ஒரு பகுதியாகும். அது ஒருவரின்...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ கருத்துவேறுபாடு உள்ள அறிவிப்பாளரின் தரம் பற்றி எவ்வாறு முடிவு செய்வது? ஹதீஸ்களை அறிவிக்கும் அறிவிப்பாளர்களில் சிலரை, இவர்கள் பலமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். சிலரை பலவீனமானவர்கள் என்று அறிஞர்கள் கூறியிருப்பார்கள். இதற்கு மாற்றமாக வேறு அறிஞர் எதுவும் கூறியிருக்கமாட்டார். இதில் கருத்துவேறுபாடு இல்லை என்பதால் எளிதாக அறிவிப்பாளரின் தரம் பற்றி முடிவு செய்து விடலாம். ஆனால்...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ இப்னு ஹஜர் அவர்கள் அறிவிப்பாளர்களின் காலகட்டத்தைக் கவனித்து அவர்களை 12 வகையினராக குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் அறிவிப்பாளர்களை எளிதாக அடையாளம் காணுதல் போன்ற இன்னபிற பல பயன்களும் உள்ளன. 1 . நபித்தோழர்கள். (அனைத்து வகையினர்) 2 . மூத்த தாபிஈன்கள். (நபித்தோழர்களை கண்டு அவர்களிடமிருந்து ஹதீஸை அறிவித்தவர்கள். உ.ம்: இப்னுல் முஸய்யிப், நபி (ஸல்) அவர்களின் காலத்தை அடைந்து அவர்களை நேரடியாக காணாதவர்கள்)...
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ குதுபுஸ் ஸித்தாவின் அறிவிப்பாளர்கள் பற்றிய நூல்கள். குதுபுஸ் ஸித்தா எனும் முக்கிய ஆறு ஹதீஸ் நூல்களான புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, அபூதாவூத், திர்மிதீ, நஸாயீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ள அறிவிப்பாளர்கள் பற்றிய விவரங்களை சில அறிஞர்கள் நூலாக தொகுத்துள்ளனர். அவைகள் பற்றிய விவரங்கள்: 1 . அல்முஃஜமுல் முஷ்தமிலு அலா திக்ரி அஸ்மாஇ ஷுயூஹில் அஇம்மதின் நபல் - المعجم المشتمل على ذكر...
சமீப விமர்சனங்கள்