747.
إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
Hakim
747.
إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُصَلِّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ: اللَّهُمَّ أَجِرْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
1542. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது (வீட்டாரிடம்) பொறித்த ஆட்டுக்கறி கொண்டு வர கட்டளையிட்டார்கள். (அவ்வாறே வைக்கப்பட்டபின்) அவர்கள், உண்ணுங்கள் என்று கூறினார்கள். சிலர் விலகிச் சென்று நாங்கள் நோன்பு வைத்துள்ளோம் என்று கூறினர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.
كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَأَمَرَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: «كُلُوا» فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ يَوْمَ الشَّكِّ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
1557. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வருகிறதோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்ற வேண்டும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
«مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَيْسَ عَلَيْهِ قَضَاءٌ، وَمَنِ اسْتَقَاءَ فَلْيَقْضِ»
1556. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பாளி வேண்டுமென்றே வாந்தி எடுத்தால் அவர் நோன்பை முறித்தவராவார். அவருக்கு தானாக வாந்தி வந்தால் அவர் நோன்பை முறித்தவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
«إِذَا اسْتَقَاءَ الصَّائِمُ أَفْطَرَ، وَإِذَا ذَرَعَهُ الْقَيْءُ لَمْ يُفْطِرْ»
4261. அல்லாஹ்வே! ஊர்களில் எனக்கு மிகவும் விருப்பமான ஊரைவிட்டு என்னை நீ வெளியேற்றிவிட்டாய். எனவே உனக்கு மிகவும் விருப்பமான ஊரில் என்னை குடியமர்த்துவாயாக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தித்துக் கூறினார்கள். எனவே அல்லாஹ், அவர்களை மதீனாவில் குடியமர்த்தி வாழ வைத்தான்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
«اللَّهُمَّ إِنَّكَ أَخْرَجْتَنِي مِنْ أَحَبِّ الْبِلَادِ إِلَيَّ، فَأَسْكِنِّي أَحَبَّ الْبِلَادِ إِلَيْكَ» ، فَأَسْكَنَهُ اللَّهُ الْمَدِينَةَ
5827. நபி (ஸல்) அவர்கள் மக்காவின் கடைவீதியில் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் செவியேற்றேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)
أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ وَاقِفٌ بِالْحَزْوَرَةِ بِمَكَّةَ، «وَاللَّهِ إِنَّكَ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضٍ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»
5220. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றவர்களாக (மக்காவை நோக்கி) “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்பதை நான் நன்கறிவேன். (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)
وَقَفَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْحَزْوَرَةِ، فَقَالَ: «وَاللَّهِ إِنِّي لَأَعْلَمُ إِنَّكِ خَيْرُ أَرْضِ اللَّهِ وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَيَّ وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»
4270. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஹஸ்வரா” என்ற இடத்தில் வாகனத்தின்மீதிருந்தவர்களாக மக்காவை நோக்கி, “அல்லாஹ்வின் மீது ஆணையாக! நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.) என்று கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அதீ (ரலி)
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ بِالْحَزْوَرَةِ، يَقُولُ: «وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ، وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ»
6343. நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துக்கொண்டிருக்கும் போது அவர்களிடத்தில் நான் வந்தேன். அந்த வேலை முடிந்தவுடன் அவர்கள், “அப்துல்லாஹ்வே” என்று (என்னை) அழைத்து, “இந்த இரத்தத்தைக் கொண்டு சென்று இதை யாரும் பார்க்காதவாறு கீழே கொட்டிவிடு” என்று கூறினார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களை விட்டுத் தனியே சென்று அதைக் குடித்து விட்டேன். நான் அவர்களிடம் திரும்பி வந்தபோது, “அப்துல்லாஹ்வே! அதை நீ என்ன செய்தாய்?” என்று கேட்டார்கள். “மக்களை விட்டும் மறைவான இடம் என்று நான் கருதிய ஒரு இடத்தில் அதை வைத்துவிட்டேன்” என்று நான் கூறினேன். அவர்கள், “அதை நீ குடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன். உடனே அவர்கள், “இரத்தத்தைக் குடிக்குமாறு உனக்கு ஏவியது யார்? மக்களால் உனக்குக் கேடு உண்டாகட்டும். உன்னால் மக்களுக்குக் கேடு உண்டாகட்டும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَحْتَجِمُ، فَلَمَّا فَرَغَ قَالَ: «يَا عَبْدَ اللَّهِ، اذْهَبْ بِهَذَا الدَّمِ فَأَهْرِقْهُ حَيْثُ لَا يَرَاكَ أَحَدٌ» ، فَلَمَّا بَرَزْتُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَمَدْتُ إِلَى الدَّمِ فَحَسَوْتُهُ، فَلَمَّا رَجَعْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا صَنَعْتَ يَا عَبْدَ اللَّهِ؟» قَالَ: جَعَلْتُهُ فِي مَكَانٍ ظَنَنْتُ أَنَّهُ خَافٍ عَلَى النَّاسِ، قَالَ: «فَلَعَلَّكَ شَرِبْتَهُ؟» قُلْتُ: نَعَمْ، قَالَ: «وَمَنْ أَمَرَكَ أَنْ تَشْرَبَ الدَّمَ؟ وَيْلٌ لَكَ مِنَ النَّاسِ، وَوَيْلٌ لِلنَّاسِ مِنْكَ»
6508. புஸ்ர் பின் அர்தாத் அல்குரஷிய்யி அவர்கள் கூறியதாவது:
யா அல்லாஹ்! எங்களின் எல்லாக் காரியங்களின் முடிவையும் நன்மையாக ஆக்கி வைப்பாயாக! இவ்வுலகின் இழிவை விட்டும் மறுவுலகின் வேதனையை விட்டும் எங்களைப் பாதுகாத்தருள்வாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்பவர்களாக இருந்தார்கள்.
أَنَّهُ كَانَ «يَدْعُو اللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتِنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآخِرَةِ»
சமீப விமர்சனங்கள்