4828.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَ: «زِنِي شَعْرَ الْحُسَيْنِ وَتَصَدَّقِي بِوَزْنِهِ فِضَّةً، وَأَعْطِي الْقَابِلَةَ رِجْلَ الْعَقِيقَةِ»
Hakim
4828.
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ فَاطِمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا فَقَالَ: «زِنِي شَعْرَ الْحُسَيْنِ وَتَصَدَّقِي بِوَزْنِهِ فِضَّةً، وَأَعْطِي الْقَابِلَةَ رِجْلَ الْعَقِيقَةِ»
1372. ஒருவரின் ஜனாஸா கப்ரில் அடக்கம் செய்யப்படும் நிலையில் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் ‘உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள். அவருக்காக உறுதிப்பாட்டைக் கேளுங்கள். ஏனெனில் அவர் இப்போது விசாரிக்கப்படுகிறார்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் பின் அஃப்பான் (ரலி)
مَرَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِجِنَازَةٍ عِنْدَ قَبْرٍ وَصَاحِبُهُ يُدْفَنُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اسْتَغْفِرُوا لِأَخِيكُمْ، وَسَلُوا اللَّهَ لَهُ التَّثْبِيتَ، فَإِنَّهُ الْآنَ يُسْأَلُ»
2074. உங்களில் மரணவேளை நெருங்கியவர்களுக்கு யாஸீன் (36-வது) அத்தியாயத்தை ஓதுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : மஃகில் பின் யஸார் (ரலி)
«سُورَةُ يس اقْرَءُوهَا عِنْدَ مَوْتَاكُمْ»
1377. ஜஃபர் பின் அபூதாலிப் (ரலி) அவர்களின் மரணசெய்தி அறிவிக்கப்பட்டபோது, ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு செய்து கொடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஜஃபர் (ரலி)
لَمَّا نُعِيَ جَعْفَرٌ قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اصْنَعُوا لِآلِ جَعْفَرٍ طَعَامًا فَقَدْ أَتَاهُمْ أَمْرٌ يَشْغَلُهُمْ»
1332. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாத் தொழுகை வைக்கும்போது, அதில் நான்கு தக்பீர்கள் கூறி ஒரு ஸலாம் கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)
«أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى عَلَى جِنَازَةٍ فَكَبَّرَ عَلَيْهَا أَرْبَعًا، وَسَلَّمَ تَسْلِيمَةً التَّسْلِيمَةُ الْوَاحِدَةُ عَلَى الْجِنَازَةِ»
6906. முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஹம்னா பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (உஹதுப் போரில்) உமது சகோதரர் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்றும் “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்றும் கூறினார்கள்.
உமது தாய்மாமன் ஹம்ஸா (ரலி) அவர்களும் கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள், “இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்” (நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்) என்று கூறினார்கள்.
உமது கணவரும் (முஸ்அப் பின் உமைர்-ரலி) கொல்லப்பட்டு விட்டார் என்று கூறப்பட்டது. அதற்கு அவர்கள் (அவரின் பிரிவால்) நான் கவலையடைகிறேன் என்று கூறினார்கள்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு பெண்ணிடம் கணவனுக்கு மற்றவர்களுக்கில்லாத தனி மதிப்பு (அந்தஸ்து) உள்ளது என்று கூறினார்கள்.
أَنَّهَا قِيلَ لَهَا: قُتِلَ أَخُوكِ. قَالَتْ: رَحِمَهُ اللَّهُ، إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، فَقِيلَ لَهَا: قُتِلَ خَالُكِ حَمْزَةُ. فَقَالَتْ: إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ، فَقِيلَ لَهَا: قُتِلَ زَوْجُكِ، قَالَتْ: وَاحُزْنَاهُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ لِلزَّوْجِ مِنَ الْمَرْأَةِ لِشُعْبَةً مَا هِيَ لِشَيْءٍ»
1315. ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது சிலர் வாகனத்தில் வருவதை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
«خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جِنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا» ، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ، وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ»
1314. நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏற மறுத்தார்கள். (அடக்கம் செய்து) திரும்பிய போது வாகனம் கொண்டு வரப்பட்டது. அதில் ஏறிக் கொண்டார்கள்.
அவர்களிடம் இது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ‘வானவர்கள் நடந்து வந்தனர். அவர்கள் நடக்கும் போது நான் வாகனத்தில் ஏறவில்லை. அவர்கள் சென்றதும்–அல்லது (வானத்தில்) மேல் ஏறிச்சென்றதும்–நான் வாகனத்தில் ஏறிக் கொண்டேன்’ என்று விடையளித்தார்கள்.
அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)
«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيَّعَ جِنَازَةً، فَأُتِيَ بِدَابَّةٍ، فَأَبَى أَنْ يَرْكَبُهَا، فَلَمَّا انْصَرَفَ أُتِيَ بِدَابَّةٍ فَرَكِبَهَا» ، فَقِيلَ لَهُ: فَقَالَ: ” إِنَّ الْمَلَائِكَةَ كَانَتْ تَمْشِي فَلَمْ أَكُنْ لِأَرْكَبَ وَهُمْ يَمْشُونَ، فَلَمَّا ذَهَبُوا – أَوْ قَالَ: عَرَجُوا – رَكِبْتُ
1340. ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான்;
இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான்.
அவரை அடக்கம் செய்ய (கப்ர்) குழி தோண்டி அதில் அடக்கம் செய்தால் அவர் மறுமை நாளில் எழுப்பப்படும் வரை அவருக்காக தங்குமிடத்தை ஏற்படுத்தியவருக்கு கிடைப்பதைப் போன்ற கூலியை அவர் கொடுக்கப்படுவார் ’என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூராஃபிஉ (ரலி)
«مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ أَرْبَعِينَ مَرَّةً، وَمَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنْ سُنْدُسِ وَإِسْتَبْرَقِ الْجَنَّةِ، وَمَنْ حَفَرَ لِمَيِّتٍ قَبْرًا وَأَجَنَّهُ فِيهِ أُجْرِيَ لَهُ مِنَ الْأَجْرِ كَأَجْرِ مَسْكَنٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
1307. ஒரு இறந்த மனிதரைக் குளிப்பாட்டுபவர் அவரிடம் உள்ள குறைகளை மறைத்தால் அவரை அல்லாஹ் நாற்பது தடவை மன்னிக்கிறான்;
இறந்த மனிதருக்கு கஃபன் ஆடை அணிவிப்பவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஸுன்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அணிவிக்கிறான்.
அவரை அடக்கம் செய்ய (கப்ர்) குழி தோண்டி அதில் அடக்கம் செய்தால் அவர் மறுமை நாளில் எழுப்பப்படும் வரை (ஒருவர் மற்றொருவருக்கு) பூமியில் வசிப்பதற்காக தங்குமிடத்தை ஏற்பாடு செய்ததால் கிடைக்கும் கூலியைப் போன்று அவர் கொடுக்கப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூராஃபிஉ (ரலி)
«مَنْ غَسَّلَ مَيِّتًا فَكَتَمَ عَلَيْهِ غُفِرَ لَهُ أَرْبَعِينَ مَرَّةً، وَمَنْ كَفَّنَ مَيِّتًا كَسَاهُ اللَّهُ مِنَ السُّنْدُسِ، وَإِسْتَبْرَقِ الْجَنَّةِ، وَمَنْ حَفَرَ لِمَيِّتٍ قَبْرًا فَأَجَنَّهُ فِيهِ أُجْرِيَ لَهُ مِنَ الْأَجْرِ كَأَجْرِ مَسْكَنٍ أُسْكِنَهُ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»
சமீப விமர்சனங்கள்