Category: ஹாகிம்

Hakim

Hakim-1113

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலமான செய்தி

பாடம்:

அலீ (ரலி) அவர்களின் வழியாக வரும் செய்திகள்:

1113. அலீ (ரலி) அவர்கள் அரஃபா நாளின் ஃபஜ்ருத் தொழுகைக்குப் பிறகு தக்பீர் சொல்ல ஆரம்பித்து, அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின் தொழுகையை இமாம் தொழுது முடிக்கும் வரை (தக்பீர் கூறுவதை) நிறுத்த மாட்டார்கள்.

(இமாம் அய்யாமுத் தஷ்ரீக்கின் கடைசி நாளின்) அஸர் தொழுகையை முடித்த பிறகு அலீ (ரலி) அவர்கள் தக்பீர் கூறுவார்கள். (பிறகு தக்பீர் கூறமாட்டார்கள்.)

அறிவிப்பவர்: அபூவாயில்-ஷகீக் பின் ஸலமா (ரஹ்)


كَانَ عَلِيٌّ «يُكَبِّرُ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ غَدَاةَ عَرَفَةَ، ثُمَّ لَا يَقْطَعُ حَتَّى يُصَلِّيَ الْإِمَامُ مِنْ آخِرِ أَيَّامِ التَّشْرِيقِ، ثُمَّ يُكَبِّرُ بَعْدَ الْعَصْرِ»


Hakim-7423

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7423. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தையும் இறக்காமல் இறக்குவதில்லை.

மேலும், பசு மாட்டுப் பாலில் பல நோய்களுக்கும் நிவாரணம் உண்டு.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

 


«مَا أَنْزَلَ اللَّهُ مِنْ دَاءٍ إِلَّا وَقَدْ أَنْزَلَ لَهُ شِفَاءً وَفِي أَلْبَانِ الْبَقَرِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»


Hakim-7425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7425. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக அல்லாஹ் எந்த நோயையும் அதற்குரிய மருந்தை இறக்காமல் இறக்குவதில்லை. முதுமையைத் தவிர!

ஆகவே, நீங்கள் பசு மாட்டுப் பாலைப் பருகிக் கொள்ளுங்கள். ஏனெனில், அது பலவகையான தாவரத்திலிருந்து மேய்கிறது.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«إِنَّ اللَّهَ تَعَالَى لَمْ يُنْزِلْ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً إِلَّا الْهَرَمَ فَعَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرُمُّ مِنْ كُلِّ شَجَرٍ»


Hakim-8224

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

8224. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் பசுவின் பாலை அருந்துங்கள். ஏனெனில் அது பலதரப்பட்ட தாவரத்திலிருந்து (அதன் இலைகளை, புற்களை) மேய்கிறது.

எனவே, அது பல நோய்க்கும் நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)


«عَلَيْكُمْ بِأَلْبَانِ الْبَقَرِ فَإِنَّهَا تَرِمُّ مِنْ كُلِّ شَجَرٍ، وَهُوَ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ»


Hakim-4393

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4393. உர்வா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயால் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, “ஆயிஷாவே! கைபரில் நான் உண்ட உணவின் (விஷ) வலியை இப்போதும் உணர்கிறேன். இப்போது அந்த விஷத்தால் என் உயிர்நாடி துண்டிக்கப்படுவதை உணர்கிறேன்” என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கள் (சில நேரம்) சொல்பவர்களாக இருந்தார்கள்.


كَانَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا تَقُولُ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ: «يَا عَائِشَةُ، إِنِّي أَجِدُ أَلَمَ الطَّعَامِ الَّذِي أَكَلْتُهُ بِخَيْبَرَ، فَهَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي مِنْ ذَلِكَ السُّمِّ»


Hakim-7090

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

7090. ஒரு யூதப் பெண், நபி (ஸல்) அவர்களுக்குத் தோல் உரிக்கப்பட்டு, சமைக்கப்பட்ட ஆடு ஒன்றைப் பரிசாகக் கொடுத்தாள். மக்கள் அதிலிருந்து சாப்பிட தங்கள் கைகளை நீட்டியபோது, நபி (ஸல்) அவர்கள், ‘உங்கள் கைகளை எடுத்துவிடுங்கள்! ஏனெனில், இந்த ஆட்டின் ஓர் உறுப்பு, இதில் விஷம் தோய்ந்துள்ளது என்று எனக்கு அறிவிக்கிறது’ என்று கூறினார்கள்.

பின்னர், நபி (ஸல்) அவர்கள் அந்த ஆட்டின் உரிமையாளரிடம் ஆளனுப்பி, ‘இந்த உணவில் நீ விஷம் கலந்தாயா?’ என்று கேட்டார்கள்.

அதற்கு அவள், ‘ஆம். நீங்கள் பொய்யராக இருந்தால், மக்களை உங்களை விட்டும் நான் நிம்மதியாக்க விரும்பினேன். நீங்கள் உண்மையாளராக இருந்தால், அல்லாஹ் உங்களுக்கு அதைப் பற்றி அறிவிப்பான் என்று எனக்குத் தெரியும்’ என்று கூறினாள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ்வின் பெயரைச் சொல்லிச் சாப்பிடுங்கள்!’ என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் சாப்பிட்டோம். அதிலிருந்து எங்களுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


أَنَّ يَهُودِيَّةً أَهْدَتْ شَاةً إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِيطًا فَلَمَّا بَسَطَ الْقَوْمُ أَيْدِيَهُمْ قَالَ لَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُفُّوا أَيْدِيَكُمْ فَإِنَّ عُضْوًا مِنْ أَعْضَائِهَا يُخْبِرُنِي أَنَّهَا مَسْمُومَةٌ» قَالَ: فَأَرْسَلَ إِلَى صَاحِبَتِهَا فَقَالَ: «أَسَمَمْتِ طَعَامَكِ هَذَا؟» قَالَتْ: نَعَمْ أَحْبَبْتُ إِنْ كُنْتَ كَاذِبًا أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ وَإِنْ كُنْتَ صَادِقًا عَلِمْتُ أَنَّ اللَّهَ سَيُطْلِعُكَ عَلَيْهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اذْكُرُوا اسْمَ اللَّهِ وَكُلُوا» فَأَكَلْنَا فَلَمْ يَضُرَّ أَحَدًا مِنَّا شَيْءٌ


Hakim-4966

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4966.


دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي وَجَعِهِ الَّذِي قُبِضَ فِيهِ فَقُلْتُ: بِأَبِي أَنْتَ يَا رَسُولَ اللَّهِ، مَا تَتَّهِمُ بِنَفْسِكَ؟ فَإِنِّي لَا أَتَّهِمُ بِابْنِي إِلَّا الطَّعَامَ الَّذِي أَكَلَهُ مَعَكَ بِخَيْبَرَ وَكَانَ ابْنُهَا بِشْرُ بْنُ الْبَرَاءِ بْنِ مَعْرُورٍ مَاتَ قَبْلَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَأَنَا لَا أَتَّهِمُ غَيْرَهَا، هَذَا أَوَانُ انْقِطَاعِ أَبْهَرِي هَذَا»


Hakim-4967

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4967.


أَنَّ امْرَأَةً يَهُودِيَّةً دَعَتِ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابًا لَهُ عَلَى شَاةٍ مَصْلِيَّةٍ، فَلَمَّا قَعَدُوا يَأْكُلُونَ أَخَذَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لُقْمَةً فَوَضَعَهَا، ثُمَّ قَالَ لَهُمْ: «أَمْسِكُوا، إِنَّ هَذِهِ الشَّاةَ مَسْمُومَةٌ» فَقَالَ لِلْيَهُودِيَّةِ: وَيْلَكِ لِأَيِّ شَيْءٍ سَمَّمْتِنِي؟ ” قَالَتْ: أَرَدْتُ أَنْ أَعْلَمَ إِنْ كُنْتَ نَبِيًّا فَإِنَّهُ لَا يَضُرُّكَ، وَإِنْ كَانَ غَيْرَ ذَلِكَ أَنْ أُرِيحَ النَّاسَ مِنْكَ، وَأَكَلَ مِنْهَا بِشْرُ بْنُ الْبَرَاءِ فَمَاتَ، فَقَتَلَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Hakim-7846

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

7846. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மனிதருக்கு அறிவுரை கூறும் போது கூறினார்கள்:

ஐந்து விஷயங்கள் வருவதற்கு முன்பு ஐந்து விஷயங்களை நீ பயன்படுத்திக்கொள்!

1 . முதுமை வருவதற்கு முன்பு உனது இளமை.
2 . நோய் வருவதற்கு முன்பு உனது ஆரோக்கியம்.
3 . வறுமை வருவதற்கு முன்பு உனது செல்வம்.
4 . உனக்கு வேலைப்பளு வருவதற்கு முன்பு உனது ஓய்வு.
5 . உனக்கு மரணம் வருவதற்கு முன்பு உனது வாழ்க்கை.


قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ وَهُوَ يَعِظُهُ: ” اغْتَنِمْ خَمْسًا قَبْلَ خَمْسٍ: شَبَابَكَ قَبْلَ هِرَمِكَ، وَصِحَّتَكَ قَبْلَ سَقَمِكَ، وَغِنَاءَكَ قَبْلَ فَقْرِكَ، وَفَرَاغَكَ قَبْلَ شُغْلِكَ، وَحَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ


Hakim-2618

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2618. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு நபி, ஒரு நகரத்தின் மக்களுடன் போரிட்டார். அந்த நகரை அவர் கைப்பற்ற நெருங்கியபோது, சூரியன் மறைந்துவிடுமோ என்று அஞ்சினார். உடனே சூரியனை நோக்கி, “சூரியனே! நீ கட்டளையிடப்பட்டிருக்கிறாய். உனக்கு என் மீது உள்ள கண்ணியத்தின் அடிப்படையில் பகலில் சிறிது நேரம் நீ நின்றுவிடவேண்டும்!” என்று எனக்கு கட்டளையிடப்பட்டுள்ளது என்று கூறினார். அல்லாஹ்வின் கட்டளையால் சூரியன் நின்றது. அந்த நபி நகரத்தை வெற்றி கொண்டார்.

(இதற்கு முன்) அவர்கள் போரில் கிடைத்த பொருட்களை (கனீமத்) இறைவனுக்காகக் காணிக்கையாகக் கொண்டு வருவார்கள். அப்பொழுது வானிலிருந்து நெருப்பு வந்து அந்தக் காணிக்கையை எரித்துவிடும். இந்த முறை அவர்கள் கனீமத் பொருட்களைக் கொண்டு வந்தபோது, நெருப்பு வந்து அதை எரிக்கவில்லை.

உடனே அவர்கள், “அல்லாஹ்வின் நபியே! எங்கள் காணிக்கை ஏன் ஏற்றுக்கொள்ளப்படவில்லை?” என்று கேட்டனர். அதற்கு அந்த நபி, “உங்களில் மோசடி செய்தவன் இருக்கிறான்” என்றார். அவர்கள், “மோசடி செய்தவன் யார் என்று நாங்கள் எப்படி அறிவது?” என்று கேட்டனர்.

அவர்கள் பன்னிரண்டு கோத்திரங்களாக இருந்தனர். அந்த நபி கூறினார்: “உங்கள் ஒவ்வொரு

” إِنَّ نَبِيًّا مِنَ الْأَنْبِيَاءِ قَاتَلَ أَهْلَ مَدِينَةٍ حَتَّى إِذَا كَادَ أَنْ يَفْتَتِحَهَا، خَشِيَ أَنْ تَغْرُبَ الشَّمْسُ فَقَالَ لَهَا: أَيَّتُهَا الشَّمْسُ إِنَّكِ مَأْمُورَةٌ وَأَنَا مَأْمُورٌ بِحُرْمَتِي عَلَيْكِ، إِلَّا رَكَدْتِ سَاعَةً مِنَ النَّهَارِ، قَالَ: فَحَبَسَهَا اللَّهُ حَتَّى افْتَتَحَهَا، وَكَانُوا إِذَا أَصَابُوا الْغَنَائِمَ قَرَّبُوهَا فِي الْقُرْبَانِ، فَجَاءَتِ النَّارُ، فَأَكَلَتْهَا، فَلَمَّا أَصَابُوا، وَضَعُوا الْقُرْبَانَ، فَلَمْ تَجِئِ النَّارُ تَأْكُلْهُ، فَقَالُوا: يَا نَبِيَّ اللَّهِ مَا لَنَا لَا يُقْبَلُ قُرْبَانُنَا؟ قَالَ: فِيكُمْ غُلُولٌ قَالُوا: وَكَيْفَ لَنَا أَنْ نَعْلَمَ مَنْ عِنْدَهُ الْغُلُولُ؟ قَالَ: وَهُمُ اثْنَا عَشَرَ سِبْطًا قَالَ: يُبَايِعُنِي رَأْسُ كُلِّ سِبْطٍ مِنْكُمْ فَبَايَعَهُ رَأْسُ كُلِّ سِبْطٍ قَالَ: فَلَزِقَتْ كَفُّ النَّبِيِّ بِكَفِّ رَجُلٍ مِنْهُمْ فَقَالَ لَهُ: عِنْدَكَ الْغُلُولُ فَقَالَ: كَيْفَ لِي أَنْ أَعْلَمَ عِنْدَ أَيِّ سِبْطٍ هُوَ؟ قَالَ: تَدْعُو سِبْطَكَ فَتُبَايِعْهُمْ، رَجُلًا رَجُلًا، قَالَ: فَفَعَلَ فَلَزِقَتْ كَفُّهُ بِكَفِّ رَجُلِ الْغَنَائِمِ، فَجَاءَتِ النَّارُ فَأَكَلَتْهُ، فَقَالَ كَعْبٌ: صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ هَكَذَا وَاللَّهِ فِي كِتَابِ اللَّهِ يَعْنِي فِي التَّوْرَاةِ ثُمَّ قَالَ: يَا أَبَا هُرَيْرَةَ أَحَدَّثَكُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّ نَبِيٍّ كَانَ؟ قَالَ: لَا. قَالَ كَعْبٌ: هُوَ يُوشَعُ بْنُ نُونٍ. قَالَ: فَحَدَّثَكُمْ أَيُّ قَرْيَةٍ هِيَ؟ قَالَ: لَا. قَالَ: هِيَ مَدِينَةُ أَرِيحَا


Next Page » « Previous Page