2211. இப்னு அபூஹாதிம் அவர்கள் கூறுகிறார்:
நான், எனது தந்தை அபூஹாதிம் அர்ராஸீ அவர்களிடம், இப்னு உயைனா அவர்கள் அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> அப்துல்லாஹ் பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில்,
“நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு செய்ய வேண்டிய மரியாதையை அறியாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை”
என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கும் செய்தி பற்றி கேட்டேன். அதற்கு என் தந்தை அப்துல்லாஹ் பின் அபூநஜீஹ் —> உபைதுல்லாஹ் பின் ஆமிர் —> அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) —> நபி (ஸல்) என்று வந்திருப்பதே சரியானதாகும்-(அப்துல்லாஹ் பின் ஆமிர் என்று கூறியிருப்பது தவறாகும்) என்று கூறினார்.
مَن لَم يَرحَم صَغِيرَنا وَيَعرِف حَقَّ كَبِيرِنا فَلَيسَ مِنّا
قالَ أَبِي : الصَّحِيحُ ابنُ أَبِي نَجِيحٍ ، عَن عُبَيدِ اللهِ بنِ عامِرٍ ، عَن عَبدِ اللهِ بنِ عَمرٍو ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم.
சமீப விமர்சனங்கள்