Category: இப்னுமாஜா

Ibn-Majah-13

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

13.


لَا أُلْفِيَنَّ أَحَدَكُمْ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ، يَأْتِيهِ الْأَمْرُ مِمَّا أَمَرْتُ بِهِ، أَوْ نَهَيْتُ عَنْهُ، فَيَقُولُ: لَا أَدْرِي، مَا وَجَدْنَا فِي كِتَابِ اللَّهِ اتَّبَعْنَاهُ


Ibn-Majah-12

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸை கண்ணியப்படுத்துவதும், அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர் மீது கடுமை காட்டுவதும்.

12. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தன் சொகுசு இருக்கையில் சாய்ந்து அமர்ந்திருக்கும் ஒரு மனிதனிடம் எனது ஹதீஸ்களிலிருந்து ஏதேனும் ஒரு ஹதீஸ் கூறப்படும்போது, அவன், ‘எங்களுக்கும் உங்களுக்கும் மத்தியில் அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) இருக்கிறதே! அதில் எதை ஹலால் (அனுமதிக்கப்பட்டது) எனக் காண்கிறோமோ அதை மட்டுமே நாம் ஹலாலாக ஏற்போம்; அதில் எதை ஹராம் (விலக்கப்பட்டது) எனக் காண்கிறோமோ அதை மட்டுமே நாம் ஹராமாய்க் கருதுவோம் (ஸுன்னா தேவையில்லை)’ என்று கூறும் காலம் நெருங்கிவிட்டது.

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதை ஹராம் (விலக்கப்பட்டதாக) ஆக்கினார்களோ, அது அல்லாஹ் ஹராம் ஆக்கியதைப் போன்றதேயாகும்.

அறிவிப்பவர்: மிக்தாம் பின் மஃதீகரிப் (ரலி)


يُوشِكُ الرَّجُلُ مُتَّكِئًا عَلَى أَرِيكَتِهِ، يُحَدَّثُ بِحَدِيثٍ مِنْ حَدِيثِي، فَيَقُولُ: بَيْنَنَا وَبَيْنَكُمْ كِتَابُ اللَّهِ عَزَّ وَجَلَّ، فَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَلَالٍ اسْتَحْلَلْنَاهُ، وَمَا وَجَدْنَا فِيهِ مِنْ حَرَامٍ حَرَّمْنَاهُ، أَلَّا وَإِنَّ مَا حَرَّمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلُ مَا حَرَّمَ اللَّهُ


Ibn-Majah-11

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

11. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் (தங்களுக்கு முன்னால்) ஒரு கோட்டை வரைந்தார்கள். பிறகு அதன் வலது பக்கத்தில் இரண்டு கோடுகளையும், இடது பக்கத்தில் இரண்டு கோடுகளையும் வரைந்தார்கள். பின்னர் தங்களுடைய கையை நடுவில் உள்ள கோட்டின் மீது வைத்து, “இதுவே அல்லாஹ்வின் வழியாகும்” என்று கூறிவிட்டு, பின்வரும் குர்ஆன் வசனத்தை ஓதினார்கள்:

“இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரே) வழியை விட்டும் உங்களைப் பிரித்து விடும். நீங்கள் (அல்லாஹ்வை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.” (அல்குர்ஆன் 6:153)


كُنَّا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَطَّ خَطًّا، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَمِينِهِ، وَخَطَّ خَطَّيْنِ عَنْ يَسَارِهِ، ثُمَّ وَضَعَ يَدَهُ فِي الْخَطِّ الْأَوْسَطِ، فَقَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ثُمَّ تَلَا هَذِهِ الْآيَةَ: {وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ} [الأنعام: 153]


Ibn-Majah-1135

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1135.


«مَا كَانَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مُؤَذِّنٌ وَاحِدٌ، إِذَا خَرَجَ أَذَّنَ، وَإِذَا نَزَلَ أَقَامَ» ، وَأَبُو بَكْرٍ وَعُمَرُ كَذَلِكَ، فَلَمَّا كَانَ عُثْمَانُ وَكَثُرَ النَّاسُ، زَادَ النِّدَاءَ الثَّالِثَ عَلَى دَارٍ فِي السُّوقِ، يُقَالُ لَهَا: الزَّوْرَاءُ، فَإِذَا خَرَجَ أَذَّنَ، وَإِذَا نَزَلَ أَقَامَ


Ibn-Majah-114

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

114.


عَهِدَ إِلَيَّ النَّبِيُّ الْأُمِّيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَّهُ لَا يُحِبُّنِي إِلَّا مُؤْمِنٌ، وَلَا يُبْغِضُنِي إِلَّا مُنَافِقٌ»


Ibn-Majah-4152

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4152. அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும், (எனது மனைவி) ஃபாத்திமாவும் வெண்மைநிற கம்பளிப் போர்வையில் இருக்கும் சமயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள்.

இந்தக் கம்பளிப் போர்வையைும், இத்கிர் (எனும் நறுமணப்புல்) நிரப்பப்பட்ட ஒரு தோல் தலையணையையும், தோலாலான ஒரு தண்ணீர்க் குடுவையையும் திருமணச் சீர்ப்பொருள்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு கொடுத்திருந்தார்கள்.


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَتَى عَلِيًّا، وَفَاطِمَةَ وَهُمَا فِي خَمِيلٍ لَهُمَا، وَالْخَمِيلُ: الْقَطِيفَةُ الْبَيْضَاءُ مِنَ الصُّوفِ، قَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جَهَّزَهُمَا بِهَا، وَوِسَادَةٍ مَحْشُوَّةٍ إِذْخِرًا وَقِرْبَةٍ


Ibn-Majah-265

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

265. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களுக்குப் பயனளிக்கக் கூடிய மார்க்கம் தொடர்பான ஒரு கல்வியை ஒருவருக்கு அல்லாஹ் கொடுத்திருக்க, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவருக்கு அல்லாஹ் நெருப்பாலான கடிவாளத்தைப் பூட்டுவான்.

அறிவிப்பவர்: அபூஸஈத் அல்குத்ரீ (ரலி)


«مَنْ كَتَمَ عِلْمًا مِمَّا يَنْفَعُ اللَّهُ بِهِ فِي أَمْرِ النَّاسِ أَمْرِ الدِّينِ، أَلْجَمَهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنَ النَّارِ»


Ibn-Majah-264

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

264. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவரிடம் (அவர் அறிந்துள்ள) கல்வியைப் பற்றி வினவப்படும் போது, அதை அவர் மறைத்தால் மறுமைநாளில் அவர் நெருப்பாலான கடிவாளம் இடப்படுவார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أُلْجِمَ يَوْمَ الْقِيَامَةِ بِلِجَامٍ مِنْ نَارٍ»


Ibn-Majah-284

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

284. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதரே! உங்களுடைய சமுதாயத்தாரில் நீங்கள் பார்த்திராத மக்களை (மறுமை நாளில்) எப்படி அறிந்துகொள்வீர்கள்?” என (நபி-ஸல்-அவர்களிடம்) வினவப்பட்டது.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அங்கத் தூய்மை (உளூ) செய்த உறுப்புகளில் உள்ள அடையாளங்களால் கறுப்பு, வெள்ளை கலந்த (பஞ்ச கல்யாணிக்) குதிரைகள் போன்று பிரகாசமாக அவர்கள் இருப்பார்கள். (அதை வைத்து அவர்களை அறிந்து கொள்வேன்)” என விடையளித்தார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، قَالَ: قِيلَ: يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ تَرَ مِنْ أُمَّتِكَ؟ قَالَ: «غُرٌّ مُحَجَّلُونَ بُلْقٌ مِنْ آثَارِ الْوُضُوءِ»

قَالَ أَبُو الْحَسَنِ الْقَطَّانُ: حَدَّثَنَا أَبُو حَاتِمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ، فَذَكَرَ مِثْلَهُ


Next Page » « Previous Page