ஹதீஸின் தரம்: விபரம் கீழே
150. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
முதன் முதலில் (தாங்கள்) இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதாக ஏழு பேர் பகிரங்கப்படுத்தினர். அந்த ஏழு பேர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும், அபூபக்ர் (ரலி) அவர்களும், அம்மார் (ரலி) அவர்களும், அம்மாரின் தாயார் சுமையா (ரலி) அவர்களும், ஸுஹைப் (ரலி) அவர்களும், பிலால் (ரலி) அவர்களும், மிக்தாத் (ரலி) அவர்களும் ஆவார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிறிய தந்தை அபூதாலிபின் மூலம் நபி (ஸல்) அவர்களை அல்லாஹ் (எதிரிகளின் தொல்லையிலிருந்து) பாதுகாத்துக் கொண்டான். அபூபக்ர் (ரலி) அவர்களை அவர்களது சமூகத்தாரின் மூலம் அல்லாஹ் பாதுகாத்தான். ஆனால் மற்றவர்களை இணைவைப்பாளர்கள் பிடித்து அவர்களுக்கு இரும்புச் சட்டைகளை அணிவித்து வெயிலில் கிடத்தி சுட்டெரித்தனர். இதனால் இவர்கள், (இனி யாரும் இஸ்லாத்தை வெளிப்படுத்தக்கூடாது எனும் இணைவைப்பாளர்களின் நோக்கத்திற்கு) இணங்கிப் போயினர். பிலால் (ரலி) அவர்களைத் தவிர. அவர் அல்லாஹ்வின் விசயத்தில் தன் உயிரை துச்சமாகக் கருதினார். மேலும் அவர் (அவரின் கூட்டத்தாரின் பார்வையில்) இழிவானவராக இருந்தார். (அதனால் அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை). எனவே அவரை இணைவைப்பாளர்கள் பிடித்து (மக்காவின்) சிறுவர்களிடம் ஒப்படைத்தனர். அச்சிறுவர்கள் அவரைப் பிடித்து (அடித்தவர்களாக)
كَانَ أَوَّلَ مَنْ أَظْهَرَ إِسْلَامَهُ سَبْعَةٌ: رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعَمَّارٌ، وَأُمُّهُ سُمَيَّةُ، وَصُهَيْبٌ، وَبِلَالٌ، وَالْمِقْدَادُ، فَأَمَّا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَنَعَهُ اللَّهُ بِعَمِّهِ أَبِي طَالِبٍ، وَأَمَّا أَبُو بَكْرٍ فَمَنَعَهُ اللَّهُ بِقَوْمِهِ، وَأَمَّا سَائِرُهُمْ فَأَخَذَهُمُ الْمُشْرِكُونَ، وَأَلْبَسُوهُمْ أَدْرَاعَ الْحَدِيدِ، وَصَهَرُوهُمْ فِي الشَّمْسِ، فَمَا مِنْهُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَقَدْ وَاتَاهُمْ عَلَى مَا أَرَادُوا، إِلَّا بِلَالًا، فَإِنَّهُ هَانَتْ عَلَيْهِ نَفْسُهُ فِي اللَّهِ، وَهَانَ عَلَى قَوْمِهِ، فَأَخَذُوهُ فَأَعْطَوْهُ الْوِلْدَانَ، فَجَعَلُوا يَطُوفُونَ بِهِ فِي شِعَابِ مَكَّةَ، وَهُوَ يَقُولُ: أَحَدٌ أَحَدٌ
சமீப விமர்சனங்கள்