Category: இப்னுமாஜா

Ibn-Majah-3145

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3145. பாதி அல்லது பாதிக்குமேல் கொம்பும், காதும் இல்லாத ஆட்டை குர்பானி கொடுப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைச் செய்தார்கள்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «نَهَى أَنْ يُضَحَّى بِأَعْضَبِ الْقَرْنِ، وَالْأُذُنِ»


Ibn-Majah-4002

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4002.


أَنَّ أَبَا هُرَيْرَةَ، لَقِيَ امْرَأَةً مُتَطَيِّبَةً تُرِيدُ الْمَسْجِدَ، فَقَالَ: ” يَا أَمَةَ الْجَبَّارِ أَيْنَ تُرِيدِينَ؟ قَالَتْ: الْمَسْجِدَ، قَالَ: وَلَهُ تَطَيَّبْتِ؟ قَالَتْ: نَعَمْ، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «أَيُّمَا امْرَأَةٍ تَطَيَّبَتْ، ثُمَّ خَرَجَتْ إِلَى الْمَسْجِدِ، لَمْ تُقْبَلْ لَهَا صَلَاةٌ حَتَّى تَغْتَسِلَ»


Ibn-Majah-721

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

721. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பைக் கேட்கக்கூடியவர் (அறிவிப்பு முடிந்த பின்பு) வ அன அஷ்ஹது அல் லா இலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வ ரசூலுஹு, ரளீத்து பில்லாஹி ரப்பா, வபில் இஸ்லாமி தீனா, வபி முஹம்மதின் நபிய்யா,  என்று சொன்னால் அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்.

(பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையேதுமில்லை. முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனுடைய அடியாரும் தூதருமாவார்கள் என்று நானும் உறுதிமொழிகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும்; இஸ்லாத்தை மார்க்கமாகவும்; முஹம்மத் (ஸல்) அவர்களை (அவனுடைய) தூதராகவும்  நாங்கள் மனநிறைவுடன் ஏற்றுக்கொண்டோம்.)

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபூவக்காஸ் (ரலி)


مَنْ قَالَ حِينَ يَسْمَعُ الْمُؤَذِّنَ: وَأَنَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، غُفِرَ لَهُ ذَنْبُهُ


Ibn-Majah-3870

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3870. ஒரு முஸ்லிம் அல்லது ஒரு மனிதன் அல்லது ஒரு அடியார் காலையிலும், மாலையிலும், “ரளீத்து பில்லாஹி ரப்பா; வபில் இஸ்லாமி தீனா; வபி முஹம்மதின் நபிய்யா” எனக் கூறினால் மறுமை நாளில் அவரைப் பொருந்திக் கொள்வது அல்லாஹ்வின் மீது கடமையாகிவிடுகின்றது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பணியாளரான அபூஸல்லாம்.


مَا مِنْ مُسْلِمٍ أَوْ إِنْسَانٍ أَوْ عَبْدٍ يَقُولُ حِينَ يُمْسِي وَحِينَ يُصْبِحُ: رَضِيتُ بِاللَّهِ رَبًّا، وَبِالْإِسْلَامِ دِينًا، وَبِمُحَمَّدٍ نَبِيًّا، إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يُرْضِيَهُ يَوْمَ الْقِيَامَةِ


Ibn-Majah-3781

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3781.


يَجِيءُ الْقُرْآنُ يَوْمَ الْقِيَامَةِ كَالرَّجُلِ الشَّاحِبِ فَيَقُولُ: أَنَا الَّذِي أَسْهَرْتُ لَيْلَكَ، وَأَظْمَأْتُ نَهَارَكَ


Ibn-Majah-3255

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3255.


«إِنَّ طَعَامَ الْوَاحِدِ، يَكْفِي الِاثْنَيْنِ، وَإِنَّ طَعَامَ الِاثْنَيْنِ، يَكْفِي الثَّلَاثَةَ وَالْأَرْبَعَةَ، وَإِنَّ طَعَامَ الْأَرْبَعَةِ، يَكْفِي الْخَمْسَةَ وَالسِّتَّةَ»


Ibn-Majah-3254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஒருவரின் உணவு இருவருக்குப் போதுமானதாகும்.

3254. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவருடைய உணவு இருவருக்குப் போதுமானதாகும். இருவரின் உணவு நால்வருக்குப் போதுமானதாகும். நால்வரின் உணவு எண்மருக்குப் போதுமானதாகும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)


«طَعَامُ الْوَاحِدِ، يَكْفِي الِاثْنَيْنِ، وَطَعَامُ الِاثْنَيْنِ، يَكْفِي الْأَرْبَعَةَ، وَطَعَامُ الْأَرْبَعَةِ، يَكْفِي الثَّمَانِيَةَ»


Ibn-Majah-364

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

364. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»


Ibn-Majah-363

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

363.

…அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

உங்களில் ஒருவரின் (தண்ணீர்) பாத்திரத்தில் நாய் குடித்தால் அவர் அப்பாத்திரத்தை ஏழு முறை கழுவட்டும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


رَأَيْتُ أَبَا هُرَيْرَةَ يَضْرِبُ جَبْهَتَهُ، بِيَدِهِ، وَيَقُولُ: يَا أَهْلَ الْعِرَاقِ أَنْتُمْ تَزْعُمُونَ أَنِّي أَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، لِيَكُونَ، لَكُمُ الْمَهْنَأُ، وَعَلَيَّ الْإِثْمُ، أَشْهَدُ لَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِذَا وَلَغَ الْكَلْبُ فِي إِنَاءِ أَحَدِكُمْ، فَلْيَغْسِلْهُ سَبْعَ مَرَّاتٍ»


Next Page » « Previous Page