Category: இப்னுமாஜா

Ibn-Majah-813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

813. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரும் ‘அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன்’ என்றே தொழுகையைத் துவக்குபவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَبُو بَكْرٍ، وَعُمَرُ يَفْتَتِحُونَ الْقِرَاءَةَ بِ {الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ} [الفاتحة: 2]


Ibn-Majah-3330

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுதல்.

3330. கனிந்த பேரீத்தம்பழத்துடன் கனியாத பேரீத்தங்காயை சாப்பிடுங்கள். புதிய பேரீத்தம்பழத்துடன் பழைய பேரீத்தம்பழத்தை சாப்பிடுங்கள். ஏனெனில் இதனால் ஷைத்தான் கோபம் கொள்கிறான். மேலும் அவன், “புதிய பேரீத்தம்பழத்துடன் பழைய பேரீத்தம்பழத்தை சாப்பிடும் அளவிற்கு ஆதமுடைய மகன் உயிர்வாழ்கிறான் என்றும் கூறுவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«كُلُوا الْبَلَحَ بِالتَّمْرِ، كُلُوا الْخَلَقَ بِالْجَدِيدِ، فَإِنَّ الشَّيْطَانَ يَغْضَبُ، وَيَقُولُ بَقِيَ ابْنُ آدَمَ، حَتَّى أَكَلَ الْخَلَقَ بِالْجَدِيدِ»


Ibn-Majah-302

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

கழிவறையில் அல்லாஹ்வை நினைவு கூறுதல், மோதிரத்தை அணிந்து செல்லுதல்.

302. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எல்லா நிலைகளிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: உர்வா (ரஹ்)


أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ»


Ibn-Majah-3499

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3499.


«كَانَتْ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُكْحُلَةٌ، يَكْتَحِلُ مِنْهَا ثَلَاثًا، فِي كُلِّ عَيْنٍ»


Ibn-Majah-3454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3454. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் பனூ இஸ்ராயீல் சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கிவைத்த “மன்னு” வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணமாகும்.

அறிவிப்பவர்: ஸயீத் பின் ஸைத் (ரலி)


«أَنَّ الْكَمْأَةَ مِنَ الْمَنِّ، الَّذِي أَنْزَلَ اللَّهُ عَلَى بَنِي إِسْرَائِيلَ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»


Ibn-Majah-3455

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3455. …அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சமையல் காளான் (பனூ இஸ்ரவேலர்களுக்கு வழங்கப்பட்ட) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.

அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


كُنَّا نَتَحَدَّثُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرْنَا الْكَمْأَةَ، فَقَالُوا: هُوَ جُدَرِيُّ الْأَرْضِ، فَنُمِيَ الْحَدِيثُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «الْكَمْأَةُ مِنَ الْمَنِّ، وَالْعَجْوَةُ مِنَ الْجَنَّةِ، وَهِيَ شِفَاءٌ مِنَ السَّمِّ»


Ibn-Majah-3886

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3886.


إِذَا خَرَجَ الرَّجُلُ مِنْ بَابِ بَيْتِهِ، أَوْ مِنْ بَابِ دَارِهِ، كَانَ مَعَهُ مَلَكَانِ مُوَكَّلَانِ بِهِ، فَإِذَا قَالَ: بِسْمِ اللَّهِ قَالَا: هُدِيتَ، وَإِذَا قَالَ: لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ قَالَا: وُقِيتَ، وَإِذَا قَالَ: تَوَكَّلْتُ عَلَى اللَّهِ قَالَا: كُفِيتَ، قَالَ: فَيَلْقَاهُ قَرِينَاهُ فَيَقُولَانِ: مَاذَا تُرِيدَانِ مِنْ رَجُلٍ قَدْ هُدِيَ وَكُفِيَ وَوُقِيَ؟


Ibn-Majah-3885

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3885. நபி (ஸல்) அவர்கள் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது, “பிஸ்மில்லாஹ், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், அத்துக்லானு அலல்லாஹ்..

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகிறேன். அல்லாஹ்வின் உதவியில்லாமல் பாவங்களிலிருந்து விலகவோ, நல்லறங்கள் புரிய ஆற்றல் பெறவோ மனிதனால் இயலாது. சார்ந்திருத்துல் அவனை மட்டுமே)

என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ قَالَ: «بِسْمِ اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، التُّكْلَانُ عَلَى اللَّهِ»


Ibn-Majah-1199

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1199. ஃஸுப்ஹுக்கு முன் (சுன்னத்தான) இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தனது வலது புறம்) ஒருக்களித்து படுத்துக் கொள்வார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا صَلَّى رَكْعَتَيِ الْفَجْرِ اضْطَجَعَ»


Ibn-Majah-233

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

233. அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்நாள் நிகழ்த்திய உரையில், “இங்கே வருகை தந்திருப்பவர் வராதவருக்கு இச்செய்தியைக் கூறி விடவேண்டும்; ஏனெனில், வருகை தந்திருப்பவர் அவரை விட நன்கு புரிந்து கொள்ளும் ஒருவருக்கு அச்செய்தியை எடுத்துச் சொல்லி விடக் கூடும்’ என்று கூறினார்கள்.


خَطَبَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَوْمَ النَّحْرِ، فَقَالَ: «لِيُبَلِّغِ الشَّاهِدُ الْغَائِبَ، فَإِنَّهُ رُبَّ مُبَلَّغٍ يَبْلُغُهُ أَوْعَى لَهُ مِنْ سَامِعٍ»


Next Page » « Previous Page