Category: இப்னுமாஜா

Ibn-Majah-1404

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1404. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

மேற்கண்ட செய்தி வேறு அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَهُ


Ibn-Majah-1405

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1405. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் தொழுவதானது, மற்றப் பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும்; (மக்காவிலுள்ள) “மஸ்ஜிதுல் ஹராம்” பள்ளிவாசலைத் தவிர.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


«صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ»


Ibn-Majah-3108

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3108. அபூஸலமா பின்அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனம் “ஹஸ்வரா” என்ற இடத்தில் நின்றிருக்கும் போது அதன்மீதமர்ந்தவர்களாக, மக்காவை நோக்கி, “நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! (என்னுடைய சமுதாயத்தினரால்) உன்னை விட்டும் நான் வெளியேற்றப்படாமலிருந்தால் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)

என்று கூறியதை நான் பார்த்தேன் என அப்துல்லாஹ் பின் அதீ (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.


أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَدِيِّ بْنِ الْحَمْرَاءِ، قَالَ لَهُ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ عَلَى نَاقَتِهِ، وَاقِفٌ بِالْحَزْوَرَةِ يَقُولُ: «وَاللَّهِ إِنَّكِ، لَخَيْرُ أَرْضِ اللَّهِ، وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَيَّ، وَاللَّهِ لَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ، مَا خَرَجْتُ»


Ibn-Majah-970

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

970. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் (அல்லாஹ்வால்) ஏற்றுக்கொள்ளப்படாது. (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர். நேரம் தவறித் தொழுபவர். சுதந்திரமான மனிதனை அடிமையாக்கியவர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)


«ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ، الرَّجُلُ يَؤُمُّ الْقَوْمَ وَهُمْ لَهُ كَارِهُونَ، وَالرَّجُلُ لَا يَأْتِي الصَّلَاةَ إِلَّا دِبَارًا – يَعْنِي بَعْدَ مَا يَفُوتُهُ الْوَقْتُ – وَمَنْ اعْتَبَدَ، مُحَرَّرًا»


Ibn-Majah-971

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூவரின் தொழுகைகள் அவர்களின் தலைக்கு மேல் ஒரு சாண் அளவும் (கூட) உயர்த்தப்படாது. (அவர்கள் யாரெனில்) மக்கள் வெறுத்தும் அவர்களுக்குத் தலைமை ஏற்பவர்; கணவன் தன் மீது கோபமாக இருக்கும் நிலையில் இரவைக் கழித்த பெண்; தங்களுக்குள் நட்புறவை முறித்துக் கொண்ட இரு சகோதரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


ثَلَاثَةٌ لَا تُرْفَعُ صَلَاتُهُمْ فَوْقَ رُءُوسِهِمْ شِبْرًا: رَجُلٌ أَمَّ قَوْمًا وَهُمْ لَهُ كَارِهُونَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَأَخَوَانِ مُتَصَارِمَانِ


Ibn-Majah-45

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

45.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ، وَعَلَا صَوْتُهُ، وَاشْتَدَّ غَضَبُهُ، كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ: «صَبَّحَكُمْ مَسَّاكُمْ» وَيَقُولُ: «بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ، وَيَقْرِنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى» ثُمَّ يَقُولُ: «أَمَّا بَعْدُ، فَإِنَّ خَيْرَ الْأُمُورِ كِتَابُ اللَّهِ، وَخَيْرُ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ» وَكَانَ يَقُولُ: «مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ، وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا، فَعَلَيَّ وَإِلَيَّ»


Ibn-Majah-2470

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2470.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:நான் அல்லாஹ் கூறியதாக உங்களுக்கு கூறுபவற்றை (பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்.) ஏனெனில் நான் அல்லாஹ்வின் மீது பொய்யாகக் கூறவே மாட்டேன்….


مَرَرْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَخْلٍ، فَرَأَى قَوْمًا يُلَقِّحُونَ النَّخْلَ، فَقَالَ: «مَا يَصْنَعُ هَؤُلَاءِ؟» قَالُوا: يَأْخُذُونَ مِنَ الذَّكَرِ فَيَجْعَلُونَهُ فِي الْأُنْثَى، قَالَ: «مَا أَظُنُّ ذَلِكَ يُغْنِي شَيْئًا» ، فَبَلَغَهُمْ، فَتَرَكُوهُ، فَنَزَلُوا عَنْهَا، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” إِنَّمَا هُوَ الظَّنُّ، إِنْ كَانَ يُغْنِي شَيْئًا فَاصْنَعُوهُ، فَإِنَّمَا أَنَا بَشَرٌ مِثْلُكُمْ، وَإِنَّ الظَّنَّ يُخْطِئُ وَيُصِيبُ، وَلَكِنْ مَا قُلْتُ لَكُمْ: قَالَ اللَّهُ، فَلَنْ أَكْذِبَ عَلَى اللَّهِ


Ibn-Majah-2471

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2471.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:உங்கள் உலக காரியங்களில் ஏதேனும் ஒரு காரியமாக இருக்குமென்றால் நீங்கள்தான் அதனை மிகவும் அறிந்தவர்கள். உங்கள் மார்க்க விஷயமாக இருந்தால் என்னிடம்தான் கேட்க வேண்டும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி­)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَمِعَ أَصْوَاتًا، فَقَالَ: «مَا هَذَا الصَّوْتُ؟» قَالُوا: النَّخْلُ يَأْبِرُونَهُ، فَقَالَ: «لَوْ لَمْ يَفْعَلُوا لَصَلَحَ» ، فَلَمْ يُؤَبِّرُوا عَامَئِذٍ، فَصَارَ شِيصًا، فَذَكَرُوا ذَلِكَ لِلنَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «إِنْ كَانَ شَيْئًا مِنْ أَمْرِ دُنْيَاكُمْ، فَشَأْنُكُمْ بِهِ، وَإِنْ كَانَ شَيْئًا مِنْ أَمْرِ دِينِكُمْ، فَإِلَيَّ»


Ibn-Majah-4310

ஹதீஸின் தரம்: Pending

4310.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய பரிந்துரை என்னுடைய சமுதாயத்தில் பெரும்பாவங்கள் செய்வதர்களுக்கு உரியதாகும்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி­)


«إِنَّ شَفَاعَتِي يَوْمَ الْقِيَامَةِ لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي»


Ibn-Majah-1897

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1897. …என்னுடைய திருமண தினத்தின் காலையில் நபியவர்கள் என்னிடத் தில் வந்தார்கள். (அப்போது) என்னிடத்தில் இரண்டு சிறுமிகள், பத்ரு போரில் கொல்லப்பட்ட எனது பெற்றோரை (நினைத்து) கவலைப் பட்டு பாட்டு பாடிக் கொண்டிருந்தார்கள். “எங்களிடத்தில் நாளை நடக்கவிருப்பதை அறியும் நபி இருக்கிறார்‘ என்று அதிலே அவ்விருவரும் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இவ்வாறு நீங்கள் கூறாதீர்கள். அல்லாஹ்வைத் தவிர நாளை நடப்பதை யாரும் அறிய மாட்டார்” என்று கூறினார்கள்…

அறிவிப்பவர்: ருபைய்யிஉ பின்த் முஅவ்வித் (ரலி)


كُنَّا بِالْمَدِينَةِ يَوْمَ عَاشُورَاءَ، وَالْجَوَارِي يَضْرِبْنَ بِالدُّفِّ، وَيَتَغَنَّيْنَ، فَدَخَلْنَا عَلَى الرُّبَيِّعِ بِنْتِ مُعَوِّذٍ، فَذَكَرْنَا ذَلِكَ لَهَا، فَقَالَتْ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَبِيحَةَ عُرْسِي، وَعِنْدِي جَارِيَتَانِ يَتَغَنَّيَانِ، وَتَنْدُبَانِ آبَائِي الَّذِينَ قُتِلُوا يَوْمَ بَدْرٍ، وَتَقُولَانِ، فِيمَا تَقُولَانِ: وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدِ، فَقَالَ: «أَمَّا هَذَا فَلَا تَقُولُوهُ، مَا يَعْلَمُ مَا فِي غَدٍ إِلَّا اللَّهُ»


Next Page » « Previous Page