Category: இப்னுமாஜா

Ibn-Majah-1733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

ஆஷூரா நாளில் நோன்பு வைத்தல்.

1733. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம்) நாளில் நோன்பு நோற்று வந்தார்கள். மேலும், அந்த நாளில் நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிடுவார்கள்.


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يَصُومُ عَاشُورَاءَ وَيَأْمُرُ بِصِيَامِهِ»


Ibn-Majah-1737

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1737.


أَنَّهُ ذُكِرَ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمُ عَاشُورَاءَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كَانَ يَوْمًا يَصُومُهُ أَهْلُ الْجَاهِلِيَّةِ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَصُومَهُ فَلْيَصُمْهُ، وَمَنْ كَرِهَهُ فَلْيَدَعْهُ»


Ibn-Majah-1646

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1646.


«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ تَعْجِيلِ صَوْمِ يَوْمٍ قَبْلَ الرُّؤْيَةِ»


Ibn-Majah-1645

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1645. ஸிலது பின் ஸுஃபர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ரமலானின் ஆரம்பமாக இருக்குமோ என்ற) சந்தேகத்திற்குரிய நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) நாங்கள் அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்களிடம் இருந்தபோது ஆட்டுக்கறி கொண்டு வந்து வைக்கப்பட்டது. நோன்பு வைத்திருந்த சிலர் விலகிச் சென்றனர். அதற்கு அம்மார் பின் யாஸிர் (ரலி) அவர்கள், சந்தேகத்திற்குரிய இந்த நாளில் (ஷஃபானின் முப்பதாம் நாளில்) யார் நோன்பு நோற்கிறாரோ அவர் அபுல்காஸிம்-நபி (ஸல்) அவர்களுக்கு மாறு செய்து விட்டார் என்றுக் கூறினார்கள்.


كُنَّا عِنْدَ عَمَّارٍ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَأُتِيَ بِشَاةٍ، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ هَذَا الْيَوْمَ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Ibn-Majah-1675

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1675.


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ عَلَيْهِمْ فِي يَوْمٍ كَانَ يَصُومُهُ، فَدَعَا بِإِنَاءٍ، فَشَرِبَ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذَا يَوْمٌ كُنْتَ تَصُومُهُ، قَالَ: «أَجَلْ، وَلَكِنِّي قِئْتُ»


Ibn-Majah-1221

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1221. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுதுக் கொண்டிருக்கும்போது) ஒருவருக்கு வாந்தி அல்லது சில்லுமூக்கு உடைதல் அல்லது கக்கல் அல்லது இச்சைக் கசிவு ஆகியவை ஏற்பட்டுவிட்டால் அவர் திரும்ப சென்று உளூச் செய்து விட்டு தமது தொழுகையை விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடரட்டும். இதற்கிடையே அவர் (யாரிடமும்) பேசிவிட வேண்டாம்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


«مَنْ أَصَابَهُ قَيْءٌ أَوْ رُعَافٌ أَوْ قَلَسٌ أَوْ مَذْيٌ، فَلْيَنْصَرِفْ، فَلْيَتَوَضَّأْ ثُمَّ لِيَبْنِ عَلَى صَلَاتِهِ، وَهُوَ فِي ذَلِكَ لَا يَتَكَلَّمُ»


Ibn-Majah-1676

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1676. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாருக்கு கட்டுப்படுத்த முடியாமல் (தானாக) வாந்தி வருகிறதோ அவர் நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடமை இல்லை. யார் வேண்டுமென்றே வாந்தி எடுக்கிறாரோ, அவர் மீது நோன்பை (களாவாக) மீண்டும் நிறைவேற்றுவது கடைமையாகும்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)


«مَنْ ذَرَعَهُ الْقَيْءُ فَلَا قَضَاءَ عَلَيْهِ، وَمَنِ اسْتَقَاءَ فَعَلَيْهِ الْقَضَاءُ»


Ibn-Majah-1746

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1746. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு.

அறிவிப்பவர்: ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِمْ، مِنْ غَيْرِ أَنْ يَنْقُصَ مِنْ أُجُورِهِمْ شَيْئًا»


Ibn-Majah-1690

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1690. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எத்தனையோ நோன்பாளிகள், பசித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) தங்களின் நோன்பினால் பெற்றுக்கொள்வதில்லை; இன்னும் இரவில் நின்று வணங்கும் எத்தனையோ பேர், இரவில் கண்விழித்திருந்ததைத் தவிர வேறு எதையும் (எந்த நன்மையையும்) பெற்றுக்கொள்வதில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«رُبَّ صَائِمٍ لَيْسَ لَهُ مِنْ صِيَامِهِ إِلَّا الْجُوعُ، وَرُبَّ قَائِمٍ لَيْسَ لَهُ مِنْ قِيَامِهِ إِلَّا السَّهَرُ»


Ibn-Majah-3205

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3205. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நாய்களும் உங்களைப் போன்ற (உயிருள்ள) சமுதாயங்களில் ஒரு சமுதாயமாக இல்லாவிட்டால் அவைகளை கொல்ல உங்களுக்கு கட்டளையிட்டிருப்பேன். என்றாலும் (மனிதர்களுக்கு தொல்லைதரும்) கன்னங்கரிய நாயை (மட்டும்) கொல்லுங்கள்.

எந்த கூட்டத்தினர் (தமது இல்லத்தில்) நாய் வளர்க்கின்றனரோ அவர்களுடைய நற்செயல்களி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு “கீராத்கள்” (கணிசமான) அளவுக்குக் குறைந்துவிடும்; கால்நடைகளைக் காவல் காப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ, விவசாயப் பண்ணைகளைப் பாதுகாப்பதற்காகவோ, வைத்திருக்கும் நாயைத் தவிர.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)


«لَوْلَا أَنَّ الْكِلَابَ أُمَّةٌ مِنَ الْأُمَمِ، لَأَمَرْتُ بِقَتْلِهَا، فَاقْتُلُوا مِنْهَا، الْأَسْوَدَ الْبَهِيمَ، وَمَا مِنْ قَوْمٍ اتَّخَذُوا كَلْبًا، إِلَّا كَلْبَ مَاشِيَةٍ، أَوْ كَلْبَ صَيْدٍ، أَوْ كَلْبَ حَرْثٍ، إِلَّا نَقَصَ مِنْ أُجُورِهِمْ، كُلَّ يَوْمٍ، قِيرَاطَانِ»


Next Page » « Previous Page