Category: இப்னுமாஜா

Ibn-Majah-1684

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1684. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) முத்தமிடுவார்கள். “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை போன்று உங்களில் தம் (உடல்) உணர்ச்சியை  அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்கள் யார் தான் இருக்கிறார்கள்? என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: காஸிம் பின் முஹம்மத் (ரஹ்)


كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «يُقَبِّلُ وَهُوَ صَائِمٌ، وَأَيُّكُمْ يَمْلِكُ إِرْبَهُ، كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْلِكُ إِرْبَهُ»


Ibn-Majah-1683

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1683. நபி (ஸல்) அவர்கள் நோன்பு மாதத்தில் (தம் மனைவியரை) முத்தமிடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «يُقَبِّلُ فِي شَهْرِ الصَّوْمِ»


Ibn-Majah-3812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன. அவை கடலின் நுரை போன்று (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةَ مَرَّةٍ، غُفِرَتْ لَهُ ذُنُوبُهُ، وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ


Ibn-Majah-3798

ஹதீஸின் தரம்: Pending

3798. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’

என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«مَنْ قَالَ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ، لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، كَانَ لَهُ عَدْلُ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكُنَّ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ، سَائِرَ يَوْمِهِ إِلَى اللَّيْلِ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا أَتَى بِهِ، إِلَّا مَنْ قَالَ أَكْثَرَ»


Ibn-Majah-1661

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1661.


«صَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي السَّفَرِ، وَأَفْطَرَ»


Ibn-Majah-3660

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3660. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கின்தார் என்பது 12 ஆயிரம் ஊக்கியாவாகும். அதில் ஒவ்வொரு ஊக்கியாவும் வானம், பூமிக்கு இடைப்பட்டவைகளை விடவும் சிறந்ததாகும்.

மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதனுக்கு மறுமையில் அந்தஸ்து உயர்த்தப்படும். உடனே அவன்  இது எதனால் என்று கேட்பான். அப்போது உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்கு இந்த அந்தஸ்து கிடைத்தது)” என்று கூறப்படும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«الْقِنْطَارُ اثْنَا عَشَرَ أَلْفَ أُوقِيَّةٍ، كُلُّ أُوقِيَّةٍ خَيْرٌ مِمَّا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ»

وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ فَيَقُولُ: أَنَّى هَذَا؟ فَيُقَالُ: بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ


Ibn-Majah-1660

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

1660. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«الْفِطْرُ يَوْمَ تُفْطِرُونَ، وَالْأَضْحَى يَوْمَ تُضَحُّونَ»


Ibn-Majah-1698

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1698. நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நீடித்துள்ளனர். நீங்கள் நோன்பு துறப்பதை விரைவுபடுத்துங்கள். யூதர்கள் நோன்பு துறப்பதை தாமதப்படுத்துகின்றனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْفِطْرَ، عَجِّلُوا الْفِطْرَ؛ فَإِنَّ الْيَهُودَ يُؤَخِّرُونَ»


Ibn-Majah-1697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1697. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நோன்பு துறப்பதை விரைவுபடுத்தும் காலமெல்லாம் மக்கள் நன்மையில் நிலைத்திருப்பார்கள்.

அறிவிப்பவர்: சஹ்ல் பின் ஸஅத் (ரலி)


«لَا يَزَالُ النَّاسُ بِخَيْرٍ مَا عَجَّلُوا الْإِفْطَارَ»


Ibn-Majah-1828

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1828.


«أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَدَقَةِ الْفِطْرِ قَبْلَ أَنْ تُنْزَلَ الزَّكَاةُ، فَلَمَّا نَزَلَتِ الزَّكَاةُ، لَمْ يَأْمُرْنَا، وَلَمْ يَنْهَنَا، وَنَحْنُ نَفْعَلُهُ»


Next Page » « Previous Page