Category: இப்னுமாஜா

Ibn-Majah-1511

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1511. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம், மரணித்த போது அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாத் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், “இவருக்குச் சொர்க்கத்தில் பாலூட்டும் அன்னை உண்டு .

இவர் உயிரோடு இருந்திருந்தால் மிக்க உண்மையாளராகவும், நபியாகவும் இருந்திருப்பார்.

இவரின் கிப்தி கிளையைச் சேர்ந்த தாய்மாமன்கள் விடுதலையாகி இருப்பார்கள். அவர்களில் எவரும் அடிமையாக இருக்கமாட்டார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


لَمَّا مَاتَ إِبْرَاهِيمُ ابْنُ رَسُولِ اللَّهِ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ صَلَّى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَالَ: «إِنَّ لَهُ مُرْضِعًا فِي الْجَنَّةِ، وَلَوْ عَاشَ لَكَانَ صِدِّيقًا نَبِيًّا، وَلَوْ عَاشَ لَعَتَقَتْ أَخْوَالُهُ الْقِبْطُ، وَمَا اسْتُرِقَّ قِبْطِيٌّ»


Ibn-Majah-1527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1527. (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த “பெண்” ஒருவரைக் காணாததால் சில நாட்களுக்கு பின் அவரைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். “அவர் இறந்துவிட்டார்” என அவர்களுக்கு கூறப்பட்டது.

“நீங்கள் இதை எனக்குத் தெரிவித்திருக்கக் கூடாதா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அவரது மண்ணறைக்கு (சென்று) அவருக்காக (இறுதித்) தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ امْرَأَةً سَوْدَاءَ كَانَتْ تَقُمُّ الْمَسْجِدَ، فَفَقَدَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَسَأَلَ عَنْهَا بَعْدَ أَيَّامٍ، فَقِيلَ لَهُ: إِنَّهَا مَاتَتْ، قَالَ: «فَهَلَّا آذَنْتُمُونِي، فَأَتَى قَبْرَهَا، فَصَلَّى عَلَيْهَا»


Ibn-Majah-1490

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1490.


كَانَ إِذَا أُتِيَ بِجِنَازَةٍ، فَتَقَالَّ مَنْ تَبِعَهَا، جَزَّأَهُمْ ثَلَاثَةَ صُفُوفٍ، ثُمَّ صَلَّى عَلَيْهَا، وَقَالَ: إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا صَفَّ صُفُوفٌ ثَلَاثَةٌ مِنَ الْمُسْلِمِينَ عَلَى مَيِّتٍ إِلَّا أَوْجَبَ»


Ibn-Majah-1494

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

1494. ஒரு ஆண் ஜனாஸாவுக்கு நடத்தப்பட்ட தொழுகையில் அனஸ் (ரலி) அவர்களுடன் நான் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் ஜனாஸாவின் தலைக்கு நேராக நின்றார்கள். பின்னர் குரைஷ் குலத்துப் பெண்ணின் ஜனாஸாவைக் கொண்டு வந்தனர். ‘அபூ ஹம்ஸாவே! நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்’ என்று மக்கள் கேட்டனர். அப்போது கட்டிலின் மையப் பகுதிக்கு நேராக நின்றார்கள்.

‘நபி (ஸல்) அவர்கள் பெண் ஜனாஸாவுக்கு நீங்கள் நின்ற இடத்திலும், ஆண் ஜனாஸாவிற்கு நீங்கள் நின்ற இடத்திலும் நின்றதைப் பார்த்தீர்களா?’ என்று அலா பின் ஸியாத் (ரஹ்) கேட்டார். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் ஆம் என்றார்கள். தொழுகை முடிந்ததும் ‘இதைக் கவனத்தில் வையுங்கள்’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஃகாலிப் (ரஹ்)


رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ «صَلَّى عَلَى جِنَازَةِ رَجُلٍ، فَقَامَ حِيَالَ رَأْسِهِ، فَجِيءَ بِجِنَازَةٍ أُخْرَى، بِامْرَأَةٍ» فَقَالُوا: يَا أَبَا حَمْزَةَ صَلِّ عَلَيْهَا، «فَقَامَ حِيَالَ وَسَطِ السَّرِيرِ» فَقَالَ لَهُ الْعَلَاءُ بْنُ زِيَادٍ: يَا أَبَا حَمْزَةَ هَكَذَا رَأَيْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَامَ مِنَ الْجِنَازَةِ مُقَامَكَ مِنَ الرَّجُلِ، وَقَامَ مِنَ الْمَرْأَةِ مُقَامَكَ مِنَ الْمَرْأَةِ؟ قَالَ: ” نَعَمْ، فَأَقْبَلَ عَلَيْنَا، فَقَالَ: احْفَظُوا


Ibn-Majah-1481

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1481. வாகனத்தில் செல்பவர் ஜனாஸாவின் பின்னால் செல்ல வேண்டும்; நடந்து செல்பவர் விரும்பியவாறு செல்லலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الرَّاكِبُ خَلْفَ الْجِنَازَةِ وَالْمَاشِي مِنْهَا حَيْثُ شَاءَ»


Ibn-Majah-1507

ஹதீஸின் தரம்: விவரம் சேர்க்கவேண்டியுள்ளது

1507. சிறுவர்களுக்கும் தொழுகை நடத்தப்படும்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியேற்றுள்ளேன்.

அறிவிப்பவர் : முகீரா பின் ஷுஃபா (ரலி)


«الطِّفْلُ يُصَلَّى عَلَيْهِ»


Ibn-Majah-2200

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2200. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் விலையேற்றம் ஏற்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! விலைக் கட்டுப்பாடு செய்யக் கூடாதா?” என்று நபித் தோழர்கள் கேட்டனர். அல்லாஹ் தான் உணவளிப்பவன்; கூடுதலாக அளிப்பவன்; குறைவாக அளிப்பவன்; விலையைக் கட்டுப்படுத்துபவன்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

மேலும் அதைத் தொடர்ந்து, எவருடைய உயிருக்கும், உடமைக்கும் எந்த விதமான அநீதியும் செய்யாதவனாக இறைவனைச் சந்திக்க நான் விரும்புகின்றேன்” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


غَلَا السِّعْرُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالُوا: يَا رَسُولَ اللَّهِ قَدْ غَلَا السِّعْرُ فَسَعِّرْ لَنَا، فَقَالَ: «إِنَّ اللَّهَ هُوَ الْمُسَعِّرُ، الْقَابِضُ الْبَاسِطُ الرَّازِقُ، إِنِّي لَأَرْجُو أَنْ أَلْقَى رَبِّي وَلَيْسَ أَحَدٌ يَطْلُبُنِي بِمَظْلِمَةٍ فِي دَمٍ وَلَا مَالٍ»


Ibn-Majah-3566

ஹதீஸின் தரம்: More Info

3566. உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே அதையே  நீங்கள் அணியுங்கள்; உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ فَالْبَسُوهَا، وَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ»


Ibn-Majah-3497

ஹதீஸின் தரம்: More Info

3497. நீங்கள் பயன்படுத்தும் சுர்மாக்களில் சிறந்தது “இஸ்மித்”ஆகும். அது பார்வையைக் கூர்மையாக்கும்; இமைகளின் முடியை வளரச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُ أَكْحَالِكُمُ الْإِثْمِدُ، يَجْلُو الْبَصَرَ، وَيُنْبِتُ الشَّعَرَ»


Ibn-Majah-1472

ஹதீஸின் தரம்: More Info

1472. உங்கள் ஆடைகளில் சிறந்தது வெள்ளை ஆடையாகும். ஆகவே உங்களில் இறந்தோரை அதிலேயே கஃபனிடுங்கள்; அதையே  நீங்கள் அணியுங்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


«خَيْرُ ثِيَابِكُمُ الْبَيَاضُ، فَكَفِّنُوا فِيهَا مَوْتَاكُمْ، وَالْبَسُوهَا»


Next Page » « Previous Page