Category: இப்னுமாஜா

Ibn-Majah-2896

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

2896. …ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்…

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


قَامَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا يُوجِبُ الْحَجَّ؟ قَالَ: «الزَّادُ وَالرَّاحِلَةُ» قَالَ: يَا رَسُولَ اللَّهِ فَمَا الْحَاجُّ؟ قَالَ: «الشَّعِثُ، التَّفِلُ» وَقَامَ آخَرُ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْحَجُّ؟ قَالَ: «الْعَجُّ، وَالثَّجُّ»


Ibn-Majah-2895

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி


َكَانَتْ تَحْتَهُ ابْنَةُ أَبِي الدَّرْدَاءِ فَأَتَاهَا، فَوَجَدَ أُمَّ الدَّرْدَاءِ وَلَمْ يَجِدْ أَبَا الدَّرْدَاءِ، فَقَالَتْ لَهُ: تُرِيدُ الْحَجَّ، الْعَامَ؟ قَالَ: نَعَمْ، قَالَتْ: فَادْعُ اللَّهَ لَنَا بِخَيْرٍ، فَإِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: ” إِنَّ دَعْوَةَ الْمَرْءِ مُسْتَجَابَةٌ لِأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ، عِنْدَ رَأْسِهِ مَلَكٌ يُؤَمِّنُ عَلَى دُعَائِهِ، كُلَّمَا دَعَا لَهُ بِخَيْرٍ، قَالَ: آمِينَ، وَلَكَ بِمِثْلٍ ” قَالَ: ثُمَّ خَرَجْتُ إِلَى السُّوقِ فَلَقِيتُ أَبَا الدَّرْدَاءِ، فَحَدَّثَنِي عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِ ذَلِكَ


Ibn-Majah-3971

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3971. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் நல்லதைப் பேசட்டும், அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ، فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَسْكُتْ»


Ibn-Majah-3816

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3816. நான் ஒரு நாளில் எழுபது தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ سَبْعِينَ مَرَّةً»


Ibn-Majah-3815

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3815. நான் ஒரு நாளில் நூறு தடவை “அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி’

(பொருள்: நான் அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு கோரி அவன் பக்கமே திரும்புகின்றேன்) என்று கூறுகின்றேன்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«إِنِّي لَأَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فِي الْيَوْمِ مِائَةَ مَرَّةٍ»


Ibn-Majah-3716

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3716. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது.


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ، لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ، وَإِذَا صَافَحَهُ، لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا، وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ»


Ibn-Majah-3702

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3702. அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :

நாங்கள் நபி (ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்றுக் கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டித் தழுவலாமா ? என்றுக் கேட்டோம். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். என்றாலும் முஸாஃபஹா – கரம் பற்றி வாழ்த்து தெரிவித்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

 


قُلْنَا يَا رَسُولَ اللَّهِ، أَيَنْحَنِي بَعْضُنَا لِبَعْضٍ؟ قَالَ: «لَا» . قُلْنَا أَيُعَانِقُ بَعْضُنَا بَعْضًا؟ قَالَ: «لَا، وَلَكِنْ تَصَافَحُوا»


Ibn-Majah-3853

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3853. உங்களில் ஒருவர் அவசரப்படாதவரை அவரது பிரார்த்தனை ஏற்கப்பட்டுக் கொண்டேயிருக்கிறது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது, “அல்லாஹ்வின் தூதரே! “அவசரப்படுதல்” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு, “ஒருவர் நான் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தேன். ஆனால், அவன் என் பிரார்த்தனையை ஏற்பதாகத் தெரியவில்லை” என்று கூறுவதாகும், என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«يُسْتَجَابُ لِأَحَدِكُمْ مَا لَمْ يَعْجَلْ» قِيلَ: وَكَيْفَ يَعْجَلُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: ” يَقُولُ: قَدْ دَعَوْتُ اللَّهَ فَلَمْ يَسْتَجِبِ اللَّهُ لِي


Ibn-Majah-3828

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3828. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; (எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’) என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்…)

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


«إِنَّ الدُّعَاءَ هُوَ الْعِبَادَةُ» ثُمَّ قَرَأَ: {وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60]


Ibn-Majah-1155

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1155. நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய இரண்டு ரக்அத்துகளை தொழாமல் தூங்கி விட்டார்கள். சூரியன் உதயமான பின் அவ்விரண்டு ரக்அத்துகளை நிறைவேற்றினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

 


أَنَّ النَّبِيَّ _ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ _ «نَامَ عَنْ رَكْعَتَيِ الْفَجْرِ، فَقَضَاهُمَا بَعْدَ مَا طَلَعَتِ الشَّمْسُ»


Next Page » « Previous Page