Category: இப்னுமாஜா

Ibn-Majah-1465

ஹதீஸின் தரம்: More Info

1465. ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் பக்கீ எனும் மய்யவாடியிலிருந்து என்னிடம் வந்தார்கள். நான் அப்போது என் தலையில் வேதனையோடு இருந்தேன். ” என் தலைவலியே! என்று வேதனையில் கூறினேன்” அதை கேட்ட நபி (ஸல்) அவர்கள் என் ஆயிஷாவே! உன் தலைவலியால் நீ சிரமப்பட வேண்டாம் எனக்கு முன் நீ மரணித்தால் உன்னை குளிப்பாட்டி, கஃபன் அணிவித்து, ஜனாஸா தொழுகை நடத்தி, பின்னர் நானே உன்னை நல்லடக்கம் செய்வேன் என்றார்கள்…

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)


رَجَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنَ الْبَقِيعِ، فَوَجَدَنِي وَأَنَا أَجِدُ صُدَاعًا فِي رَأْسِي، وَأَنَا أَقُولُ: وَا رَأْسَاهُ، فَقَالَ: «بَلْ أَنَا يَا عَائِشَةُ وَا رَأْسَاهُ» ثُمَّ قَالَ: «مَا ضَرَّكِ لَوْ مِتِّ قَبْلِي، فَقُمْتُ عَلَيْكِ، فَغَسَّلْتُكِ، وَكَفَّنْتُكِ، وَصَلَّيْتُ عَلَيْكِ، وَدَفَنْتُكِ»


Ibn-Majah-1464

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1464. நபி(ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்பாத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)


«لَوْ كُنْتُ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ، مَا غَسَّلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ نِسَائِهِ»


Ibn-Majah-1576

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1576. மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ»


Ibn-Majah-1575

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1575. மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)


لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ


Ibn-Majah-1574

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1574. மண்ணறைகளை அதிகமாக சந்திக்கச் செல்லும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

அறிவிப்பவர்: ஹஸ்ஸான் பின் சாபித் (ரலி)


«لَعَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ زُوَّارَاتِ الْقُبُورِ»


Ibn-Majah-2351

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2351. நபி (ஸல்) அவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள்…

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، خَيَّرَ غُلَامًا بَيْنَ أَبِيهِ وَأُمِّهِ، وَقَالَ: «يَا غُلَامُ هَذِهِ أُمُّكَ وَهَذَا أَبُوكَ»


Ibn-Majah-3165

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3165. ஒவ்வொரு குழந்தையும் தன்னுடைய அகீகாவிற்கு அடைமானமாக இருக்கிறது. தனது ஏழாவது நாளில் தனக்காக (ஆடு) அறுக்கப்பட்டு, அந்தக் குழந்தையின் தலை முடி இறக்கப்பட்டு, பெயர் வைக்கப்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா பின் ஜுன்துப் (ரலி)


«كُلُّ غُلَامٍ مُرْتَهَنٌ بِعَقِيقَتِهِ، تُذْبَحُ عَنْهُ يَوْمَ السَّابِعِ، وَيُحْلَقُ رَأْسُهُ، وَيُسَمَّى»


Ibn-Majah-2886

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2886. அக்ரவு பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள்…

அறிவிப்பவர் :  இப்னு அப்பாஸ் (ரலி)


أَنَّ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ، سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ الْحَجُّ فِي كُلِّ سَنَةٍ، أَوْ مَرَّةً وَاحِدَةً؟ قَالَ: «بَلْ مَرَّةً وَاحِدَةً، فَمَنْ زَادَ، فَتَطَوَّعَ»


Ibn-Majah-1815

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

1815. தோல் நீக்கப்பட்ட கோதுமை, தோல் நீக்கப்படாத கோதுமை, பேரீச்சம் பழம், காய்ந்த திராட்சை, கம்பு ஆகிய ஐந்து தானியங்களில் மட்டுமே ஸகாத் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள்…

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி)


إِنَّمَا سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ فِي هَذِهِ الْخَمْسَةِ: فِي الْحِنْطَةِ، وَالشَّعِيرِ، وَالتَّمْرِ، وَالزَّبِيبِ، وَالذُّرَةِ


Ibn-Majah-43

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

43. …நான் உங்களை வெண்மையான வழியில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்…

அறிவிப்பவர் : இர்பாள் பின் ஸாரியா (ரலி)


وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ، وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ، فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ، فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا؟ قَالَ: «قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا، لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ، مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا، فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي، وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ، عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ، وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ، وَإِنْ عَبْدًا حَبَشِيًّا، فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ، حَيْثُمَا قِيدَ انْقَادَ»


Next Page » « Previous Page