தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Ibn-Majah-1464

‹ முந்தைய செய்திஅடுத்த செய்தி ›

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

1464. நபி(ஸல்) இறந்த அந்தச் சந்தர்ப்பம் மீண்டும் வரும் என்றிருந்தால் நபி (ஸல்) அவர்களை அவர்களின் மனைவியர் தான் அவர்களைக் குளிப்பாட்டுவோம் என்று ஆயிஷா (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர் : (ரஹ்)

அப்பாத் பின் அப்துல்லாஹ் (ரஹ்)

عباد بن عبد الله بن الزبير

தரம்: பலமானவர்


விபரங்கள்

இயற்பெயர்: அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் பின் அல்அவ்வாம்

தந்தை பெயர்: அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்

வம்சம்: அஸ்ஸுபைர் பின் அல்அவ்வாம்

புனைப்பெயர்: அபூ யஹ்யா

ஊர் பெயர்: மதீனா

பயணித்த ஊர்கள்: மதீனா, மக்கா

பிறப்பு: மதீனா

கால கட்டம்: தாபிஈ


வாழ்க்கைக் குறிப்பு

அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் பின் அல்அவ்வாம் ரஹ் அவர்கள் ஒரு தாபிஈ ஆவார். இவர் மக்காவில் தனது தந்தை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி அவர்களின் காலத்தில் நீதிபதியாக இருந்தார். இவர் தனது தந்தை அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் ரலி, பாட்டி அஸ்மா பின்த் அபீபக்ர் ரலி, ஆயிஷா ரலி மற்றும் ஸைத் பின் ஸாபித் ரலி போன்ற பல நபித்தோழர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.

இவரிடமிருந்து அவரது மகன் யஹ்யா பின் அப்பாத், ஹிஷாம் பின் உர்வா போன்றோர் ஹதீஸ்களை அறிவித்துள்ளனர். இமாம் நஸாயீ மற்றும் இப்னு ஹிப்பான் போன்ற அறிஞர்கள் இவரை பலமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர்.


ஆசிரியர்கள், மாணவர்கள்

யாரிடமிருந்து அறிவித்தார் (ஆசிரியர்கள்): அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அஸ்மா பின்த் அபீபக்ர், ஆயிஷா பின்த் அபீபக்ர், உமர் பின் கத்தாப் ரலி, ஸைத் பின் ஸாபித், அல்ஹாரிஸ் பின் குஸமா அல்அன்ஸாரீ

இவரிடமிருந்து அறிவித்தோர் (மாணவர்கள்): யஹ்யா பின் அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர், அப்துல் வாஹித் பின் ஹம்ஸா பின் அப்துல்லாஹ், ஹிஷாம் பின் உர்வா, முஹம்மத் பின் ஜஃபர் பின் அஸ்ஸுபைர், அப்துல்லாஹ் பின் அபீ முலைக்கா, ஸாலிஹ் பின் அஜ்லான், ஈஸா பின் மஃமர், முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் அப்பாத்

வேறு பெயர்கள்: அப்பாத் பின் அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர்


ஆதாரம்: muslimscholars.info (11250) · Should verify


بَابُ مَا جَاءَ فِي غَسْلِ الرَّجُلِ امْرَأَتَهُ، وَغَسْلِ الْمَرْأَةِ زَوْجَهَا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَحْمَدُ بْنُ خَالِدٍ الْوَهْبِيُّ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ:

«لَوْ كُنْتُ اسْتَقْبَلْتُ مِنْ أَمْرِي مَا اسْتَدْبَرْتُ، مَا غَسَّلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَيْرُ نِسَائِهِ»


Ibn-Majah-Tamil-.
Ibn-Majah-TamilMisc-.
Ibn-Majah-Shamila-1464.
Ibn-Majah-Alamiah-.
Ibn-Majah-JawamiulKalim-1453.



قال السندي والحديث قد رواه أبو داود ومع ذلك ذكره صاحب الزوائد أيضا فقال إسناده صحيح ورجاله ثقات. لأن محمد بن إسحاق وإن كان مدلسا لكن قد جاء عنه التصريح بالتحديث في رواية الحاكم وغيره.

  • இதில் வரும் முஹம்மது பின் இஸ்ஹாக் தத்லீஸ் செய்பவர் என்றாலும் அஹ்மத்-26306 எண்ணில் தனது ஆசிரியர் யஹ்யா பின் அப்பாதிடம் நேரடியாக கேட்டதாக வந்துள்ளது…

மேலும் பார்க்க : அபூதாவூத்-3141 .

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.