ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅
பாடம்:
(அல்லாஹ்விற்கு) நன்றி தெரிவிக்க ஸஜ்தா செய்தல்.
3932. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள், யமன்வாசிகளை இஸ்லாத்திற்கு அழைப்பதற்காக காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களை(யும், உடன் சிலரையும்) அனுப்பி வைத்தார்கள். என்றாலும் அவர்கள் இஸ்லாத்தை ஏற்கவில்லை. (இந்த செய்தியை கடிதம் மூலம் நபி (ஸல்) அவர்களுக்கு அனுப்பிவிட்டு அவர்கள் திரும்பி செல்ல ஆரம்பித்தனர்). அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் காலித் பின் வலீதின் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘அலீயே! காலிதின் சகாக்களில் ‘உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வரவிரும்புவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்கிச் செல்ல) விரும்புபவர் முன்னோக்கிச் செல்லட்டும்!’ என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள்’ என்று கூறினார்கள். நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந்தேன்.
பிறகு நாங்கள் யமன்வாசிகளை நோக்கி சென்று அவர்களை நெருங்கி விட்டோம். அவர்கள் எங்களிடம் வந்தனர். அங்கு அலீ (ரலி) அவர்கள் எங்களுக்கு தொழுகை நடத்தினார். பிறகு எங்களை ஒரே வரிசையில் நிற்க வைத்து யமன்வாசிகளுக்கு நபி (ஸல்) அவர்களின் கடிதத்தை படித்துக் காட்டினார். எனவே (யமன் வாசிகளான) ஹம்தான் கிளையினர் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றனர். உடனே அலீ
بَعَثَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِدَ بْنَ الْوَلِيدِ إِلَى أَهْلِ الْيَمَنِ يَدْعُوهُمْ إِلَى الْإِسْلَامِ فَلَمْ يُجِيبُوهُ، ثُمَّ إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ وَأَمَرَهُ أَنْ يَقْفُلَ خَالِدٌ وَمَنْ كَانَ مَعَهُ إِلَّا رَجُلٌ مِمَّنْ كَانَ مَعَ خَالِدٍ أَحَبَّ أَنْ يُعَقِّبَ مَعَ عَلِيٍّ رَضِيَ اللهُ عَنْهُ فَلْيُعَقِّبْ مَعَهُ قَالَ الْبَرَاءُ فَكُنْتُ مِمَّنْ عَقَّبَ مَعَهُ، فَلَمَّا دَنَوْنَا مِنَ الْقَوْمِ خَرَجُوا إِلَيْنَا فَصَلَّى بِنَا عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ وَصَفَّنَا صَفًّا وَاحِدًا، ثُمَّ تَقَدَّمَ بَيْنَ أَيْدِينَا، فَقَرَأَ عَلَيْهِمْ كِتَابَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَتْ هَمْدَانُ جَمِيعًا، فَكَتَبَ عَلِيٌّ رَضِيَ اللهُ عَنْهُ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِإِسْلَامِهِمْ، فَلَمَّا قَرَأَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكِتَابَ خَرَّ سَاجِدًا، ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَقَالَ: ” السَّلَامُ عَلَى هَمْدَانَ السَّلَامُ عَلَى هَمْدَانَ
சமீப விமர்சனங்கள்