Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-5037

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5037. இப்னு அபூஅதீக் (அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக்-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் என் தந்தையின் அடிமைப் பெண்ணுக்குப் பிறந்தவரான காசிம் பின் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மானும் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் ஒரு விஷயம் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். காசிம் (எதையும்) பிழையாகப் பேசுபவராக இருந்தார். அவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “உனக்கு என்ன நேர்ந்தது? நீ ஏன் இந்த என் சகோதரர் புதல்வரைப் போன்று (பிழையின்றி) பேசுவதில்லை? இந்தப் பழக்கம் உனக்கு எங்கிருந்து வந்தது என்று நான் அறிந்துகொண்டேன். இவரை இவருடைய தாய் வளர்த்தார். உன்னை உன்னுடைய தாய் வளர்த்தார்” என்று கூறினார்கள். இதைக் கேட்ட காசிம் கோபம் கொண்டு, ஆயிஷா (ரலி) அவர்கள்மீது எரிச்சலடைந்தார். ஆயிஷா (ரலி) அவர்களுக்கு முன் உணவுத் தட்டு கொண்டுவரப்பட்டபோது காசிம் எழுந்துவிட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்கே (போகிறாய்)?” என்று கேட்க, காசிம் “நான் தொழப்போகிறேன்” என்றார். ஆயிஷா (ரலி) அவர்கள், “உட்கார்!” என்றார்கள். காசிம் “நான் தொழப்போகிறேன்” என்று (மீண்டும்) கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள் “அவசரக்காரனே! உட்கார்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உணவு வந்து காத்திருக்கும்போதும், சிறுநீர் மற்றும் மலத்தை அடக்கிக்கொண்டும் தொழக்கூடாது”

تَحَدَّثْتُ أَنَا وَالْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ عِنْدَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا حَدِيثًا، وَكَانَ الْقَاسِمُ رَجُلًا لَحَّانَةً وَكَانَ لِأُمِّ وَلَدٍ، فَقَالَتْ لَهُ عَائِشَةُ: ” مَا لَكَ لَا تَتَحَدَّثُ كَمَا يَتَحَدَّثُ ابْنُ أَخِي هَذَا؟ أَمَا أَنِّي قَدْ عَلِمْتُ مِنْ أَيْنَ أَتَيْتَ، هَذَا أَدَّبَتْهُ أُمُّهُ، وَأَنْتَ أَدَّبَتْكَ أُمُّكَ “، قَالَ: فَغَضِبَ الْقَاسِمُ بْنُ مُحَمَّدٍ وَأَضَبَّ عَلَيْهَا، فَلَمَّا رَأَى مَائِدَةَ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا قَدْ أُتِيَ بِهَا قَامَ، فَقَالَتْ: أَيْنَ؟ قَالَ: أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ، قَالَ: إِنِّي أُصَلِّي، قَالَتْ: اجْلِسْ غُدَرُ، إِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” لَا صَلَاةَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُهُ الْأَخْبَثَانِ


Kubra-Bayhaqi-5027

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5027. “உங்களில் எவரும் உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜலத்தை அடக்கிக் கொண்டும் தொழவேண்டாம்” ‎என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ وَهُوَ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ


Kubra-Bayhaqi-5026

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

மல, ஜல இயற்கை உபாதை போன்ற ஏதாவது நிர்பந்தம் இருக்கும்போது அதிலிருந்து தூய்மையாகும் வரை ஜமாஅத் தொழுகையை விடுவதற்குள்ள அனுமதி.

5026. “உங்களில் எவரும் உணவு ‎தயாராக இருக்கும் போதும், மலஜலத்தை அடக்கிக் கொண்டும் தொழவேண்டாம்” ‎என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை இப்னு அபூமர்யம் அவர்கள், மற்றொரு அறிவிப்பாளர்தொடரிலும் அறிவித்துள்ளார்.


لَا يُصَلِّيَنَّ أَحَدُكُمْ بِحَضْرَةِ الطَّعَامِ، وَلَا وَهُوَ يُدَافِعُ الْأَخْبَثَيْنِ: الْغَائِطَ وَالْبَوْلَ


Kubra-Bayhaqi-5031

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

5031. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் எவரும் (மலம், ஜலம் கழிப்பது போன்ற) இயற்கை தேவை இருக்கும் நிலையில் தொழ வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


لَا يُصَلِّي أَحَدُكُمْ وَهُوَ يَجِدُ شَيْئًا مِنَ الْخَبَثِ


Kubra-Bayhaqi-20806

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

20806.


مَنْ كَانَ لَيِّنًا هَيِّنًا سَهْلًا حَرَّمَهُ اللهُ عَلَى النَّارِ

رَوَاهُ سَهْلُ بْنُ عَمَّارٍ , عَنْ مُحَاضِرٍ , فَقَالَ فِيهِ: عَنِ الْمُطَّلِبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ


Kubra-Bayhaqi-19923

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

19923.


يَا مُعَاذُ بْنَ جَبَلٍ إِذَا قَالَ الرَّجُلُ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ , إِنْ شَاءَ اللهُ , لَمْ تُطَلَّقْ، وَإِذَا قَالَ لِعَبْدِهِ: أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللهُ , فَإِنَّهُ حُرٌّ


Kubra-Bayhaqi-15122

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15122. ஹதீஸ் எண்-15121 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர்தொடரிலும் வந்துள்ளது.

ஹுமைத் பின் அர்ரபீஃ கூறியதாவது:

ஹுமைத் பின் மாலிக் அல்லக்மீ அறியப்பட்டவர் என்பதற்கு என்ன செய்தி இருக்கிறது? என்று என்னிடம் யஸீத் பின் ஹாரூன் கேட்டார். நான் அவர் என்னுடைய பாட்டனார் என்று கூறினேன். உடனே யஸீத் அவர்கள், என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! என்னை மகிழ்ச்சியடைச் செய்தாய்! இப்போது தான் இந்த செய்தி ஹதீஸாக மாறிவிட்டது என்று கூறினார்.

பைஹகீ இமாம் கூறுகிறார்:

இதில் ஒன்றும் பெரிதாக மகிழச்சிக் கிடையாது. ஹுமைத் பின் அர்ரபீஃ பின் ஹுமைத் பின் மாலிக் அல்கூஃபீ, அல்கஸ்ஸாஸ் மிகவும் பலவீனமானவர் ஆவார். யஹ்யா பின் மயீனும், மற்றவர்களும் இவரை பொய்யர் என்று கூறியுள்ளனர். மேலும் ஹுமைத் பின் மாலிக் அறியப்படாதவர் ஆவார்.

மேலும் மக்ஹூல், முஆத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பது முன்கதிஃ-அறிவிப்பாளர்தொடர் இடைமுறிவு ஏற்பட்ட செய்தியாகும்.

ஹுமைத் —> மக்ஹூல் —> காலித் பின் மஃதான் —> முஆத் (ரலி) என்றும், ஹுமைத் —> மக்ஹூல் —> மாலிக் பின் யுகாமிர் —> முஆத் (ரலி) என்றும் கூறப்படும் அறிவிப்பாளர்தொடர்கள் (மஹ்ஃபூல்) முன்னுரிமை பெற்ற செய்திகள் அல்ல. அல்லாஹ்வே நன்கறிந்தவன்.

இந்தக் கருத்தில் (வேறு) ஒரு பலவீனமான

قَالَ حُمَيْدٌ: قَالَ لِي يَزِيدُ بْنُ هَارُونَ: وَأِيُّ حَدِيثٍ لَوْ كَانَ حُمَيْدُ بْنُ مَالِكٍ اللَّخْمِيُّ مَعْرُوفًا؟ قُلْتُ: هُوَ جَدُّ أَبِي، قَالَ يَزِيدُ: سَرَرْتَنِي الْآنَ، صَارَ حَدِيثًا ,

قَالَ الشَّيْخُ: لَيْسَ فِيهِ كَبِيرُ سُرُورٍ فَحُمَيْدُ بْنُ رَبِيعِ بْنِ حُمَيْدِ بْنِ مَالِكٍ الْكُوفِيُّ الْخَزَّازُ ضَعِيفٌ جِدًّا، نَسَبَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَغَيْرُهُ إِلَى الْكَذِبِ , وَحُمَيْدُ بْنُ مَالِكٍ مَجْهُولٌ ,

وَمَكْحُولٌ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ مُنْقَطِعٌ , وَقَدْ قِيلَ عَنْ حُمَيْدٍ عَنْ مَكْحُولٍ عَنْ خَالِدِ بْنِ مَعْدَانَ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللهُ عَنْهُ , وَقِيلَ عَنْهُ عَنْ مَكْحُولٍ عَنْ مَالِكِ بْنِ يَخَامِرَ عَنْ مُعَاذٍ وَلَيْسَ بِمَحْفُوظٍ وَاللهُ أَعْلَمُ , وَقَدْ رُوِيَ فِي مُقَابَلَتِهِ حَدِيثٌ ضَعِيفٌ لَا يَجُوزُ الِاحْتِجَاجُ بِمِثْلِهِ


Kubra-Bayhaqi-15121

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15121. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் (அதன் சட்டம் என்ன?) என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு கூறினார்கள்.

அப்போது ஒருவர், அல்லாஹ்வின் துதரே! ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் (அதன் சட்டம் என்ன?) என்று கேட்டார். அதற்கவர்கள், “அவர் விடுதலைப் பெற்றுவிடுவார். ஏனெனில் அல்லாஹ், அடிமையை உரிமைவிடுவதை விரும்புகிறான். தலாக் விடப்படுவதை விரும்பமாட்டான்” என்று கூறினார்கள்.


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ رَجُلٍ قَالَ لِامْرَأَتِهِ: أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللهُ قَالَ: ” لَهُ اسْتِثْنَاؤُهُ ” قَالَ: فَقَالَ رَجُلٌ: يَا رَسُولَ اللهِ وَإِنْ قَالَ لِغُلَامِهِ أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللهُ؟ فَقَالَ: ” يَعْتِقُ لِأَنَّ اللهَ يَشَاءُ الْعِتْقَ وَلَا يَشَاءُ الطَّلَاقَ


Kubra-Bayhaqi-15120

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

15120. முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆதே! விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை. அடிமையை உரிமைவிடுவது போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான வேறு (செயல்) எதையும் அல்லாஹ் இந்த பூமியில் படைக்கவில்லை.

ஒருவர், தனது அடிமையிடம்,”அல்லாஹ் நாடினால்! நீ சுதந்திரமானவன் (விடுதலைபெற்றுவிட்டாய்)” என்று கூறினால் அவர் சுதந்திரமானவரே! அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை இல்லை.

ஒருவர் தனது மனைவியிடம், அல்லாஹ் நாடினால்! நீ தலாக் விடப்பட்டுவிட்டாய்” என்று கூறினால் அவருக்கு அதில் விதிவிலக்கு செய்ய உரிமை உண்டு. அவர் தலாக் கூறியவராக ஆகமாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மக்ஹூல் (ரஹ்)


قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” يَا مُعَاذُ مَا خَلَقَ اللهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ، وَمَا خَلَقَ اللهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ , فَإِذَا قَالَ الرَّجُلُ لِمَمْلُوكِهِ أَنْتَ حُرٌّ إِنْ شَاءَ اللهُ فَهُوَ حُرٌّ وَلَا اسْتِثْنَاءَ لَهُ , وَإِذَا قَالَ لِامْرَأَتِهِ أَنْتِ طَالِقٌ إِنْ شَاءَ اللهُ فَلَهُ الِاسْتِثْنَاءُ وَلَا طَلَاقَ عَلَيْهِ


Kubra-Bayhaqi-14894

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

விவாகரத்து செய்வது வெறுப்பிற்குரிய செயல் என்பது பற்றி வந்துள்ளவை.

14894. அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)


أَبْغَضُ الْحَلَالِ إِلَى اللهِ الطَّلَاقُ


Next Page » « Previous Page