Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-14896

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14896.


تَزَوَّجَ رَجُلٌ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ امْرَأَةً فَطَلَّقَهَا فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” أَتَزَوَّجْتَ؟ ” قَالَ: نَعَمْ قَالَ: ” ثُمَّ مَاذَا؟ ” قَالَ: ثُمَّ طَلَّقْتُ قَالَ: ” أَمِنْ رِيبَةٍ؟ ” قَالَ: لَا قَالَ: ” قَدْ يَفْعَلُ ذَلِكَ الرَّجُلُ ” قَالَ: ثُمَّ تَزَوَّجَ امْرَأَةً أُخْرَى فَطَلَّقَهَا فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ قَالَ مُعَرَّفٌ: فَمَا أَدْرِي أَعِنْدَ هَذَا أَوْ عِنْدَ الثَّالِثَةِ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” إِنَّهُ لَيْسَ شَيْءٌ مِنَ الْحَلَالِ أَبْغَضَ إِلَى اللهِ مِنَ الطَّلَاقِ


Kubra-Bayhaqi-14895

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14895. விவாகரத்தைப்போன்று அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பான வேறு எதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: முஹாரிப் பின் திஸார் (ரஹ்)

பைஹகீ இமாம் கூறுகிறார்:


مَا أَحَلَّ اللهُ شَيْئًا أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلَاقِ


Kubra-Bayhaqi-18617

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

18617. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்காகப் பூமியைச் சுருட்டிக் காட்டினான். நான் அதன் கிழக்குப் பகுதிகளையும் மேற்குப் பகுதிகளையும் பார்த்தேன். எனக்குச் சிவப்பு மற்றும் வெள்ளை நிறத்தாலான (தங்கம் மற்றும் வெள்ளியின்) இரு கருவூலங்கள் வழங்கப்பட்டன. எனக்குச் (பூமி) சுருட்டிக் காட்டப்பட்ட அளவுக்கு என் சமுதாயத்தாரின் ஆட்சி விரிவடையும்.

நான் என் இறைவனிடம் என் சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழித்துவிடாதே எனப் பிரார்த்தித்தேன். மேலும், “அவர்கள்மீது அவர்களிடையே உள்ள எதிரிகளைத் தவிர வெளி எதிரிகளைச் சாட்டி விடாதே!என்றும் பிரார்த்தித்தேன்…

என் இறைவன், “முஹம்மதே! நான் ஒன்றை முடிவு செய்துவிட்டால் அது மாற்றப்படாது. நான் உம்முடைய சமுதாயத்தைப் பஞ்சத்தால் ஒட்டுமொத்தமாக அழிக்கமாட்டேன் என்பதை உமக்கு (வாக்குறுதியாக) அளிக்கிறேன். மேலும், அவர்களுக்கெதிராக அவர்களிடையேயுள்ள எதிரிகள் அல்லாமல் வெளி எதிரிகளைச் சாட்டி, அவர்களது ஆட்சியை முற்றாக அழிக்கமாட்டேன்; எதிரிகள் பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அவர்களுக்கு எதிராகத் திரண்டாலும் சரியே! ஆனால், அவர்களிலேயே சிலர் சிலரை அழிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலரைச் சிறைபிடிப்பார்கள். அவர்களிலேயே சிலர் சிலருக்கு தொல்லைக் கொடுப்பார்கள்”

إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ زَوَى لِيَ الْأَرْضَ حَتَّى رَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا , وَأَعْطَانِي الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ , فَإِنَّ مُلْكَ أُمَّتِي سَيَبْلُغُ مَا زُوِيَ لِي مِنْهَا ,

وَإِنِّي سَأَلْتُ رَبِّي عَزَّ وَجَلَّ أَنْ لَا يُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ , وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَيُهْلِكَهُمْ , وَأَنْ لَا يَلْبِسَهُمْ شِيَعًا وَيُذِيقَ بَعْضَهُمْ بَأْسَ بَعْضٍ , فَقَالَ: يَا مُحَمَّدُ إِنِّي إِذَا أَعْطَيْتُ عَطَاءً فَلَا مَرَدَّ لَهُ , إِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا يُهْلَكُوا بِسَنَةٍ عَامَّةٍ , وَأَنْ لَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ غَيْرِهِمْ فَيَسْتَبِيحَهُمْ , وَلَوِ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بَيْنَ أَقْطَارِهَا حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا , وَبَعْضُهُمْ يَسْبِي بَعْضًا , وَبَعْضُهُمْ يَفْتِنُ بَعْضًا ,

وَإِنَّهُ سَيَرْجِعُ قَبَائِلُ مِنْ أُمَّتِي إِلَى الشِّرْكِ وَعِبَادَةِ الْأَوْثَانِ , وَإِنَّ مِنْ أَخْوَفِ مَا أَخَافُ الْأَئِمَّةَ الْمُضِلِّينَ , وَإِنَّهُ إِذَا وُضِعَ السَّيْفُ فِيهِمْ لَمْ يُرْفَعْ إِلَى يَوْمِ الْقِيَامَةِ ,

وَإِنَّهُ سَيَخْرُجُ فِي أُمَّتِي كَذَّابُونَ دَجَّالُونَ قَرِيبًا مِنْ ثَلَاثِينَ , وَإِنِّي خَاتَمُ الْأَنْبِيَاءِ لَا نَبِيَّ بَعْدِي ,

وَلَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي عَلَى الْحَقِّ مَنْصُورَةً حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ


Kubra-Bayhaqi-6173

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

6173.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُكَبِّرُ فِي الْعِيدَيْنِ فِي الرَّكْعَةِ الْأُولَى بِسَبْعِ تَكْبِيرَاتٍ , وَفِي الثَّانِيَةِ خَمْسَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ


Kubra-Bayhaqi-2456

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

பாடம்:

அல்ஹம்து ஸூராவிற்கு பின் (வேறு வசனங்களை) ஓதுதல்.

2456. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஃபாதிஹதுல் கிதாப்) திருக்குர்ஆனின் தோற்றுவாயான அல்ஹம்து ஸூராவையும், அதனுடன் கூடுதலாக (மற்ற) வசனத்தையும் ஓதாமல் தொழுகை இல்லை என்று மக்களுக்கு அறிவிக்கும்படி எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.


أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أُنَادِيَ: لَا صَلَاةَ إِلَّا بِقِرَاءَةِ فَاتِحَةِ الْكِتَابِ فَمَا زَادَ


Kubra-Bayhaqi-17711

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

17711.


دَخَلْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي الْمَسْجِدِ، فَذَكَرَ الْحَدِيثَ، إِلَى أَنْ قَالَ: فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ كَمِ النَّبِيُّونَ؟، قَالَ: ” مِائَةُ أَلْفِ نَبِيٍّ وَأَرْبَعَةٌ وَعِشْرُونَ أَلْفَ نَبِيٍّ “. قُلْتُ: كَمِ الْمُرْسَلُونَ مِنْهُمْ؟ قَالَ: ” ثَلَاثُمِائَةٍ وَثَلَاثَةَ عَشَرَ


Kubra-Bayhaqi-3689

ஹதீஸின் தரம்: ஹஸன் - நடுத்தரமான செய்தி

3689. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் இரவு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (இரவுத்தொழுகை) தொழ நின்றேன். (பிறகு) அவர்கள் நின்ற நிலையில் திருக்குர்ஆனின் 2 வது அத்தியாயமான ஸூரத்துல் பகராவை ஓதினார்கள். அதில் அல்லாஹ்வின் அருள் சம்பந்தமான வசனங்கள் வரும் போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் அருளைக் கேட்டார்கள். அதில் அல்லாஹ்வின் தண்டனை சம்பந்தமான வசனங்கள் வரும்போதெல்லாம் ஓதுவதை நிறுத்திவிட்டு அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாதுகாப்பு கேட்டார்கள். பின்பு அவர்கள் நிலையில் நின்ற அளவு ருகூஃவில் (குனிந்து) இருந்தார்கள். மேலும் அந்த ருகூவில், “ஸுப்ஹான தில்ஜபரூத்தி, வல்மலகூத்தி, வல்கிப்ரியாயி வல்அளமஹ்” (பொருள்: அடக்கி ஆளுதலும், அதிகாரமும், பெருமையும், மகத்துவமும் மிக்க அல்லாஹ் பரிசுத்தமானவன்) என்று கூறினார்கள்.

பிறகு ஸஜ்தாவில், நிலையில் நின்ற அளவு இருந்தார்கள். ஸஜ்தாவிலும் அந்த பிரார்த்தனையை கூறினார்கள். பின்பு நிலைக்கு எழுந்து 3 வது அத்தியாயமான ஸூரத்து ஆல இம்ரானை ஓதினார்கள். பிறகு அடுத்தடுத்த அத்தியாயங்களை ஓதினார்கள்.


قُمْتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَقَامَ فَقَرَأَ سُورَةَ الْبَقَرَةِ لَا يَمُرُّ بِآيَةِ رَحْمَةٍ إِلَّا وَقَفَ فَسَأَلَ وَلَا يَمُرُّ بِآيَةِ عَذَابٍ إِلَّا وَقَفَ فَتَعَوَّذَ قَالَ: ثُمَّ رَكَعَ بِقَدْرِ قِيَامِهِ يَقُولُ فِي رُكُوعِهِ: ” سُبْحَانَ ذِي الْجَبَرُوتِ وَالْمَلَكُوتِ وَالْكِبْرِيَاءِ وَالْعَظَمَةِ ” ثُمَّ سَجَدَ بِقَدْرِ قِيَامِهِ ثُمَّ قَالَ فِي سُجُودِهِ مِثْلَ ذَلِكَ، ثُمَّ قَامَ فَقَرَأَ بِآلِ عِمْرَانَ، ثُمَّ قَرَأَ سُورَةً سُورَةً


Kubra-Bayhaqi-5198

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5198. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிலர் எப்போதும் (தொழுகை வரிசையில்) பின்தங்கிக்கொண்டே இருப்பார்கள். முடிவில் அவர்களை அல்லாஹ், நரகத்தில் (இருந்து வெளியேற்றப்படுவர்களை விட்டும்) பின்தங்கச் செய்துவிடுவான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)


لَا يَزَالُ قَوْمٌ يَتَأَخَّرُونَ عَنِ الصَّفِّ الْأَوَّلِ حَتَّى يُؤَخِّرَهُمُ اللهُ عَزَّ وَجَلَّ فِي النَّارِ


Kubra-Bayhaqi-5186

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

5186.


أَقِيمُوا الصُّفُوفَ، وَحَاذُوا بَيْنَ الْمَنَاكِبِ، وَسُدُّوا الْخَلَلَ، وَلِينُوا بِأَيْدِي إِخْوَانِكُمْ، وَلَا تَذَرُوا فُرُجَاتٍ لِلشَّيْطَانِ، وَمَنْ وَصَلَ صَفًّا وَصَلَهُ اللهُ، وَمَنْ قَطَعَ صَفًّا قَطَعَهُ اللهُ عَزَّ وَجَلَّ


Kubra-Bayhaqi-14510

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

14510. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸயீத் பின் முஸய்யிப் (ரஹ்) அவர்களை (ஒரு திருமணத்தின்) முதல் நாள் விருந்துக்கு அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். இரண்டாம் நாளும் அழைக்கப்பட்டது. அதில் கலந்துகொண்டார்கள். மூன்றாம் நாள் அழைக்கப்பட்டபோது அதில் கலந்து கொள்ளவில்லை. மேலும் அவர்கள், இவர்கள் விளம்பரத்திற்காகவும், முகஸ்துதியுடனும் விருந்தளிக்கின்றனர் என்று கூறினார்கள் என எனக்கு ஒரு மனிதர் கூறினார்.


دُعِيَ أَوَّلَ يَوْمٍ فَأَجَابَ، وَالثَّانِيَ فَأَجَابَ، وَدُعِيَ الْيَوْمَ الثَّالِثَ فَلَمْ يُجِبْ وَقَالَ: ” أَهْلُ سُمْعَةٍ وَرِئَاءٍ


Next Page » « Previous Page