Category: ஸுனன் குப்ரா-பைஹகீ

Sunan al-Kubra lil Behaqi
Al-Sunan al-Kabir

Kubra-Bayhaqi-1858

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

1858. உளூ உள்ளவரைத் தவிர மற்றவர்கள் பாங்கு சொல்லக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

பைஹகீ கூறுகிறார் :

(இதன் அறிவிப்பாளர் தொடரில் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ  ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி ஸயீத் பின் அல்முஸய்யப் அவர்களிடமிருந்தும்ஸயீத் பின் அல்முஸய்யப் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தும், அபூஹுரைரா (ரலி) நபி (ஸல்) அவர்களிடமிருந்து  கேட்டதாக வந்துள்ளது. ஆனால் இதில் வரும் முஆவியா பின் யஹ்யா அஸ்ஸதஃபீ பலவீனமானவர்

வேறு அறிவிப்பில் யூனுஸும், மற்ற அறிவிப்பாளர்களும்  ஸுஹ்ரியிடமிருந்தும், ஸுஹ்ரி அவர்கள், அபூஹுரைரா (ரலி) கூறினார்கள் என்றும் இந்த செய்தி  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பாளர்தொடரே உண்மையான அறிவிப்பாளர்தொடர் ஆகும். (அதாவது இந்த செய்தி பலவீனமான, மவ்கூஃபான செய்தியாகும்)


لَا يُؤَذِّنُ إِلَّا مُتَوَضِّئٌ


Kubra-Bayhaqi-6460

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

6460. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணி வகுத்து (எதிரிகளை) சந்திக்கும் போது.

2. மழை பொழியும் போது.

3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது

4. கஅபாவைக் காணும் போது போன்ற நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)


تُفْتَحُ أَبْوَابُ السَّمَاءِ، وَيُسْتَجَابُ الدُّعَاءُ فِي أَرْبَعَةِ مَوَاطِنَ: عِنْدَ الْتِقَاءِ الصُّفُوفِ، وَعِنْدَ نُزُولِ الْغَيْثِ، وَعِنْدَ إِقَامَةِ الصَّلَاةِ، وَعِنْدَ رُؤْيَةِ الْكَعْبَةِ


Kubra-Bayhaqi-20339

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

20339. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “ஏதேனும் வழக்கு ஏற்படும்போது நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். அதைப் பற்றி அல்லாஹ்வின் வேதத்தில் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.

அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் நீ காணவில்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு முடிந்தவரை ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களின் நெஞ்சில் அடித்து விட்டு, “அல்லாஹ்வின் தூதரை மகிழ்ச்சிப்படுத்தும் செயலின் பக்கம் அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு, நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஹிம்ஸ் நகரைச் சேர்ந்த முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.

(தயாலிஸீ இமாம் கூறுகிறார்:

ஷுஅபா அவர்கள், ஒரு தடவை ஹாரிஸ் பின் அம்ர் —> முஆத் (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரில் இந்தச் செய்தியை

أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ قَالَ لَهُ: ” كَيْفَ تَقْضِي إِذَا عَرَضَ لَكَ قَضَاءٌ؟ ” قَالَ: أَقْضِي بِكِتَابِ اللهِ , قَالَ: ” فَإِنْ لَمْ تَجِدْهُ فِي كِتَابِ اللهِ؟ ” , قَالَ: أَقْضِي بِسُنَّةِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ” فَإِنْ لَمْ تَجِدْهُ فِي سُنَّةِ رَسُولِ اللهِ؟ ” , قَالَ: أَجْتَهِدُ بِرَأْيٍ , لَا آلُو، قَالَ: فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي , وَقَالَ: ” الْحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمَا يُرْضِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Kubra-Bayhaqi-8133

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

8133. மர்வான் பின் ஸாலிம் அல்முகஃப்பஉ கூறியதாவது:

(இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை பிடித்து ஒரு பிடிக்கு அதிகமாக உள்ளதை வெட்டியதைப் பார்த்தேன்.)

மேலும், நோன்பு துறக்கும் போது, தஹபல் ளமவு வப்தல்லத்தில் உரூக்கு வஸபத்தல் அஜ்ரு இன்ஷா அல்லாஹ். (பொருள்: தாகம் தணிந்தது, நரம்புகள் நனைந்தன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைத்துவிடும்) என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.


رَأَيْتُ ابْنَ عُمَرَ فَذَكَرَ الْحَدِيثَ، قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَفْطَرَ قَالَ: ” ذَهَبَ الظَّمَأُ، وَابْتَلَّتِ الْعُرُوقُ، وَثَبَتَ الْأَجْرُ إِنْ شَاءَ اللهُ تَعَالَى


Kubra-Bayhaqi-7908

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7908. ஃபஜ்ருக்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது…

அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி)

 

பைஹகீ இமாம் கூறுகிறார்கள்:

அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் இந்தச் செய்தியை நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். அவர் உறுதியானவர். வலிமையானவர்.


مَنْ لَمْ يُجْمِعِ الصِّيَامَ مَعَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ


Kubra-Bayhaqi-6189

ஹதீஸின் தரம்: நபித்தோழரின் செயல் - பலவீனமான செய்தி

6189. உமர் (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையிலும் பெருநாள் தொழுகையிலும் ஒவ்வொரு தக்பீரிலும்  கைகளை உயர்த்துவார்கள்.

அறிவிப்பவர்: பக்ர் பின் ஸவாதா

 


أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ كَانَ يَرْفَعُ يَدَيْهِ مَعَ كُلِّ تَكْبِيرَةِ فِي الْجِنَازَةِ وَالْعِيدَيْنِ


Kubra-Bayhaqi-6188

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்:

பெருநாள் தொழுகையில் தக்பீரின் போது கைகளை உயர்த்துதல்.

6188. நபி (ஸல்) அவர்கள் தொழத் தயாராகும் போது தமது இரு கைகளையும் உயர்த்துவார்கள். அவ்விரு கைகளையும் தோள் புஜத்திற்கு நேராக வைத்துப் பிறகு அதே நிலையில் தக்பீர் சொல்வார்கள். பிறகு ருகூவு செய்வார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்த விரும்பினால் கைகளை புஜங்களுக்கு நேராக அமைகின்ற வரை உயர்த்திபிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று சொல்வார்கள். பிறகு ஸஜ்தா செய்வார்கள். சுஜூதின் போது தமது கைகளை உயர்த்த மாட்டார்கள். தமது தொழுகை முடிகின்ற வரை ருகூவுக்கு முன்னால் சொல்கின்ற ஒவ்வொரு தக்பீரின் போதும் கைகளை உயர்த்துவரர்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)


كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ” إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى إِذَا كَانَتَا حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ كَبَّرَ وَهُمَا كَذَلِكَ وَرَكَعَ , وَإِذَا أَرَادَ أَنْ يَرْفَعَ رَفَعَهُمَا حَتَّى يَكُونَا حَذْوَ مَنْكِبَيْهِ , ثُمَّ قَالَ: ” سَمِعَ اللهُ لِمَنْ حَمِدَهُ ” , ثُمَّ يَسْجُدُ وَلَا يَرْفَعُ يَدَيْهِ فِي السُّجُودِ، وَيَرْفَعُهُمَا فِي كُلِّ تَكْبِيرَةٍ يُكَبِّرُهَا قَبْلَ الرُّكُوعِ حَتَّى تَنْقَضِيَ صَلَاتُهُ


Kubra-Bayhaqi-2455

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2455. இந்தப் பள்ளிவாசலில் 200 நபித்தோழர்களைக் கண்டுள்ளேன். இமாம் “கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன்’ எனக் கூறும் போது அந்த நபித் தோழர்களிடமிருந்து “ஆமீன்’ என்ற பெரும் சப்தத்தை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர் : அதா (ரஹ்)


أَدْرَكْتُ مِائَتَيْنِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَسْجِدِ إِذَا قَالَ الْإِمَامُ: {غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ} [الفاتحة: 7]، سَمِعْتُ لَهُمْ رَجَّةً بِآمِينَ ” وَرَوَاهُ إِسْحَاقُ الْحَنْظَلِيُّ، عَنْ عَلِيِّ بْنِ الْحَسَنِ، وَقَالَ رَفَعُوا أَصْوَاتَهُمْ بِآمِينَ


Kubra-Bayhaqi-5912

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5912. ஜும்ஆ நாளில் இமாம் உரையாற்றும் போது முழங்கால்களில் கைகளைக் கட்டி குத்துக்காலிட்டு உட்காருவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர்: முஆத் இப்னு அனஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْحَبْوَةِ يَوْمَ الْجُمُعَةِ وَالْإِمَامُ يَخْطُبُ


Kubra-Bayhaqi-5920

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

5920. அஷ்ஷரீத் பின் ஸுவைத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் எனது இடது கையை எனது முதுகுக்குப் பின்புறமாக வைத்து என்னுடைய கையின் உள்ளங்கையை ஊன்றி உட்கார்ந்திருந்த நிலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள்.

அப்போது அவர்கள், “அல்லாஹ் எவர்கள் மீது கோபம் கொண்டானோ அவர்களின் இருப்பைப் போன்று நீ அமர்ந்திருக்கின்றாயா? என்று (என்னிடம்) கூறினார்கள்.

ஈஸா பின் யூனுஸ் அவர்களிடமிருந்து அறிவிக்கும் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் அறிவிப்பில் ” நான் பள்ளிவாசலில் இவ்வாறு உட்கார்ந்திருந்த நிலையில்” என்று இடம்பெற்றுள்ளது.


مَرَّ بِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا جَالِسٌ هَكَذَا، وَقَدْ وَضَعَتُ يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي , وَاتَّكَأْتُ عَلَى أَلْيَةِ يَدِي , فَقَالَ: ” أَتَقْعُدُ قَعْدَةَ الْمَغْضُوبِ عَلَيْهِمْ “. لَفْظُ حَدِيثِ عَلِيِّ بْنِ بَحْرٍ ,

وَفِي رِوَايَةِ عَبْدِ الْوَهَّابِ , قَالَ: وَأَنَا جَالِسٌ فِي الْمَسْجِدِ وَاضِعًا يَدِي الْيُسْرَى خَلْفَ ظَهْرِي مُتَّكِئًا عَلَى أَلْيَةِ يَدِي


Next Page » « Previous Page