Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-9838

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9838.


إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ: اللهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ، وَإِذَا خَرَجَ فَلْيُسَلِّمْ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلْيَقُلْ: اللهُمَّ بَاعِدْنِي مِنَ الشَّيْطَانِ


Kubra-Nasaayi-10593

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10593. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘சுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி’ (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன்) என்று யார் ஒரு நாளில் நூறு முறை சொல்வாரோ அவரின் பாவங்களை அல்லாஹ் (மன்னித்து) அழித்துவிடுகின்றான். அவை கடலின் நுரைை விட (மிகுதியாக) இருந்தாலும் சரியே!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَالَ: سُبْحَانَ اللهِ وَبِحَمْدِهِ، حَطَّ اللهُ عَنْهُ ذُنُوبَهُ، وَإِنْ كَانَتْ أَكْثَرَ مِنْ زَبَدِ الْبَحْرِ


Kubra-Nasaayi-9769

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

9769. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘லாயிலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு, லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு, வலஹுல் ஹம்து. வஹ்வ அலா குல்லி ஷையின் கதீர்

(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கு புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் வலிமையுள்ளவன்)’

என்று ஒரு நாளில் நூறு முறை சொல்கிறவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்ததற்குச் சமாமா(க நற்பலன் பெற்றுக்கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரின் கணக்கிலிருந்து (அவர் செய்த) நூறு தவறுகள் அழிக்கப்படும். மேலும், அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிலிருந்து (பாதுகாக்கும்) அரணாகவும் அது அவருக்கு இருக்கும். மேலும், அவர் புரிந்த இந்த நற்செயலைவிடச் சிறந்ததை வேறு யாரும் செய்திட முடியாது; ஒருவர் இதைவிட அதிகமான (முறை இதை ஓதினால், அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)


مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، فِي يَوْمٍ مِائَةً مَرَّةٍ، كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ، وَكُتِبَ لَهُ مِائَةُ حَسَنَةٍ، وَمُحِيَ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ، وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ، وَلَمْ يَأْتِ أَحَدٌ بِأَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلَّا أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ


Kubra-Nasaayi-9878

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

9878. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஃபஜ்ரு தொழுகைக்கு பின், (மற்றவர்களிடம்) பேசுவற்கு முன் (கால்களை அகற்றாமல்) இருப்பில் அமர்ந்தவாறு “லாஇலாஹ இல்லல்லாஹு, வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல், முல்க்கு வ லஹுல், ஹம்து, யுஹ்யீ வ யுமீத்து பியதிஹில் கைர் வ ஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர்.

(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவனே உயிர்க் கொடுப்பவன். அவனே மரணிக்கச் செய்பவன். நன்மைகள் அவன் கைவசமே உள்ளன. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன்)

என்று பத்து முறை சொல்கிறவருக்கு ஒவ்வொரு முறைக்கும் பத்து நன்மைகளை அல்லாஹ் எழுதுகிறான். அவரின் கணக்கிலிருந்து (அவர் புரிந்த) பத்து தீமைகளை அல்லாஹ் அழிக்கிறான். சொர்க்கத்தில் அவருக்கு பத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும். ஒவ்வொரு முறைக்கும் அது ஒரு அடிமையை விடுதலை செய்வதற்குச் சமமான நற்பலன் பெற்றுக் கொடுக்கும். அந்த நாள் முழுதும் தீங்கிலிருந்து அவருக்கு பாதுகாப்பு கிடைக்கும். மேலும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அவர் பாதுகாக்கப்படுவார். அந்த நாளில் அல்லாஹ்விற்கு இணைவைக்கும் பாவத்தை தவிர வேறு எந்த பாவமும்  அவரை அழித்துவிடாது.

அறிவிப்பவர்:

مَنْ قَالَ دُبُرَ صَلَاةِ الْفَجْرِ وَهُوَ ثَانِي رِجْلِهِ قَبْلَ أَنْ يَتَكَلَّمَ: لَا إِلَهَ إِلَّا اللهُ، وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، يُحْيِي وَيُمِيتُ، بِيَدِهِ الْخَيْرُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ عَشْرَ مَرَّاتٍ، كَتَبَ اللهُ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا مِنْهُنَّ حَسَنَةً، وَمَحَى عَنْهُ سَيِّئَةً، وَرُفِعَ بِهَا دَرَجَةً، وَكَانَ لَهُ بِكُلِّ وَاحِدَةٍ قَالَهَا عَتَقُ رَقَبَةٍ، وَكَانَ يَوْمَهُ ذَلِكَ فِي حِرْزٍ مِنْ كُلِّ مَكْرُوهٍ، وَحُرِسَ مِنَ الشَّيْطَانِ، وَلَمْ يَنْبَغِ لِذَنْبٍ أَنْ يُدْرِكَهُ فِي ذَلِكَ الْيَوْمِ إِلَّا الشِّرْكُ بِاللهِ


Kubra-Nasaayi-2509

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2509.


كُنَّا عِنْدَ عَمَّارٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ الْقَوْمِ، قَالَ: إِنِّي صَائِمٌ، قَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ الْيَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ فَقَدْ عَصَى أَبَا الْقَاسِمِ صَلَّى الله عَلَيْه وَسَلَّمَ»


Kubra-Nasaayi-3118

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

3118. நோன்பு வைத்த நிலையில் வாந்தி எடுத்தவர் நோன்பை விட்டுவிடட்டும் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூரபாஹ் (ரஹ்)


«مَنْ قَاءَ وَهُوَ صَائِمٌ فَلْيُفْطِرْ»


Kubra-Nasaayi-3318

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

3318. யாரேனும் ஒரு நோன்பாளியை நோன்பு திறக்கச் செய்தால் நோன்பாளியின் கூலியில் எதுவும் குறையாமல் நோன்பு திறக்கச் செய்தவருக்கும் அது போன்ற கூலி உண்டு என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அதாஉ பின் அபூ ரபாஹ் (ரஹ்)


«مَنْ فَطَّرَ صَائِمًا كَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْتَقَصَ مِنْ أَجْرِ الصَّائِمِ شَيْءٌ»


Kubra-Nasaayi-6875

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

6875. ஹதீஸ் எண்-6874 இல் வரும் செய்தி இந்த அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: كَانَ إِذَا أَفْطَرَ عِنْدَ أَهْلِ بَيْتٍ، وَسَاقَ الْحَدِيثَ


Kubra-Nasaayi-10057

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

10057. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வீட்டாரிடம் நோன்பு துறந்தால் “உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு துறந்துள்ளனர். உங்களின் உணவை நல்லோர்கள் சாப்பிட்டனர். உங்களிடம் வானவர்கள் இறங்குகின்றனர்” என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ عِنْدَ أَهْلِ بَيْتٍ قَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ»


Kubra-Nasaayi-10056

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

10056. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு வீட்டாரிடம் நோன்பு துறந்தால் “உங்களிடத்தில் நோன்பாளிகள் நோன்பு துறந்துள்ளனர். உங்களின் உணவை நல்லோர்கள் சாப்பிட்டனர். உங்களுக்கு வானவர்கள் இறையருளை வேண்டுகின்றனர் என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


حَدَّثَ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا أَفْطَرَ عِنْدَ أَهْلِ بَيْتٍ قَالَ: «أَفْطَرَ عِنْدَكُمُ الصَّائِمُونَ، وَأَكَلَ طَعَامَكُمُ الْأَبْرَارُ، وَصَلَّتْ عَلَيْكُمُ الْمَلَائِكَةُ»


Next Page » « Previous Page