5891. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீதிபதிகள் மூன்று வகைப்படுவர். இருவர் நரகத்திலும், ஒருவர் சுவர்க்கத்திலும் புகுவர்.
1 . நீதியை அறிந்து அதன்படி தீர்ப்பளிப்பவர். இவர் சொர்க்கத்தில் நுழைவார்.
2 . நீதியை அறிந்தும் அதன்படி தீர்ப்பளிக்காமல், தீர்ப்பில் அநீதி செய்தவர். இவர் நரகத்தில் நுழைவார்.
3 . உண்மையை அறியாமல் தன்னுடைய அறியாமையுடனேயே மக்களுக்குத் தீர்ப்பு வழங்கியவர். இவர் நரகத்தில் நுழைவார்.
அறிவிப்பவர்: புரைதா (ரலி)
மேற்கண்ட ஹதீஸை அறிவித்த அபூஹாஷிம் அவர்கள் இந்த ஹதீஸ் மட்டும் இல்லாவிட்டால், ஒரு நீதிபதி ஆய்வு செய்து தீர்ப்பளித்தால் அவர் மீது எந்த குற்றமும் இல்லை என்று நாங்கள் கூறியிருப்போம்.
لَوْلَا حَدِيثُ ابْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقُلْتُ: إِنَّ الْقَاضِيَ إِذَا اجْتَهَدَ فَلَيْسَ عَلَيْهِ شَيْءٌ وَلَكِنْ قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْقُضَاةُ ثَلَاثَةٌ اثْنَانِ فِي النَّارِ، وَوَاحِدٌ فِي الْجَنَّةِ رَجُلٌ عَرَفَ الْحَقَّ، فَقَضَى بِهِ فَهُوَ فِي الْجَنَّةِ، وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ، فَلَمْ يَقْضِ بِهِ، وَجَارَ فِي الْحُكْمِ، فَهُوَ فِي النَّارِ، وَرَجُلٌ لَمْ يَعْرِفِ الْحَقَّ، فَقَضَى لِلنَّاسِ عَنْ جَهْلٍ فَهُوَ فِي النَّارِ»
சமீப விமர்சனங்கள்