Category: நஸயீ குப்ரா

As-Sunan al-Kubra

Kubra-Nasaayi-4289

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4289. இணைவைப்போருடன் உங்களுடைய பொருட்களாலும் கைகளாலும் நாவுகளாலும் ஜிஹாத் செய்யுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


«جَاهِدُوا الْمُشْرِكِينَ بِأَمْوَالِكُمْ وَأَيْدِيكُمْ وَأَلْسِنَتِكُمْ»


Kubra-Nasaayi-7786

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

7786. ஒருவர் தன்னுடைய காலை அங்கவடியில் (குதிரையில் ஏறுவதற்கு உதவும் வளையம்) வைத்துக் கொண்டு. “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அநியாயக்கார அரசனிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : தாரிக் பின் ஷிஹாப் (ரலி)


أَنَّ رَجُلًا سَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ وَضَعَ رِجْلَهُ فِي الْغَرْزِ، أَيُّ الْجِهَادِ أَفْضَلُ؟ قَالَ: «كَلِمَةُ حَقٍّ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ»


Kubra-Nasaayi-2345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2345. (ஒரு முறை) நபி(ஸல்) அவர்கள் நரகத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்கள். அப்போது அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரினார்கள். அப்போது தம் முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள். ( இப்படி மூன்று முறை செய்தார்கள்)

பிறகு, ‘பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இன் சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்)’ என்றார்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)

(அறிவிப்பாளர் ஷுஅபா (ரஹ்)  அவர்கள் கூறியதாவது:

(நபியவர்கள் நரகத்தைப் பற்றி) மூன்று முறை கூறி, மூன்று முறை அதனைவிட்டு அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி மூன்று முறை தம் முகத்தை திருப்பிக்கொண்டார்கள்)


قَالَ ذَكَرَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّارَ فَأَشَاحَ بِوَجْهِهِ وَتَعَوَّذَ مِنْهَا – ذَكَرَ شُعْبَةُ أَنَّهُ فَعَلَهُ ثَلَاثَ مَرَّاتٍ – ثُمَّ قَالَ: «اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ، فَإِنْ لَمْ تَجِدُوا فَبِكَلِمَةٍ طَيِّبَةٍ»


Kubra-Nasaayi-2344

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2344. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்திலிருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்.

அறிவிப்பவர் : அதீ பின் ஹாத்திம் (ரலி)


«اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ»


Kubra-Nasaayi-11365

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11365. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர்களுடன் சேர்ந்து வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)


«مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ عَلَيْهِ رِزْقُهُ أَوْ يُنْسَأَ فِي أَجَلِهِ فَلْيَصِلْ رَحِمَهُ»


Kubra-Nasaayi-11433

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

11433. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து நின்று, இது  “உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்பு கோரும் இடம் தானே?” என்று கூறியது.

அதற்கு அல்லாஹ் “உன்னை (உறவை) பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும் உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?” என்று கேட்டான். அதற்கு உறவு, “ஆம், என் இறைவா” என்று கூறியது. அல்லாஹ், “இது உனக்காக நடக்கும்” என்று கூறினான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

“நீங்கள் விரும்பினால் “நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள்மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?” (47:22-24) ஆகிய இறைவசனங்களை ஓதிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)


إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ خَلَقَ الْخَلْقَ , حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ قَامَتِ الرَّحِمُ , فَقَالَتْ: هَذَا مَكَانُ الْعَائِذِ مِنَ الْقَطِيعَةِ، قَالَ: أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ، وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ؟ , قَالَتْ: بَلَى يَا رَبِّ، قَالَ: فَهُوَ لَكِ ” , قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ” وَاقْرَءُوا إِنْ شِئْتُمْ {فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ أُولَئِكَ الَّذِينَ لَعَنَهُمُ اللهُ فَأَصَمَّهُمْ وَأَعْمَى أَبْصَارَهُمْ} [محمد: 23]


Kubra-Nasaayi-8719

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

8719. …நபி (ஸல்) அவர்கள் ஒரு போரை முடித்து விட்டுத் தம் தோழர்களுடன் வந்து கொண்டிருந்தார்கள். இளைப்பாறுவதற்காக ஒவ்வொருவரும் ஒரு மரத்தடியில் தங்கலானார்கள். நபி (ஸல்) அவர்கள் தனியாகச் சென்று ஒரு மரத்திற்கு அடியில் இளைப்பாறினார்கள்…

…திடீரென்று ஒருவர் நபி (ஸல்) அவர்களைக் கொலை செய்வதற்காகத் தன் கையில் வாளை எடுத்துக் கொண்டு, “முஹம்மதே! இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் காப்பாற்றுவான்” என்று கூறினார்கள்.

பின்பு அவர் கையில் இருந்த வாள் கீழே விழுந்தவுடன் நபியவர்கள் அந்த வாளை எடுத்துக் கொண்டு, “இப்போது உன்னை யார் காப்பாற்றுவார்? வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறேதுவும் கடவுள் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அதற்கு அவர், “இல்லை! இதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஆனால் இனிமேல் உங்களுக்கு எதிராக நான் போரிட மாட்டேன் என்று உறுதிமொழி அளிக்கிறேன்” என்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைத் தண்டிக்காமல் விட்டு விட்டார்கள். அந்த மனிதர் தன்னுடைய தோழர்களிடத்தில் சென்று, “மக்களிலேயே மிகவும் சிறந்த ஒருவரிடமிருந்து நான் வந்திருக்கிறேன்” என்று கூறினார்…

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، أَخْبَرَهُمَا أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةً قِبَلَ نَجْدٍ، فَلَمَّا قَفَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَفَلَ مَعَهُ، وَأَدْرَكَتْهُمُ الْقَائِلَةُ يَوْمًا يَعْنِي فِي وَادٍ كَثِيرِ الْعِضَاهِ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَتَفَرَّقَ النَّاسُ فِي الْعِضَاهِ يَسْتَظِلُّونَ بِالشَّجَرِ، وَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحْتَ ظِلِّ شَجَرَةٍ فَعَلَّقَ بِهَا سَيْفَهُ قَالَ جَابِرٌ: ” فَنِمْنَا نَوْمَةً، ثُمَّ إِذَا النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُونَا، فَأَجَبْنَاهُ فَإِذَا عِنْدَهُ أَعْرَابِيٌّ جَالِسٌ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ هَذَا اخْتَرَطَ سَيْفِي وَأَنَا نَائِمٌ فَاسْتَيْقَظْتُ وَهُوَ فِي يَدِهِ صَلْتًا» فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: «اللهُ» فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: «اللهُ» فَقَالَ: مَنْ يَمْنَعُكَ مِنِّي؟ فَقُلْتُ: «اللهُ، فَشَامَ السَّيْفَ، وَجَلَسَ، وَلَمْ يُعَاقِبْهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَدْ فَعَلَ ذَلِكَ»


Kubra-Nasaayi-9856

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

9856. நான் எந்தப் பிரார்த்தனை செவியேற்கப்படும்?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இரவில் கடைசியிலும் கடமையாக்கப்பட்ட தொழுகைக்குப் பின்னரும் கேட்கும் பிரார்த்தனை ஆகும்” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி)


قُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: «جَوْفَ اللَّيْلِ الْآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ»


Kubra-Nasaayi-10345

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

10345. “நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு! என்று சொல்ல வேண்டாம். வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திக்காது. ஏனெனில் அவனை நிர்ப்பந்திப்பவர் யாருமில்லை” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)


إِذَا دَعَا أَحَدُكُمْ فَلْيَعْزِمِ الْمَسْأَلَةَ، وَلَا يَقُلْ: أَعْطِنِي إِنْ شِئْتَ، فَإِنَّ اللهَ لَا مُسْتَكْرِهَ لَهُ


Kubra-Nasaayi-11400

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

11400. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்’ என்று உங்கள் இறைவன் கூறுகிறான்” என்ற (40:60) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)


فِي قَوْلِ اللهِ عَزَّ وَجَلَّ {وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60] قَالَ: «الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ» , ثُمَّ قَرَأَ {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ} [غافر: 60]

اللَّفْظُ لِهَنَّادٍ


Next Page » « Previous Page