3812. முஹாஜிர் பின் ளம்ரா கூறியதாவது:
அபூஸலமாவும், ஸயீத் பின் ஜுபைர் அவர்களும் சந்தித்துக்கொண்டனர். ஸயீத் பின் ஜுபைர் அவர்கள், அபூஸலமாவிடம் நபிமொழியை எங்களுக்கு கூறுங்கள். அறிவிப்பதில் உங்களை பின்பற்றுவோம் என்று கூறினார்கள்.
அதற்கு அபூஸலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு பயணத்தில் மூவர் இருந்தால் அவர்களில் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவர் இமாமத் செய்யட்டும். அவர் மற்றவர்களை விட வயதில் குறைந்தவராக இருந்தாலும் இமாமத் செய்யும் அவரே அவர்களின் அமீராவார்…
அபூஸலமா அவர்கள் கூறினார்:
சிறிய வயதாக இருந்தாலும் குர்ஆனை நன்கு ஓத தெரிந்தவரையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமீராக்க கூறினார்கள்.
«إِذَا كَانَ ثَلَاثَةٌ فِي سَفَرٍ فَلْيَؤُمَّهُمْ أَقْرَؤُهُمْ، فَإِنْ كَانَ أَصْغَرَهُمْ سِنًّا فَإِذَا أَمَّهُمْ فَهُوَ أَمِيرُهُمْ» قَالَ أَبُو سَلَمَةَ: فَذَاكُمْ أَمِيرٌ أَمَّرَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
சமீப விமர்சனங்கள்