Category: முஸ்லிம்

Muslim-4740

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

யூசுஃப் (அலை) அவர்களின் சிறப்புகள்.

4740. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! மக்களில் மிகவும் கண்ணியத்திற்குரியவர் யார்?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “மனிதர்களிலேயே இறைவனை அதிகமாக அஞ்சுபவர்தான்” என்று பதிலளித்தார்கள். உடனே மக்கள், “நாங்கள் தங்களிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை” என்று கூறினர்.

நபி (ஸல்) அவர்கள், “அப்படியென்றால், இறைவனின் உற்ற நண்பர் (இப்ராஹீம்) உடைய புதல்வரான இறைத்தூதர் (இஸ்ஹாக்) உடைய புதல்வரான இறைத்தூதர் (யஅகூப்) உடைய புதல்வரான இறைத்தூதர் யூசுஃப் (அலை) அவர்கள்தான்” என்று பதிலளித்தார்கள். மக்கள், “இதைப் பற்றியும் நாங்கள் தங்களிடம் கேட்கவில்லை” என்று கூறினர்.

உடனே நபி (ஸல்) அவர்கள், “அரபியரின் மூலகங்கள் (எனப்படும் அரபியர் பரம்பரைகள்) குறித்தா என்னிடம் கேட்கிறீர்கள்? அறியாமைக் காலத்தில் மக்களில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் தான்

قِيلَ يَا رَسُولَ اللهِ مَنْ أَكْرَمُ النَّاسِ؟ قَالَ: «أَتْقَاهُمْ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ: «فَيُوسُفُ نَبِيُّ اللهِ ابْنُ نَبِيِّ اللهِ ابْنِ نَبِيِّ اللهِ ابْنِ خَلِيلِ اللهِ» قَالُوا: لَيْسَ عَنْ هَذَا نَسْأَلُكَ، قَالَ «فَعَنْ مَعَادِنِ الْعَرَبِ تَسْأَلُونِي؟ خِيَارُهُمْ فِي الْجَاهِلِيَّةِ خِيَارُهُمْ فِي الْإِسْلَامِ، إِذَا فَقُهُوا»


Muslim-4739

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4739. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “யூனுஸ் பின் மத்தா அவர்களைவிட நான் சிறந்தவன் என்று (என்னைப் பற்றிக் கூறுவது) எந்த அடியாருக்கும் தகாது” என்று கூறினார்கள். இவ்வாறு யூனுஸ் (அலை) அவர்களை, அவர்களுடைய தந்தையுடன் இணைத்து (மத்தாவின் மகன் யூனுஸ் என்று) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 43


مَا يَنْبَغِي لِعَبْدٍ أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى ” وَنَسَبَهُ إِلَى أَبِيهِ


Muslim-4738

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 43

யூனுஸ் (அலை) அவர்கள் பற்றிய குறிப்பும், “நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன்” என்று (என்னைப் பற்றிக்) கூறுவது எந்த அடியாருக்கும் தகாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும்.

4738. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“என் அடியார் ஒருவர் (தம்மைப் பற்றி) நான் யூனுஸ் பின் மத்தா அவர்களைவிடச் சிறந்தவன் என்று கூறுவது அவருக்குத் தகாது” என்று அல்லாஹ் கூறினான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 43


أَنَّهُ ” قَالَ – يَعْنِي اللهَ تَبَارَكَ وَتَعَالَى – لَا يَنْبَغِي لِعَبْدٍ لِي – وقَالَ ابْنُ الْمُثَنَّى: لِعَبْدِي – أَنْ يَقُولَ: أَنَا خَيْرٌ مِنْ يُونُسَ بْنِ مَتَّى عَلَيْهِ السَّلَامُ ” قَالَ: ابْنُ أَبِي شَيْبَةَ مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، عَنْ شُعْبَةَ


Muslim-4737

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4737. மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நான் மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் தொழுதுகொண்டிருந்தார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச்செல்லப்பட்ட இரவில் கடந்து சென்றேன்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Book : 43


«مَرَرْتُ عَلَى مُوسَى وَهُوَ يُصَلِّي فِي قَبْرِهِ» وَزَادَ فِي حَدِيثِ عِيسَى «مَرَرْتُ لَيْلَةَ أُسْرِيَ بِي»


Muslim-4736

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4736. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் (மக்காவிலிருந்து பைத்துல் மக்திஸுக்கு) அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மணற்குன்றின் அருகில் மூசா (அலை) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் தமது அடக்கத்தலத்தினுள் நின்று தொழுதுகொண்டிருந்தார்கள்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் ஹத்தாப் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “மூசா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன்” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 43


أَتَيْتُ – وَفِي رِوَايَةِ هَدَّابٍ: مَرَرْتُ – عَلَى مُوسَى لَيْلَةَ أُسْرِيَ بِي عِنْدَ الْكَثِيبِ الْأَحْمَرِ، وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي قَبْرِهِ


Muslim-4735

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4735. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைத்தூதர்களுக்கிடையே (“ஒருவர் மற்றவரைவிடச் சிறந்தவர்” என) ஏற்றத்தாழ்வு கற்பிக்காதீர்கள்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர் களில் வந்துள்ளது.

Book : 43


«لَا تُخَيِّرُوا بَيْنَ الْأَنْبِيَاءِ»

وَفِي حَدِيثِ ابْنِ نُمَيْرٍ، عَمْرِو بْنِ يَحْيَى، حَدَّثَنِي أَبِي


Muslim-4734

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4734. மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் வாயிலாக மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “யூதர் ஒருவர் (ஒரு முஸ்லிமிடம்) முகத்தில் அறை வாங்கிக்கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்”என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே காணப்படுகின்றன.

ஆயினும், அதில் “மூர்ச்சையடைந்துவிட்டவர்களில் மூசா (அலை) அவர்கள் (முதலாவதாக) மூர்ச்சை தெளிந்து (எழுந்து)விட்டார்களா? அல்லது தூர்சினாய் மலையில் (இறைவனைப் பார்க்க முற்பட்டபோது) அடைந்த மூர்ச்சைக்குக் பகரமாக அத்தோடு போதுமென விடப்பட்டார்களா என்பது எனக்குத் தெரியாது” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (சிறு வேறுபாட்டுடன்) காணப்படுகிறது.

Book : 43


جَاءَ يَهُودِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ لُطِمَ وَجْهُهُ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ الزُّهْرِيِّ، غَيْرَ أَنَّهُ قَالَ: «فَلَا أَدْرِي أَكَانَ مِمَّنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي، أَوِ اكْتَفَى بِصَعْقَةِ الطُّورِ»


Muslim-4733

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4733. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் நான்கு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “ஒரு முஸ்லிமும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர்” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

Book : 43


اسْتَبَّ رَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ، وَرَجُلٌ مِنَ الْيَهُودِ بِمِثْلِ حَدِيثِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ


Muslim-4732

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4732. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு யூதரும் ஒரு முஸ்லிமும் ஒருவரையொருவர் திட்டிக்கொண்டனர். அந்த முஸ்லிம், “உலகத்தார் அனைவரைவிடவும் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!” என்று (ஏதோ ஒரு விஷயத்தில் சத்தியமிட்டுக்) கூறினார். அதற்கு (பதிலாக) அந்த யூதர், “உலகத்தார் அனைவரைவிடவும் மூசா (அலை) அவர்களுக்கு மேன்மை அளித்தவன் மீதாணையாக!” என்று கூறினார்.

அதைக் கேட்டு (கோபம் கொண்ட) அந்த முஸ்லிம் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்து விட்டார். உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தமக்கும் அந்த முஸ்லிமுக்கும் இடையே நடந்ததைத் தெரிவித்தார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த முஸ்லிமை வரவழைத்து), “மூசாவைவிட என்னைச் சிறப்பாக்கி (உயர்த்திப் பேசி)விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் (மறுமை நாளில்) மூர்ச்சையாகிவிடுவார்கள். நானே முதலாவதாக மயக்கம் தெளிந்து எழுவேன். அப்போது மூசா (அலை) அவர்கள் இறை அரியணையின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். மக்களோடு சேர்ந்து

اسْتَبَّ رَجُلَانِ رَجُلٌ مِنَ الْيَهُودِ وَرَجُلٌ مِنَ الْمُسْلِمِينَ فَقَالَ: الْمُسْلِمُ وَالَّذِي اصْطَفَى مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الْعَالَمِينَ وَقَالَ الْيَهُودِيُّ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ عَلَى الْعَالَمِينَ قَالَ فَرَفَعَ الْمُسْلِمُ يَدَهُ عِنْدَ ذَلِكَ، فَلَطَمَ وَجْهَ الْيَهُودِيِّ، فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَخْبَرَهُ بِمَا كَانَ مِنْ أَمْرِهِ وَأَمْرِ الْمُسْلِمِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تُخَيِّرُونِي عَلَى مُوسَى، فَإِنَّ النَّاسَ يَصْعَقُونَ فَأَكُونُ أَوَّلَ مَنْ يُفِيقُ، فَإِذَا مُوسَى بَاطِشٌ بِجَانِبِ الْعَرْشِ، فَلَا أَدْرِي أَكَانَ، فِيمَنْ صَعِقَ فَأَفَاقَ قَبْلِي أَمْ كَانَ مِمَّنِ اسْتَثْنَى اللهُ»


Muslim-4731

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4731. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூதர் ஒருவர் (சந்தையில்) தமது சரக்கை எடுத்துக் காட்டியபோது, அவருக்குப் “பிடிக்காத” அல்லது “அவர் விரும்பாத” (குறைந்த) விலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. (அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்களின் ஐயம்.)

அப்போது அந்த யூதர், “மனிதர்கள் அனைவரையும்விட (சிறந்தவராக) மூசாவைத் தேர்ந்தெடுத்தவன் மீதாணையாக! இல்லை (இந்த விலை கட்டுப்படியாகாது)” என்று கூறினார். இதை அன்சாரி (முஸ்லிம்)களில் ஒருவர் கேட்டுவிட்டார். உடனே அந்த யூதரை முகத்தில் அறைந்து, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கிடையே வாழ்ந்து கொண்டிருக்க, “மனிதர்கள் அனைவரையும் விட மூசாவைத் தேர்ந்தெடுத்தவன்மீது சத்தியமாக! என்றா நீ கூறுகிறாய்?” என்று கேட்டார்.

உடனே அந்த யூதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “அபுல்காசிமே! (சிறுபான்மை மக்களான எங்கள் உயிர், உடைமை, மானத்தைப் பாதுகாப்பதாக எங்களிடம் நீங்கள் வாக்குறுதி அளித்திருக்கும் அடிப்படையில்) எனக்கு நீங்கள் பொறுப்பேற்று ஒப்பந்தம் செய்து தந்திருக்கிறீர்கள்.

بَيْنَمَا يَهُودِيٌّ يَعْرِضُ سِلْعَةً لَهُ أُعْطِيَ بِهَا شَيْئًا، كَرِهَهُ أَوْ لَمْ يَرْضَهُ – شَكَّ عَبْدُ الْعَزِيزِ – قَالَ: لَا، وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ عَلَى الْبَشَرِ قَالَ: فَسَمِعَهُ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ فَلَطَمَ وَجْهَهُ، قَالَ: تَقُولُ: وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ عَلَى الْبَشَرِ وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ أَظْهُرِنَا؟ قَالَ فَذَهَبَ الْيَهُودِيُّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا أَبَا الْقَاسِمِ إِنَّ لِي ذِمَّةً وَعَهْدًا، وَقَالَ: فُلَانٌ لَطَمَ وَجْهِي، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لِمَ لَطَمْتَ وَجْهَهُ؟» قَالَ: قَالَ – يَا رَسُولَ اللهِ – وَالَّذِي اصْطَفَى مُوسَى عَلَيْهِ السَّلَامُ عَلَى الْبَشَرِ وَأَنْتَ بَيْنَ أَظْهُرِنَا، قَالَ: فَغَضِبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى عُرِفَ الْغَضَبُ فِي وَجْهِهِ، ثُمَّ قَالَ: ” لَا تُفَضِّلُوا بَيْنَ أَنْبِيَاءِ اللهِ، فَإِنَّهُ يُنْفَخُ فِي الصُّورِ فَيَصْعَقُ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ إِلَّا مَنْ شَاءَ اللهُ، قَالَ: ثُمَّ يُنْفَخُ فِيهِ أُخْرَى، فَأَكُونُ أَوَّلَ مَنْ بُعِثَ، أَوْ فِي أَوَّلِ مَنْ بُعِثَ، فَإِذَا مُوسَى عَلَيْهِ السَّلَامُ آخِذٌ بِالْعَرْشِ، فَلَا أَدْرِي أَحُوسِبَ بِصَعْقَتِهِ يَوْمَ الطُّورِ، أَوْ بُعِثَ قَبْلِي، وَلَا أَقُولُ: إِنَّ أَحَدًا أَفْضَلُ مِنْ يُونُسَ بْنِ مَتَّى عَلَيْهِ السَّلَامُ

– وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ، بِهَذَا الْإِسْنَادِ سَوَاءً


Next Page » « Previous Page