Category: முஸ்லிம்

Muslim-4680

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4680. சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் நரைமுடி பற்றிக் கேட்கப் பட்டது. அதற்கு அவர்கள், “நபியவர்கள் தமது தலையில் எண்ணெய் தேய்த்திருந்தால் அவர்களது தலையிலிருந்து ஒருசில நரைமுடிகூடத் தென்படாது; அவர்கள் எண்ணெய் தேய்த்திருக்காவிட்டால் சில நரைமுடி தென்படும்” என்று சொன்னார்கள்.

Book : 43


سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «كَانَ إِذَا دَهَنَ رَأْسَهُ لَمْ يُرَ مِنْهُ شَيْءٌ، وَإِذَا لَمْ يَدْهُنْ رُئِيَ مِنْهُ»


Muslim-4679

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4679. அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள். (நபியவர்களின் பேரர்) ஹசன் பின் அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்கு (தோற்றத் தில்) ஒத்திருப்பார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஜுஹைஃபா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “வெண்ணிறமுடையவர்களாகவும் முதுமை அடைந்தவர்களாகவும் இருந்தார்கள்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 43


«رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبْيَضَ قَدْ شَابَ كَانَ الْحَسَنُ بْنُ عَلِيٍّ يُشْبِهُهُ»

– وَحَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا سُفْيَانُ، وَخَالِدُ بْنُ عَبْدِ اللهِ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بِشْرٍ، كُلُّهُمْ عَنْ إِسْمَاعِيلَ، عَنْ أَبِي جُحَيْفَةَ، بِهَذَا وَلَمْ يَقُولُوا: أَبْيَضَ قَدْ شَابَ


Muslim-4678

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4678. அபூஇஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (முகத்தில்) இந்த இடத்தில் வெள்ளை முடி இருந்ததை நான் கண்டேன்” என்று கூறினார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) அவர்கள் தமது விரல் ஒன்றைத் தமது கீழுதட்டிலுள்ள குறுந்தாடியின் மீது வைத்து சைகை செய்து காட்டினார்கள்.

அப்போது அவர்களிடம், “அன்றைய தினம் நீங்கள் யாரைப் போன்று இருந்தீர்கள்? (அன்று உங்களுக்கு என்ன வயதிருக்கும்)?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள், “அப்போது நான் அம்புக்கு இறகு பொருத்துவேன். (இது போன்றவற்றைச் செய்யும் அளவுக்கு விவரமுடைய வயதுள்ளவனாக இருந்தேன்)” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 43


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، «هَذِهِ مِنْهُ بَيْضَاءَ، وَوَضَعَ زُهَيْرٌ بَعْضَ أَصَابِعِهِ عَلَى عَنْفَقَتِهِ» قِيلَ لَهُ: مِثْلُ مَنْ أَنْتَ يَوْمَئِذٍ؟ فَقَالَ: «أَبْرِي النَّبْلَ وَأَرِيشُهَا»


Muslim-4677

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4677. அபூஇயாஸ் முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்களது (தலையில்) நரைமுடி இருந்ததா?” என்பது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அவர்களை அல்லாஹ் நரைமுடியால் அலங்கோலப்படுத்தவில்லை” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 43


أَنَّهُ سُئِلَ عَنْ شَيْبِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَا شَانَهُ اللهُ بِبَيْضَاءَ


Muslim-4676

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4676. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் தம் தலையிலும் தாடியிலும் உள்ள நரைமுடிகளைப் பிடுங்குவது வெறுக்கப்பட்டதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நரைமுடிக்குச்) சாயம் பூசியதில்லை. அவர்களது (கீழுதட்டின் அடியிலுள்ள) குறுந்தாடியிலும் நெற்றிப் பொட்டுகளிலுள்ள முடியிலும்தான் வெண்மை இருந்தது. தலையில் ஆங்காங்கே ஒரு சில முடிகளே நரைத்திருந்தன.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

Book : 43


يُكْرَهُ أَنْ يَنْتِفَ الرَّجُلُ الشَّعْرَةَ الْبَيْضَاءَ مِنْ رَأْسِهِ وَلِحْيَتِهِ، قَالَ: وَلَمْ يَخْتَضِبْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِنَّمَا كَانَ الْبَيَاضُ فِي عَنْفَقَتِهِ وَفِي الصُّدْغَيْنِ وَفِي الرَّأْسِ نَبْذٌ

– وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ، حَدَّثَنَا الْمُثَنَّى بِهَذَا الْإِسْنَادِ


Muslim-4675

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4675. ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “நபி (ஸல்) அவர்கள் (தமது நரைமுடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்களது தலையிலிருந்த வெள்ளை முடிகளை நான் நினைத்திருந்தால் எண்ணிக் கணக்கெடுத்திருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் சாயம் பூசியதில்லை. (ஆனால்,) அபூபக்ர் (ரலி) அவர்கள் மருதாணி இலையாலும் “கத்தம்” (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயம் பூசியிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களும் மருதாணி இலையால் நன்கு சாயம் பூசியிருந்தார்கள்” என்று கூறினார்கள்.

Book : 43


سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ عَنْ خِضَابِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: «لَوْ شِئْتُ أَنْ أَعُدَّ شَمَطَاتٍ كُنَّ فِي رَأْسِهِ فَعَلْتُ»، وَقَالَ: لَمْ يَخْتَضِبْ «وَقَدِ اخْتَضَبَ أَبُو بَكْرٍ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ» وَاخْتَضَبَ عُمَرُ بِالْحِنَّاءِ بَحْتًا


Muslim-4674

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4674. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?”என்று கேட்டேன். அதற்கு, “ஒரு சில நரைமுடிகளையே கண்டார்கள். (எனவே, சாயம் பூசவில்லை)” என்று அனஸ் பதிலளித்தார்கள்.

Book : 43


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ أَخَضَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «إِنَّهُ لَمْ يَرَ مِنَ الشَّيْبِ إِلَّا قَلِيلًا»


Muslim-4673

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4673. முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தலைமுடிக்குச்) சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “சாயம் பூசுகின்ற அளவுக்கு (நரை முடிகள்) அவர்களுக்கு இல்லை. அவர்களது தாடியில் மட்டுமே சில வெள்ளை முடிகள் இருந்தன” என்று கூறினார்கள்.

அவர்களிடம், “அபூபக்ர் (ரலி) அவர்கள் சாயம் பூசியிருந்தார்களா?” என்று கேட்டேன். அதற்கு, “ஆம்; மருதாணி இலையாலும் “கத்தம்” (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் (சாயம் பூசியிருந்தார்கள்)” என்று பதிலளித்தார்கள்.

Book : 43


سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ هَلْ كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَضَبَ؟ فَقَالَ: «لَمْ يَبْلُغِ الْخِضَابَ كَانَ فِي لِحْيَتِهِ شَعَرَاتٌ بِيضٌ» قَالَ قُلْتُ لَهُ: أَكَانَ أَبُو بَكْرٍ يَخْضِبُ؟ قَالَ فَقَالَ: نَعَمْ، بِالْحِنَّاءِ وَالْكَتَمِ


Muslim-4672

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 29

நபி (ஸல்) அவர்களின் தலையிலிருந்த நரைமுடி.

4672. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது நரை முடிக்குச்) சாயம் பூசியதுண்டா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது தலையில் நரை எதையும் பார்க்கவில்லை; இவ்வளவு தவிர” என்று கூறினார்கள். (அவை மிகவும் குறைவானவை என்பதைப் போன்று அறிவிப்பாளர் சைகை செய்தார் என இப்னு இத்ரீஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.)

மேலும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோர் தம் நரைமுடிக்கு மருதாணி இலையாலும் “கத்தம்” (யமன் நாட்டு மூலிகைச்) செடியின் இலையாலும் சாயமிட்டுவந்தனர்” என்றும் அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 43


سُئِلَ أَنَسُ بْنُ مَالِكٍ هَلْ خَضَبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «إِنَّهُ لَمْ يَكُنْ رَأَى مِنَ الشَّيْبِ إِلَّا» – قَالَ ابْنُ إِدْرِيسَ كَأَنَّهُ يُقَلِّلُهُ – وَقَدْ خَضَبَ أَبُو بَكْرٍ، وَعُمَرُ بِالْحِنَّاءِ وَالْكَتَمِ


Muslim-4671

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4671. சயீத் பின் இயாஸ் அல்ஜுரைரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபித்தோழர்களில் இறுதியாக உயிர் வாழ்ந்த) அபுத்துஃபைல் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்திருக்கிறேன்; இந்தப் பூமியின்மீது அவர்களைப் பார்த்தவர் என்னைத் தவிர வேறெந்த மனிதரும் (இப்போது உயிருடன்) இல்லை” என்று கூறினார்கள்.

அவர்களிடம் நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எவ்வாறு கண்டீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெண்ணிறம் கொண்டவர்களாகவும் கலையான தோற்றமுடையவராகவும் நடுத்தரமான உடல்வாகு கொண்டவராகவும் இருந்தார்கள்” என்று பதிலளித்தார்கள்.

Book : 43


رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا عَلَى وَجْهِ الْأَرْضِ رَجُلٌ رَآهُ غَيْرِي، قَالَ فَقُلْتُ لَهُ: فَكَيْفَ رَأَيْتَهُ؟ قَالَ: «كَانَ أَبْيَضَ مَلِيحًا مُقَصَّدًا»


Next Page » « Previous Page