Category: முஸ்லிம்

Muslim-4530

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4530. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(திராட்சைக்கு) “அல்கர்ம்” (கண்ணியமானது) என்று (பெயர்) கூறாதீர்கள். மாறாக, “அல்இனப்” என்றோ “அல்ஹப்லா”என்றோ கூறுங்கள்.

இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


«لَا تَقُولُوا الْكَرْمُ وَلَكِنْ قُولُوا الْعِنَبُ وَالْحَبْلَةُ»


Muslim-4529

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4529. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(திராட்சைக்கு) “அல்கர்ம்” என்று கூறாதீர்கள். மாறாக “அல்ஹப்லா” என்று சொல்லுங்கள்.

இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


لَا تَقُولُوا: الْكَرْمُ، وَلَكِنْ قُولُوا الْحَبْلَةُ ” يَعْنِي الْعِنَبَ


Muslim-4528

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4528. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் திராட்சையை “அல்கர்ம்” (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.

Book : 40


قَالَ: هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا، وَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ

«لَا يَقُولَنَّ أَحَدُكُمْ، لِلْعِنَبِ الْكَرْمَ، إِنَّمَا الْكَرْمُ الرَّجُلُ الْمُسْلِمُ»


Muslim-4527

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4527. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (திராட்சையை) “அல்கர்ம்” (கண்ணியம்) என்று கூற வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


«لَا يَقُولَنَّ أَحَدُكُمُ الْكَرْمُ، فَإِنَّمَا الْكَرْمُ قَلْبُ الْمُؤْمِنِ»


Muslim-4526

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4526. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திராட்சையை (“கண்ணியம்” எனும் பொருள் கொண்ட) “அல்கர்ம்” என்று பெயரிட்டழைக்காதீர்கள். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


«لَا تُسَمُّوا الْعِنَبَ الْكَرْمَ، فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ»


Muslim-4525

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4525. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

திராட்சையை “கர்ம்” (கண்ணியமானது) என்று கூறாதீர்கள். ஏனெனில், கண்ணியத்திற்குரியது (எனும் பெயருக்குத் தகுதியானது) இறைநம்பிக்கையாளரின் இதயமே ஆகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 40


«لَا تَقُولُوا كَرْمٌ فَإِنَّ الْكَرْمَ، قَلْبُ الْمُؤْمِنِ»


Muslim-4524

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 2

திராட்சையை (“கண்ணியமானது” எனும் பொருள் கொண்ட) “கர்ம்” என்று பெயரிட்டழைப்பது விரும்பத்தக்கதன்று.

4524. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் யாரும் காலத்தை ஏச வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்). உங்களில் யாரும் திராட்சையை (“கண்ணியம்” எனும் பொருள் கொண்ட) “அல்கர்ம்” என்று பெயரிட்டு அழைக்க வேண்டாம். உண்மையில் கண்ணியம் (எனும் பெயருக்குத் தகுதியானவர்) முஸ்லிமான மனிதரே ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


«لَا يَسُبُّ أَحَدُكُمُ الدَّهْرَ، فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ وَلَا يَقُولَنَّ أَحَدُكُمْ لِلْعِنَبِ الْكَرْمَ، فَإِنَّ الْكَرْمَ الرَّجُلُ الْمُسْلِمُ»


Muslim-4523

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4523. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

காலத்தை ஏசாதீர்கள். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்து இயக்குபவன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


«لَا تَسُبُّوا الدَّهْرَ، فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ»


Muslim-4522

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4522. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் “காலத்தின் கைசேதமே!” என்று கூற வேண்டாம். ஏனெனில், அல்லாஹ்வே காலம் (படைத்தவன்).

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


«لَا يَقُولَنَّ أَحَدُكُمْ يَا خَيْبَةَ الدَّهْرِ، فَإِنَّ اللهَ هُوَ الدَّهْرُ»


Muslim-4521

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4521. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் சொன்னான்: ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகிறான்; “காலத்தின் கைசேதமே!” என்று அவன் கூறுகிறான். ஆகவே, உங்களில் ஒருவர் “காலத்தின் கைசேதமே!” என்று கூற வேண்டாம். ஏனெனில், நானே காலம் (படைத்தவன்). அதில் இரவையும் பகலையும் நானே மாறி மாறி வரச்செய்கிறேன். நான் நாடினால் அவ்விரண்டையும் (மாறாமல்) பிடித்து (நிறுத்தி) விடுவேன். (பூமியைச் சுழலவிடாமல் நிறுத்திவிடுவேன்.)

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 40


يُؤْذِينِي ابْنُ آدَمَ يَقُولُ: يَا خَيْبَةَ الدَّهْرِ فَلَا يَقُولَنَّ أَحَدُكُمْ: يَا خَيْبَةَ الدَّهْرِ فَإِنِّي أَنَا الدَّهْرُ، أُقَلِّبُ لَيْلَهُ وَنَهَارَهُ، فَإِذَا شِئْتُ قَبَضْتُهُمَا


Next Page » « Previous Page