Category: முஸ்லிம்

Muslim-4480

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4480. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுனத்தில் ஏதேனும் உண்மை இருக்குமானால், குதிரையிலும் மனைவியிலும் வீட்டிலும்தான் இருக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

– மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “உண்மை” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

அத்தியாயம்: 39


«إِنْ يَكُنْ مِنَ الشُّؤْمِ شَيْءٌ حَقٌّ، فَفِي الْفَرَسِ، وَالْمَرْأَةِ، وَالدَّارِ»

– وحَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللهِ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا شُعْبَةُ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَلَمْ يَقُلْ: حَقٌّ


Muslim-4479

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4479. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் கிடையாது; சகுனம் பார்ப்பது (இருப்பதென்றால்) மூன்று விஷயங்களில்தான். மனைவியிலும் குதிரையிலும் (குடியிருக்கும்) வீட்டிலும்தான்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– அபசகுனம் தொடர்பான மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் பத்து அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்களைத் தவிர வேறெவரது அறிவிப்பிலும் தொற்றுநோய், பறவை சகுனம் ஆகியவை பற்றிய குறிப்பு இல்லை.

அத்தியாயம்: 39


لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَإِنَّمَا الشُّؤْمُ فِي ثَلَاثَةٍ: الْمَرْأَةِ، وَالْفَرَسِ، وَالدَّارِ

– وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، وَحَمْزَةَ، ابْنَيْ عَبْدِ اللهِ، عَنْ أَبِيهِمَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، عَنْ سُفْيَانَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنَا عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ سَالِمٍ وَحَمْزَةَ، ابْنَيْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، ح وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، ح وحَدَّثَنِي عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ كُلُّهُمْ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِي الشُّؤْمِ، بِمِثْلِ حَدِيثِ مَالِكٍ لَا يَذْكُرُ أَحَدٌ مِنْهُمْ فِي حَدِيثِ ابْنِ عُمَرَ الْعَدْوَى وَالطِّيَرَةَ، غَيْرُ يُونُسَ بْنِ يَزِيدَ


Muslim-4478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

4478. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அபசகுனம் (இருப்பதென்றால்) மனை, மனைவி, புரவி (குதிரை) ஆகிய மூன்றில்தான் இருக்கும்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 39


«الشُّؤْمُ فِي الدَّارِ، وَالْمَرْأَةِ، وَالْفَرَسِ»


Muslim-4477

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4477. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; ஆந்தை பற்றிய (மூட)நம்பிக்கை (உண்மை) இல்லை; பறவை சகுனம் ஏதும் கிடையாது. (ஆனால்,) நான் நற்குறியை விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 39


«لَا عَدْوَى، وَلَا هَامَةَ، وَلَا طِيَرَةَ، وَأُحِبُّ الْفَأْلَ الصَّالِحَ»


Muslim-4476

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4476. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; (ஆனால்) நற்குறியை நான் விரும்புகிறேன்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 39


«لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَأُحِبُّ الْفَأْلَ الصَّالِحَ»


Muslim-4475

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4475. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது. ஆனால், நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று சொன்னார்கள். அப்போது “நற்குறி என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், “(மங்கலகரமான) நல்ல சொல்” என்று விடையளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 39


«لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ» قَالَ قِيلَ: وَمَا الْفَأْلُ؟ قَالَ: «الْكَلِمَةُ الطَّيِّبَةُ»


Muslim-4474

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4474. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; பறவை சகுனம் ஏதும் கிடையாது; நற்குறி எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. (மங்கலகரமான) நல்ல, அழகான சொல்லே நற்குறி ஆகும்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 39


لَا عَدْوَى، وَلَا طِيَرَةَ، وَيُعْجِبُنِي الْفَأْلُ: الْكَلِمَةُ الْحَسَنَةُ، الْكَلِمَةُ الطَّيِّبَةُ


Muslim-4473

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 34

பறவை சகுனமும் நற்குறியும் அபசகுனம் எதில் உள்ளது என்பதும்.

4473. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், “பறவை சகுனம் ஏதும் கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியாகும்” என்று கூறியதை நான் செவியுற்றேன். அப்போது, “நற்குறி என்பது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “நீங்கள் செவியுறுகின்ற நல்ல (மங்கலகரமான) சொல்தான்” என்று பதிலளித்தார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் உகைல் பின் காலித் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “செவியுற்றேன்” என்ற குறிப்பு இடம்பெறவில்லை. ஷுஐப் பின் அல்லைஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் செவியுற்றேன்” என இடம்பெற்றுள்ளது.

Book : 39


«لَا طِيَرَةَ وَخَيْرُهَا الْفَأْلُ» قِيلَ: يَا رَسُولَ اللهِ وَمَا الْفَأْلُ؟ قَالَ: «الْكَلِمَةُ الصَّالِحَةُ يَسْمَعُهَا أَحَدُكُمْ»

وحَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، ح وحَدَّثَنِيهِ عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، كِلَاهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ، مِثْلَهُ. وَفِي حَدِيثِ عُقَيْلٍ: عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ: سَمِعْتُ وَفِي حَدِيثِ شُعَيْبٍ: قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا قَالَ: مَعْمَرٌ


Muslim-4472

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4472. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் “ஸஃபர் கிடையாது” என்பதற்கு விளக்கமளிக்கையில், “ஸஃபர் என்பது வயிறாகும்” என்று கூறினார்கள். ஜாபிர் (ரலி) அவர்களிடம், “(அது) எப்படி?” என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “வயிற்றில் உருவாகும் ஒரு புழுவாகும் என்று சொல்லப் படுவதுண்டு” என்றார்கள்.

ஆனால், ஜாபிர் (ரலி) அவர்கள், (“வர்ண ஜாலம் காட்டும் சாத்தான்” என்பதைக் குறிக்க மூலத்தில் ஆளப்பட்டுள்ள) “ஃகூல்” என்பதற்கு விளக்கமளிக்கவில்லை. ஆயினும், பல வண்ணம் காட்டுவதே இந்த “ஃகூல்” என்பதாகும்.

இதை அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

«لَا عَدْوَى وَلَا صَفَرَ، وَلَا غُولَ» وَسَمِعْتُ أَبَا الزُّبَيْرِ يَذْكُرُ، أَنَّ جَابِرًا فَسَّرَ لَهُمْ قَوْلَهُ: «وَلَا صَفَرَ»

فَقَالَ أَبُو الزُّبَيْرِ: الصَّفَرُ: الْبَطْنُ، فَقِيلَ لِجَابِرٍ: كَيْفَ؟ قَالَ: كَانَ يُقَالُ دَوَابُّ الْبَطْنِ، قَالَ وَلَمْ يُفَسِّرِ الْغُولَ، قَالَ أَبُو الزُّبَيْرِ: هَذِهِ الْغُولُ: الَّتِي تَغَوَّلُ


Muslim-4471

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4471. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொற்றுநோய் கிடையாது; வர்ணஜாலம் காட்டும் சாத்தானும் கிடையாது; ஸஃபர் (தொற்றுநோய்) என்பதும் கிடையாது.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 39


«لَا عَدْوَى، وَلَا غُولَ، وَلَا صَفَرَ»


Next Page » « Previous Page