Category: முஸ்லிம்

Muslim-4270

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

4270. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி நாளில் (அபூபக்ர் (ரலி) அவர்களின் தந்தை) அபூகுஹாஃபா, (நபி (ஸல்) அவர்களிடம்) கொண்டுவரப்பட்டார். அவரது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று வெள்ளை நிறத்தில் இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்.

கறுப்பு நிறத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள்.

அத்தியாயம்: 37


أُتِيَ بِأَبِي قُحَافَةَ يَوْمَ فَتْحِ مَكَّةَ وَرَأْسُهُ وَلِحْيَتُهُ كَالثَّغَامَةِ بَيَاضًا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «غَيِّرُوا هَذَا بِشَيْءٍ، وَاجْتَنِبُوا السَّوَادَ»


Muslim-4269

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 24

நரைமுடிக்கு சாயமிட்டு (நிறத்தை) மாற்றுவது.

4269. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபூபக்ர்-ரலி அவர்களின் தந்தையார்) அபூகுஹாஃபா அவர்கள் மக்கா “வெற்றி ஆண்டில்” அல்லது “வெற்றி நாளில்” (நபி-ஸல் அவர்களிடம்) “வந்தார்கள்”. அல்லது “கொண்டுவரப் பட்டார்கள்”.

அவர்களது தலை முடியும் தாடியும் தும்பைப் பூவைப் போன்று (தூய வெள்ளை நிறத்தில்) இருந்தன. அவருடைய துணைவியரிடம் நபி (ஸல்) அவர்கள், “இ(ந்த வெள்ளை நிறத்)தை ஏதேனும் (சாயம்) கொண்டு மாற்றுங்கள்” என்று உத்தரவிட்டார்கள்.

அத்தியாயம்: 37


أُتِيَ بِأَبِي قُحَافَةَ – أَوْ جَاءَ عَامَ الْفَتْحِ، أَوْ يَوْمَ الْفَتْحِ – وَرَأْسُهُ وَلِحْيَتُهُ مِثْلُ الثَّغَامِ – أَوِ الثَّغَامَةِ – فَأَمَرَ – أَوْ فَأُمِرَ بِهِ – إِلَى نِسَائِهِ، قَالَ: «غَيِّرُوا هَذَا بِشَيْءٍ»


Muslim-4268

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 23

ஆண்கள் (மேனியில்) குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வது தடை செய்யப் பட்டதாகும்.

4268. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், குங்குமப்பூச் சாயமிட்டுக்கொள்வதைத் தடை செய்தார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

ஹம்மாத் பின் ஸைத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அதாவது ஆண்களுக்குத் தடை செய்தார்கள்” என (விளக்கத்துடன்) இடம்பெற்றுள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆண்கள் குங்குமப்பூச் சாயமிட்டுக் கொள்ளக்கூடாது எனத் தடை விதித்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Book : 37


«أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ التَّزَعْفُرِ»، قَالَ قُتَيْبَةُ: قَالَ حَمَّادٌ: «يَعْنِي لِلرِّجَالِ»

– وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَابْنُ نُمَيْرٍ، وَأَبُو كُرَيْبٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ صُهَيْبٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَتَزَعْفَرَ الرَّجُلُ»


Muslim-4267

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4267. மேற்கண்ட ஹதீஸ் அப்துல்லாஹ் பின் ஸைத் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 37


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَابْنُ نُمَيْرٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَحَرْمَلَةُ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-4266

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 22

மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள அனுமதி.

4266. அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காலின் மீது மற்றொரு காலைப் போட்டுக்கொண்டு பள்ளிவாசலில் மல்லாந்து படுத்திருப்பதை நான் கண்டேன்.

Book : 37


«رَأَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُسْتَلْقِيًا فِي الْمَسْجِدِ وَاضِعًا إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى»


Muslim-4265

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4265. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு காலை மற்றொரு கால்மீது போட்டுக்கொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 37


«لَا يَسْتَلْقِيَنَّ أَحَدُكُمْ ثُمَّ يَضَعُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى»


Muslim-4264

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4264. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), “ஒரேயொரு காலணியில் நடக்காதே. ஒரே கீழாடையால் (உன் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமராதே. இடக் கையால் சாப்பிடாதே. ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்தவாறு விட்டுவிடாதே. நீ மல்லாந்து படுத்திருக்கும்போது ஒரு காலை மற்றொரு கால்மீது போடாதே” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


«لَا تَمْشِ فِي نَعْلٍ وَاحِدٍ، وَلَا تَحْتَبِ فِي إِزَارٍ وَاحِدٍ، وَلَا تَأْكُلْ بِشِمَالِكَ، وَلَا تَشْتَمِلِ الصَّمَّاءَ، وَلَا تَضَعْ إِحْدَى رِجْلَيْكَ عَلَى الْأُخْرَى إِذَا اسْتَلْقَيْتَ»


Muslim-4263

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 21

மல்லாந்து படுத்துக்கொண்டு ஒரு கால்மீது மற்றொரு காலைப் போட்டுக் கொள்வதற்கு வந்துள்ள தடை.

4263. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம் என்றும், ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம் என்றும், ஒரு மனிதர் மல்லாந்து படுத்திருக்கும்போது கால்மீது கால் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும் தடை செய்தார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ اشْتِمَالِ الصَّمَّاءِ، وَالِاحْتِبَاءِ فِي ثَوْبٍ وَاحِدٍ، وَأَنْ يَرْفَعَ الرَّجُلُ إِحْدَى رِجْلَيْهِ عَلَى الْأُخْرَى وَهُوَ مُسْتَلْقٍ عَلَى ظَهْرِهِ»


Muslim-4262

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4262. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒருவரது செருப்பு வார் அறுந்துவிட்டால்” அல்லது “தமது செருப்பு வார் அறுந்து விட்ட ஒருவர்” அதைச் சீராக்காத வரை ஒரேயொரு காலணியில் நடக்க வேண்டாம். ஒரேயொரு காலுறை அணிந்தும் நடக்க வேண்டாம். இடக் கையால் சாப்பிட வேண்டாம்.

ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக்கொண்டு (மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு குத்துக்காலிட்டு) அமர வேண்டாம். ஒரே துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிட வேண்டாம்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


«إِذَا انْقَطَعَ شِسْعُ أَحَدِكُمْ»، أَوْ «مَنِ انْقَطَعَ شِسْعُ نَعْلِهِ، فَلَا يَمْشِ فِي نَعْلٍ وَاحِدَةٍ حَتَّى يُصْلِحَ شِسْعَهُ، وَلَا يَمْشِ فِي خُفٍّ وَاحِدٍ، وَلَا يَأْكُلْ بِشِمَالِهِ، وَلَا يَحْتَبِي بِالثَّوْبِ الْوَاحِدِ، وَلَا يَلْتَحِفِ الصَّمَّاءَ»


Muslim-4261

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 20

ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக் கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு, மற்றொரு தோள் பகுதியைத் திறந்த நிலையில் விட்டுவிடுவதும் (இஷ்தி மாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியைப் போர்த்திக்கொண்டு குத்துக்காலிட்டு அமர்வதும் (இஹ்திபா) தடை செய்யப்பட்டவை ஆகும்.

4261. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒருவர் தமது இடக் கையால் உணவு உண்பது, அல்லது ஒரேயொரு காலணியில் நடப்பது, ஒரேயொரு துணியை உடலில் சுற்றிக்கொண்டு, அதன் ஒரு மூலையை ஒரு தோளில் போட்டுக்கொண்டு மற்றொரு தோளைத் திறந்த நிலையில் விட்டுவிடுவது (இஷ்திமாலுஸ் ஸம்மாஉ), ஒரே துணியால் (தம் முதுகையும் முழங்கால்களையும்) போர்த்திக் கொண்டு மர்ம உறுப்பு வெளியே தெரியுமாறு (குத்துக்காலிட்டு) அமர்வது (இஹ்திபா) ஆகியவற்றுக்குத் தடை விதித்தார்கள்.

Book : 37


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يَأْكُلَ الرَّجُلُ بِشِمَالِهِ، أَوْ يَمْشِيَ فِي نَعْلٍ وَاحِدَةٍ، وَأَنْ يَشْتَمِلَ الصَّمَّاءَ، وَأَنْ يَحْتَبِيَ فِي ثَوْبٍ وَاحِدٍ كَاشِفًا عَنْ فَرْجِهِ»


Next Page » « Previous Page