Category: முஸ்லிம்

Muslim-4230

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

படுக்கை விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

4230. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்குத் திருமணமானபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “படுக்கை விரிப்புகள் அமைத்துவிட்டாயா?” என்று கேட்டார்கள். நான், “எங்களிடம் எவ்வாறு படுக்கை விரிப்புகள் இருக்கும்?” என்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “தெரிந்துகொள். விரைவில் அவை (உங்களிடம்) இருக்கும்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


قَالَ لِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا تَزَوَّجْتُ: «أَتَّخَذْتَ أَنْمَاطًا؟» قُلْتُ: وَأَنَّى لَنَا أَنْمَاطٌ؟ قَالَ: «أَمَا إِنَّهَا سَتَكُونُ»


Muslim-4229

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4229. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உறங்கும் விரிப்பு, ஈச்ச நாரால் நிரப்பப்பெற்ற பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது.

– மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் (“விரிப்பு” என்பதைக் குறிக்க “ஃபிராஷ்” என்பதற்குப் பதிலாக) “ளிஜாஉ” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. அபூ முஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “உறங்கும் (விரிப்பு)” எனும் சொல் இடம்பெற்றுள்ளது.

Book : 37


«إِنَّمَا كَانَ فِرَاشُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّذِي يَنَامُ عَلَيْهِ أَدَمًا حَشْوُهُ لِيفٌ»

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو مُعَاوِيَةَ، كِلَاهُمَا عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَا: ضِجَاعُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ يَنَامُ عَلَيْهِ


Muslim-4228

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4228. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாய்ந்துகொள்ளும் தலையணை, பதனிடப்பட்ட தோலால் அமைந்திருந்தது. அது ஈச்ச நாரினால் நிரப்பப்பெற்றிருந்தது.

Book : 37


«كَانَ وِسَادَةُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الَّتِي يَتَّكِئُ عَلَيْهَا مِنْ أَدَمٍ حَشْوُهَا لِيفٌ»


Muslim-4227

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4227. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் காலை நபி (ஸல்) அவர்கள், கோடுபோட்ட கறுப்பு முடியாலான ஆடை அணிந்து வெளியே புறப்பட்டார்கள்.இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 37


«خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ غَدَاةٍ وَعَلَيْهِ مِرْطٌ مُرَحَّلٌ مِنْ شَعَرٍ أَسْوَدَ»


Muslim-4226

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4226. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதா வது:

ஆயிஷா (ரலி) அவர்கள் எங்களிடம் கீழங்கி ஒன்றையும் (இரண்டை ஒன்றாகச் சேர்த்து) ஒட்டப்பட்ட மற்றொரு கெட்டியான ஆடையையும் எடுத்துக்காட்டி, “இவற்றை அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று சொன்னார்கள்.- இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் ஹாத்திம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “கெட்டியான கீழங்கியொன்றையும்” என்று இடம்பெற்றுள்ளது.- மேற்கண்ட ஹதீஸ் அபூபுர்தா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது. அதில் “கெட்டியான கீழங்கியொன்றையும்” என்றே இடம்பெற்றுள்ளது.

Book : 37


أَخْرَجَتْ إِلَيْنَا عَائِشَةُ إِزَارًا وَكِسَاءً مُلَبَّدًا، فَقَالَتْ: «فِي هَذَا قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»، قَالَ ابْنُ حَاتِمٍ فِي حَدِيثِهِ: إِزَارًا غَلِيظًا

– وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ أَيُّوبَ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَقَالَ: إِزَارًا غَلِيظًا


Muslim-4225

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

ஆடையில் (எளிமையும்) பணிவு(ம்) மேற்கொள்வதும்; ஆடை, விரிப்பு உள்ளிட்டவற்றில் கெட்டியானதையும் எளிமையானதையும் வைத்துப் போதுமாக்கிக் கொள்வதும்; முடியாலான ஆடை, கரை வேலைப்பாடுகள் செய்யப்பட்டவை ஆகியவற்றை அணியலாம் என்பதும்.

4225. அபூபுர்தா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்கள் எங்களிடம் யமன் நாட்டில் தயாரிக்கப்பட்ட கெட்டியான கீழங்கி ஒன்றையும் “அல்முலப்பதா” (ஒட்டாடை) எனப் பெயர் பெற்ற மற்றோர் ஆடையையும் எடுத்துக்காட்டி, “அல்லாஹ்வின் மீதாணையாக! இந்த இரண்டு ஆடைகளையும் அணிந்திருந்த நிலையில்தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உயிர் பிரிந்தது” என்று சொன்னார்கள்.

Book : 37


دَخَلْتُ عَلَى عَائِشَةَ، فَأَخْرَجَتْ إِلَيْنَا إِزَارًا غَلِيظًا مِمَّا يُصْنَعُ بِالْيَمَنِ، وَكِسَاءً مِنَ الَّتِي يُسَمُّونَهَا الْمُلَبَّدَةَ، قَالَ: «فَأَقْسَمَتْ بِاللهِ إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قُبِضَ فِي هَذَيْنِ الثَّوْبَيْنِ»


Muslim-4224

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4224. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் பிரியமான துணியாக இருந்தது.

Book : 37


«كَانَ أَحَبَّ الثِّيَابِ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْحِبَرَةُ»


Muslim-4223

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

பருத்தி ஆடை அணிவதன் சிறப்பு.

4223. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் “எந்த ஆடை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது?” என்று கேட்டோம். “(பருத்தியாலான) யமன் நாட்டுச் சால்வை” என்று பதிலளித்தார்கள்.

Book : 37


قُلْنَا لِأَنَسِ بْنِ مَالِكٍ: أَيُّ اللِّبَاسِ كَانَ أَحَبَّ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَوْ أَعْجَبَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: «الْحِبَرَةُ»


Muslim-4222

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4222. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தங்கமோதிரம் அணிய வேண்டாமென்றும், பட்டு கலந்த (எகிப்திய) பஞ்சாடை அணிய வேண்டாமென்றும், ருகூஉ மற்றும் சஜ்தாவில் குர்ஆனை ஓத வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் தடைசெய்தார்கள்.

Book : 37


«نَهَانِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ التَّخَتُّمِ بِالذَّهَبِ، وَعَنْ لِبَاسِ الْقَسِّيِّ، وَعَنِ الْقِرَاءَةِ فِي الرُّكُوعِ وَالسُّجُودِ، وَعَنْ لِبَاسِ الْمُعَصْفَرِ»


Muslim-4221

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4221. அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (தொழுகையில்) ருகூஉவிலிருக்கும்போது குர்ஆனை ஓத வேண்டாமென்றும், தங்கம் அணிய வேண்டாமென்றும், செம்மஞ்சள் நிறச் சாயமிடப்பட்ட ஆடையை அணிய வேண்டாமென்றும் என்னைத் தடுத்தார்கள்.

Book : 37


«نَهَانِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْقِرَاءَةِ وَأَنَا رَاكِعٌ، وَعَنْ لُبْسِ الذَّهَبِ وَالْمُعَصْفَرِ»


Next Page » « Previous Page