Category: முஸ்லிம்

Muslim-4079

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 8

குடிகாரன் பாவமன்னிப்புக் கோரி திருந்தாவிட்டால் மறுமையில் (சொர்க்கத்தின்) மது மறுக்கப்படுவதன் மூலம் தண்டிக்கப்படுவான்.

4079. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலகில் மது அருந்தியவருக்கு மறுமையில் (சொர்க்கத்தின்) மது அருந்தும் வாய்ப்பு மறுக்கப்படும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 36


«مَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا حُرِمَهَا فِي الْآخِرَةِ»


Muslim-4078

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். -இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 36


«كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ خَمْرٍ حَرَامٌ»


Muslim-4077

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4077. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். -இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 36


«كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ»

– وحَدَّثَنَا صَالِحُ بْنُ مِسْمَارٍ السُّلَمِيُّ، حَدَّثَنَا مَعْنٌ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْمُطَّلِبِ، عَنْ مُوسَى بْنِ عُقْبَةَ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ


Muslim-4076

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4076. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

போதை தரும் ஒவ்வொன்றும் மதுவாகும். போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப் பட்டதாகும். யார் இவ்வுலகில் தொடர்ந்து மது அருந்தி, பாவமன்னிப்புத் தேடாமல் (திருந்தாமல்) குடிகாரராகவே இறந்துவிடுகிறாரோ அவர் மறுமையில் (சொர்க்க) மதுவை அருந்தமாட்டார். – இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 36


«كُلُّ مُسْكِرٍ خَمْرٌ، وَكُلُّ مُسْكِرٍ حَرَامٌ، وَمَنْ شَرِبَ الْخَمْرَ فِي الدُّنْيَا فَمَاتَ وَهُوَ يُدْمِنُهَا لَمْ يَتُبْ، لَمْ يَشْرَبْهَا فِي الْآخِرَةِ»


Muslim-4075

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4075. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் யமன் நாட்டிலுள்ள “ஜைஷான்” எனுமிடத்திலிருந்து வந்து, தம் நாட்டினர் சோளத்திலிருந்து தயாரித்துப் பருகிவருகின்ற ஒருவகை பானம் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அது போதையளிக்கக்கூடியதா?” என்று கேட்டார்கள். அவர் “ஆம் (போதையளிக்கக்கூடியதே)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், “போதையளிக்கக்கூடிய ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும். (இவ்வுலகில்) போதைப் பொருட்களை உட்கொள்பவருக்கு (மறுமையில்) “தீனத்துல் கபாலை” நிச்சயமாக நான் புகட்டுவேன் என அல்லாஹ் உறுதிமொழி எடுத்துள்ளான்” என்று கூறினார்கள்.

மக்கள் “அல்லாஹ்வின் தூதரே! “தீனத்துல் கபால்” என்பது என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நரகவாசிகளின் வியர்வை அல்லது நரகவாசிகளின் சீழ்” என்று விடையளித்தார்கள்.

Book : 36


أَنَّ رَجُلًا قَدِمَ مِنْ جَيْشَانَ، وَجَيْشَانُ مِنَ الْيَمَنِ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرَابٍ يَشْرَبُونَهُ بِأَرْضِهِمْ مِنَ الذُّرَةِ، يُقَالُ لَهُ: الْمِزْرُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَوَ مُسْكِرٌ هُوَ؟» قَالَ: نَعَمْ، قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ، إِنَّ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ عَهْدًا لِمَنْ يَشْرَبُ الْمُسْكِرَ أَنْ يَسْقِيَهُ مِنْ طِينَةِ الْخَبَالِ» قَالُوا: يَا رَسُولَ اللهِ، وَمَا طِينَةُ الْخَبَالِ؟ قَالَ: «عَرَقُ أَهْلِ النَّارِ» أَوْ «عُصَارَةُ أَهْلِ النَّارِ»


Muslim-4074

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4074. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது, மக்களுக்கு (இஸ்லாமிய) அழைப்பு விடுங்கள். நற்செய்திகளை(யே அதிகமாக)க் கூறுங்கள். (எச்சரிக்கை விடுக்கும்போது) வெறுப்பேற்றி விடாதீர்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள். (அவர்களைச்) சிரமப்படுத்தி விடாதீர்கள்” என்று (அறிவுரை) கூறினார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் யமன் நாட்டில் தயாரித்துவரும் இரு பானங்களைப் பற்றி எங்களுக்குத் தீர்ப்பு வழங்குங்கள். அவை: கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் தேனிலிருந்து தயாரிக்கப்படும் “பித்உ” எனும் பானமும்,அவ்வாறே கட்டியாகும்வரை ஊறவைக்கப்படும் சோளம், தோல் நீக்கப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்படும் “மிஸ்ர்” எனும் பானமும் ஆகும்” என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (ஆரம்பம் முதல்) முடிவுவரை அனைத்தும் செறிவுடன் அமைந்த ஒருங்கிணைந்த சொற்கள் வழங்கப்பட்டிருந்தார்கள். அவர்கள்

بَعَثَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَالَ: «ادْعُوَا النَّاسَ، وَبَشِّرَا وَلَا تُنَفِّرَا، وَيَسِّرَا وَلَا تُعَسِّرَا»، قَالَ: فَقُلْتُ يَا رَسُولَ اللهِ، أَفْتِنَا فِي شَرَابَيْنِ كُنَّا نَصْنَعُهُمَا بِالْيَمَنِ الْبِتْعُ وَهُوَ مِنَ الْعَسَلِ، يُنْبَذُ حَتَّى يَشْتَدَّ، وَالْمِزْرُ وَهُوَ مِنَ الذُّرَةِ وَالشَّعِيرِ، يُنْبَذُ حَتَّى يَشْتَدَّ، قَالَ: وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ أُعْطِيَ جَوَامِعَ الْكَلِمِ بِخَوَاتِمِهِ، فَقَالَ: «أَنْهَى عَنْ كُلِّ مُسْكِرٍ أَسْكَرَ عَنِ الصَّلَاةِ»


Muslim-4073

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4073. அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பிவைத்தபோது நான், “அல்லாஹ்வின் தூதரே! எங்கள் நாட்டில் தோல் நீக்கப்படாத கோதுமையிலிருந்து ஒருவகை பானம் தயாரிக்கப்படுகிறது. அதற்கு “அல்மிஸ்ர்” என்று பெயர் சொல்லப்படுகிறது. மேலும், தேனிலிருந்து “பித்உ” எனப்படும் ஒரு பானமும் தயாரிக்கப்படுகிறது. (அவற்றை நாங்கள் அருந்தலாமா?)” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட்டதாகும்” என்று (பொது விதி) கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தபோது எங்கள் இருவரிடமும், “நீங்கள் (மக்களுக்கு) நற்செய்திகளை(யே அதிகமாக)ச் சொல்லுங்கள். (அவர்களிடம்) எளிதாக நடந்துகொள்ளுங்கள்.

بَعَثَنِي النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَمُعَاذَ بْنَ جَبَلٍ إِلَى الْيَمَنِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، إِنَّ شَرَابًا يُصْنَعُ بِأَرْضِنَا يُقَالُ لَهُ الْمِزْرُ مِنَ الشَّعِيرِ، وَشَرَابٌ يُقَالُ لَهُ الْبِتْعُ مِنَ الْعَسَلِ، فَقَالَ: «كُلُّ مُسْكِرٍ حَرَامٌ»

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، سَمِعَهُ مِنْ سَعِيدِ بْنِ أَبِي بُرْدَةَ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَهُ وَمُعَاذًا إِلَى الْيَمَنِ، فَقَالَ لَهُمَا: ” بَشِّرَا وَيَسِّرَا، وَعَلِّمَا وَلَا تُنَفِّرَا – وَأُرَاهُ قَالَ: – وَتَطَاوَعَا “، قَالَ: فَلَمَّا وَلَّى رَجَعَ أَبُو مُوسَى، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ لَهُمْ شَرَابًا مِنَ الْعَسَلِ يُطْبَخُ حَتَّى يَعْقِدَ، وَالْمِزْرُ يُصْنَعُ مِنَ الشَّعِيرِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ مَا أَسْكَرَ عَنِ الصَّلَاةِ فَهُوَ حَرَامٌ»


Muslim-4072

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4072. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் ஒன்பது அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் சுஃப்யான் மற்றும் சாலிஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) பற்றிக் கேட்கப்பட்டது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை. மஅமர் (ரஹ்) மற்றும் சாலிஹ் (ரஹ்) ஆகியோரது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்” என்று கூறியதை நான் கேட்டேன்” என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Book : 36


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، كُلُّهُمْ عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وحَدَّثَنَا حَسَنٌ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كُلُّهُمْ عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ، وَلَيْسَ فِي حَدِيثِ سُفْيَانَ، وَصَالِحٍ، سُئِلَ عَنِ الْبِتْعِ، وَهُوَ فِي حَدِيثِ مَعْمَرٍ، وَفِي حَدِيثِ صَالِحٍ: أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ شَرَابٍ مُسْكِرٍ حَرَامٌ»


Muslim-4071

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

4071. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 36


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِتْعِ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


Muslim-4070

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 7

போதை தரும் ஒவ்வொரு பானமும் மதுவேயாகும். அனைத்து மதுபானமும் தடைசெய்யப்பட்டதாகும் என்பதன் விளக்கம்.

4070. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தேனிலிருந்து தயாரிக்கப்படும் பானம் (பித்உ) குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் “போதை தரும் ஒவ்வொரு பானமும் தடை செய்யப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

இதை இப்னு ஷிஹாப் அஸ்ஸஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மாலிக் பின் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 36


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْبِتْعِ، فَقَالَ: «كُلُّ شَرَابٍ أَسْكَرَ فَهُوَ حَرَامٌ»


Next Page » « Previous Page