Category: முஸ்லிம்

Muslim-3888

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3888. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் யாருக்கு நன்மையை நாடுகின்றானோ அவரை மார்க்க (விளக்கமுடைய) அறிஞராக்குகிறான். முஸ்லிம்களில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாகப் போராடிய வண்ணம் தம் எதிரிகளைவிட மேலோங்கியவர்களாகவே யுகமுடிவு நாள்வரை நீடித்திருப்பார்கள்.

இதை முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளரான யஸீத் பின் அல்அஸம்மு (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

முஆவியா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவித்த இந்த ஒரு ஹதீஸை (மட்டுமே) நான் செவியுற்றேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இந்த ஹதீஸைத் தவிர வேறெதையும் முஆவியா (ரலி) அவர்கள் மிம்பர் மீதிருந்தபடி குறிப்பிட்டதை நான் கேட்டதில்லை.

Book : 33


«مَنْ يُرِدِ اللهُ بِهِ خَيْرًا يُفَقِّهْهُ فِي الدِّينِ، وَلَا تَزَالُ عِصَابَةٌ مِنَ الْمُسْلِمِينَ يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ عَلَى مَنْ نَاوَأَهُمْ، إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Muslim-3887

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3887. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறைக்கட்டளையை நிலைநாட்டிய வண்ணமே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களோ அவர்களை எதிர்ப்பவர்களோ அவர்களுக்கு எந்தத் தீங்கும் இழைக்க முடியாது. அவர்கள் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களிடம் இறைக் கட்டளை வரும். -இதை முஆவியா (ரலி) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி அறிவித்தார்கள்.

Book : 33


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي قَائِمَةً بِأَمْرِ اللهِ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ أَوْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ وَهُمْ ظَاهِرُونَ عَلَى النَّاسِ»


Muslim-3886

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3886. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் இறுதி நாள்வரை உண்மைக்கு ஆதரவாகப் போராடிக்கொண்டே இருப்பார்கள்.

இதை ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 33


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي يُقَاتِلُونَ عَلَى الْحَقِّ ظَاهِرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ»


Muslim-3885

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3885. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த மார்க்கத்திற்காக முஸ்லிம்களில் ஒரு குழுவினர் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலேயே மறுமை நிகழும். அதுவரை இந்த மார்க்கம் நிலைத்திருக்கும்.

இதை ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 33


«لَنْ يَبْرَحَ هَذَا الدِّينُ قَائِمًا، يُقَاتِلُ عَلَيْهِ عِصَابَةٌ مِنَ الْمُسْلِمِينَ، حَتَّى تَقُومَ السَّاعَةُ»


Muslim-3884

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3884. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் (உண்மையை மறுக்கும்) மக்களை மிகைத்தவர்களாகவே இருந்துகொண்டிருப்பார்கள். இறுதியில் அவர்கள் மிகைத்தவர்களாக இருக்கும்போதே அவர்களிடம் இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.

இதை முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 33


«لَنْ يَزَالَ قَوْمٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى النَّاسِ، حَتَّى يَأْتِيَهُمْ أَمْرُ اللهِ وَهُمْ ظَاهِرُونَ»

– وحَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي إِسْمَاعِيلُ، عَنْ قَيْسٍ، قَالَ: سَمِعْتُ الْمُغِيرَةَ بْنَ شُعْبَةَ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: بِمِثْلِ حَدِيثِ مَرْوَانَ سَوَاءً


Muslim-3883

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 53

“என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் எப்போதுமே உண்மைக்கு ஆதரவாளர்களாக இருப்பார்கள். அவர்களை எதிர்ப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது” என நபி (ஸல்) அவர்கள் கூறியது.

3883. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் சமுதாயத்தாரில் ஒரு குழுவினர் உண்மைக்கு ஆதரவாளர்களாக இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்குத் துரோகம் இழைப்பவர்களால் அவர்களுக்குத் தீங்கு செய்ய முடியாது. இறுதியில் அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே இறைக்கட்டளை (மறுமைக்கு நெருக்கமான நிலை) வந்துவிடும்.

இதை ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் குதைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அவர்கள் இதே நிலையில் இருக்கும்போதே” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 33


«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي ظَاهِرِينَ عَلَى الْحَقِّ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ وَهُمْ كَذَلِكَ»، وَلَيْسَ فِي حَدِيثِ قُتَيْبَةَ: وَهُمْ كَذَلِكَ


Muslim-3882

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3882. அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஃபுகைம் அல்லக்மீ என்பவர் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடம் “(முதியவரான) தாங்கள் (அம்பெய்வதற்காக) இவ்விரு இலக்குகளுக்கிடையே உங்களைச் சிரமப்படுத்திக் கொள்கிறீர்களே!” என்று கேட்டார். அதற்கு உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை நான் செவியுற்றிராவிட்டால் இதற்காக நான் சிரமம் எடுத்துக்கொள்ளமாட்டேன்” என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளரான ஹாரிஸ் பின் யஅகூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அப்துர்ரஹ்மான் பின் ஷிமாஸா (ரஹ்) அவர்களிடம், “அது என்ன (செய்தி)?” என்று கேட்டேன். அதற்கு அப்துர்ரஹ்மான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், யார் அம்பெய்வதைப் பயின்ற பின் அதைக் கைவிட்டுவிடுகிறாரோ அவர் “நம்மைச் சேர்ந்தவர் அல்லர்” அல்லது “(நமக்கு) மாறுசெய்துவிட்டார்” என்று கூறினார்கள்” என பதிலளித்தார்கள்.

அத்தியாயம்: 33


أَنَّ فُقَيْمًا اللَّخْمِيَّ، قَالَ لِعُقْبَةَ بْنِ عَامِرٍ: تَخْتَلِفُ بَيْنَ هَذَيْنِ الْغَرَضَيْنِ وَأَنْتَ كَبِيرٌ يَشُقُّ عَلَيْكَ، قَالَ عُقْبَةُ: لَوْلَا كَلَامٌ سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ أُعَانِيهِ، قَالَ الْحَارِثُ: فَقُلْتُ لِابْنِ شَمَاسَةَ: وَمَا ذَاكَ؟ قَالَ: إِنَّهُ قَالَ: «مَنْ عَلِمَ الرَّمْيَ، ثُمَّ تَرَكَهُ، فَلَيْسَ مِنَّا» أَوْ «قَدْ عَصَى»


Muslim-3881

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3881. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

விரைவில் பல நாடுகள் உங்களால் வெற்றிகொள்ளப்படும். அதற்கு இறைவனே உங்களுக்குப் போதுமானவன். எனவே, உங்களில் ஒருவர் தம் அம்புகளால் விளையாட இயலாமல் போய்விட வேண்டாம்.

இதை உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 33


«سَتُفْتَحُ عَلَيْكُمْ أَرَضُونَ، وَيَكْفِيكُمُ اللهُ، فَلَا يَعْجِزُ أَحَدُكُمْ أَنْ يَلْهُوَ بِأَسْهُمِهِ»

– وحَدَّثَنَاهُ دَاوُدُ بْنُ رُشَيْدٍ، حَدَّثَنَا الْوَلِيدُ، عَنْ بَكْرِ بْنِ مُضَرَ، عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ، عَنْ أَبِي عَلِيٍّ الْهَمْدَانِيِّ، قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ


Muslim-3880

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 52

அம்பெய்வதன் சிறப்பும் அதற்காக ஆர்வமூட்டுவதும் அதைப்பயின்று மறந்து விட்டவர் குறித்து வந்துள்ள பழிப்புரையும்.

3880. உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீதிருந்தபடி “நீங்கள் அவர்களுக்கெதிராக உங்களால் இயன்ற அளவுக்குப் பலத்தைத் தயார்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்” (8:60) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டு, “அறிந்து கொள்க: பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும். அறிக! பலம் என்பது அம்பெய்வதாகும்” என்று கூறினார்கள்.

Book : 33


سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ عَلَى الْمِنْبَرِ، يَقُولُ: ” {وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ} [الأنفال: 60]، أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ، أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ، أَلَا إِنَّ الْقُوَّةَ الرَّمْيُ


Muslim-3879

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3879. ஹஃப்ஸா பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் என்னிடம், “(உங்கள் சகோதரர்) யஹ்யா பின் அபீஅம்ரா எதனால் இறந்தார்?” என்று கேட்டார்கள். நான், “கொள்ளை நோயால் இறந்தார்” என்று பதிலளித்தேன். அவர்கள், “கொள்ளை நோய் (மரணம்), ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வீரமரணமாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாகச் சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 33


قَالَ لِي أَنَسُ بْنُ مَالِكٍ: بِمَ مَاتَ يَحْيَى بْنُ أَبِي عَمْرَةَ؟ قَالَتْ: قُلْتُ: بِالطَّاعُونِ، قَالَتْ: فَقَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطَّاعُونُ شَهَادَةٌ لِكُلِّ مُسْلِمٍ»

– وَحَدَّثَنَاهُ الْوَلِيدُ بْنُ شُجَاعٍ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُسْهِرٍ، عَنْ عَاصِمٍ، فِي هَذَا الْإِسْنَادِ بِمِثْلِهِ


Next Page » « Previous Page