Category: முஸ்லிம்

Muslim-3135

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3135. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(முஆவியா (ரலி) அவர்களது ஆட்சி யின்) முதலாண்டுவரை “முகாபரா” முறையில் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நாங்கள் குற்றமாகக் கருதாமல் இருந்தோம். பின்னர் (முஆவியா (ரலி) அவர்களது ஆட்சியின் இறுதிக் கட்டத்தில்) ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்துள்ளார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 21


«كُنَّا لَا نَرَى بِالْخِبْرِ بَأْسًا حَتَّى كَانَ عَامُ أَوَّلَ، فَزَعَمَ رَافِعٌ أَنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْهُ»


Muslim-3134

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3134. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா”வையும் “முஹாகலா”வையும் தடை செய்தார்கள். “முஸாபனா”என்பது, பேரீச்சமரத்தின் உச்சியிலுள்ள (உலராத) கனிகளுக்குப் பதிலாக, உலர்ந்த கனிகளை வாங்குவதாகும். “முஹாகலா” என்பது, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ»، ” وَالْمُزَابَنَةُ: اشْتِرَاءُ الثَّمَرِ فِي رُءُوسِ النَّخْلِ، وَالْمُحَاقَلَةُ: كِرَاءُ الْأَرْضِ


Muslim-3133

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3133. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா”வையும் “முஸாபனா”வையும் தடை செய்தார்கள்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ، وَالْمُزَابَنَةِ»


Muslim-3132

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3132. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா”வையும் “ஹுகூலை”யும் தடை செய்தார்கள்.

“முஸாபனா” என்பது, (மரத்திலுள்ள) உலராத பேரீச்சங்கனிக்குப் பதிலாக (கொய்து அளக்கப்பட்ட) கனிகளை விற்பதாகும்.”ஹுகூல்” என்பது, நிலத்தைக் குத்தகைக்கு விடுவதாகும்.

Book : 21


أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَنْهَى عَنِ الْمُزَابَنَةِ وَالْحُقُولِ»،

فَقَالَ جَابِرُ بْنُ عَبْدِ اللهِ: ” الْمُزَابَنَةُ: الثَّمَرُ بِالتَّمْرِ، وَالْحُقُولُ: كِرَاءُ الْأَرْضِ


Muslim-3131

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3131. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் உள்ளதோ அவர் அதில் தாமே பயிரிடட்டும்! அல்லது அதைத் தம் (முஸ்லிம்) சகோதரருக்கு (பிரதிபலன் கருதாமல்) இலவசமாக(ப் பயிர் செய்ய)க் கொடுத்து விடட்டும். இவ்வாறு செய்ய மனமில்லாவிட்டால்,தமது நிலத்தை அப்படியே (பயிரிடாமல்) வைத்திருக்கட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 21


«مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَزْرَعْهَا، أَوْ لِيَمْنَحْهَا أَخَاهُ، فَإِنْ أَبَى فَلْيُمْسِكْ أَرْضَهُ»


Muslim-3130

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3130. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், பல்லாண்டு விளைச்சலை (முன்கூட்டியே) விற்பதற்கு (“முஆவமா” அல்லது “பைஉஸ் ஸினீன்”) தடைவிதித்தார்கள்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. அவற்றில் அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “(மரத்தில் விளையும்) கனிகளைப் பல்லாண்டுகளுக்கு விற்பதைத் தடைசெய்தார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Book : 21


«نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ السِّنِينَ»،

وَفِي رِوَايَةِ ابْنِ أَبِي شَيْبَةَ: عَنْ بَيْعِ الثَّمَرِ سِنِينَ


Muslim-3129

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3129. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தரிசு நிலத்தை இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு (மட்டும் பயிரிடுவதற்காக) விற்பதைத் தடைசெய்தார்கள்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ الْأَرْضِ الْبَيْضَاءِ سَنَتَيْنِ أَوْ ثَلَاثًا»


Muslim-3128

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3128. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்குத் தடை விதித்தார்கள்.

நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

“(நபி (ஸல்) அவர்களது காலத்திலும் மூன்று கலீஃபாக்களின் காலத்திலும்) நாங்கள் எங்கள் நிலங்களைக் குத்தகைக்கு விட்டுவந்தோம். பின்னர் ராஃபிஉ பின் கதீஜ் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸைச் செவியுற்றபோது அதை நாங்கள் விட்டுவிட்டோம்” என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

Book : 21


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ كِرَاءِ الْأَرْضِ»، قَالَ بُكَيْرٌ: وَحَدَّثَنِي نَافِعٌ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ، يَقُولُ: كُنَّا نُكْرِي أَرْضَنَا، ثُمَّ تَرَكْنَا ذَلِكَ حِينَ سَمِعْنَا حَدِيثَ رَافِعِ بْنِ خَدِيجٍ


Muslim-3127

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3127. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

ஆயினும் அதில், “தாமே பயிரிடட்டும்! அல்லது வேறு யாருக்கேனும் பயிரிடக் கொடுக்கட்டும்!” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

Book : 21


فَلْيَزْرَعْهَا، أَوْ فَلْيُزْرِعْهَا رَجُلًا


Muslim-3126

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3126. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யாரிடம் நிலம் உள்ளதோ அவர் (அதில் தாமே பயிர் செய்யட்டும்! அல்லது) அதை (சகோதரர் எவருக்காவது) அன்பளிப்பாக வழங்கட்டும். அல்லது இரவலாகக் கொடுக்கட்டும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 21


«مَنْ كَانَتْ لَهُ أَرْضٌ فَلْيَهَبْهَا، أَوْ لِيُعِرْهَا»


Next Page » « Previous Page