Category: முஸ்லிம்

Muslim-3115

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3115. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விடுவதற்கும், பல்லாண்டு விளைச்சலை விற்பதற்கும் (முஆவமா), மரத்திலுள்ள கனிகள் (கனிந்து) நல்ல நிலையை அடைவதற்கு முன் விற்பதற்கும் தடை விதித்தார்கள்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كِرَاءِ الْأَرْضِ، وَعَنْ بَيْعِهَا السِّنِينَ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَطِيبَ»


Muslim-3114

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3114. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஹாகலா”, “முஸாபனா”, “முஆவமா”, “முகாபரா” ஆகியவற்றையும், “ஒரு பகுதியைத் தவிர” என்று கூறி விற்பதையும் தடை செய்தார்கள்.56 “அராயா”வில் மட்டும் (இவற்றுக்கு) அனுமதியளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் அபுஸ் ஸுபைர் (ரஹ்), சயீத் பின் மீனா ஆகிய இருவரில் ஒருவர் “முஆவமா” என்பது, (மரத்திலுள்ள) பழங்களின் பல்லாண்டு விளைச்சலை விற்பதாகும்” என்று கூறினார்.

இந்த ஹதீஸ் நான்கு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அவற்றில், “முஆவமா என்பது, (மரத்திலுள்ள) பழங்களின் இரண்டு போக விளைச்சலை விற்பதாகும்” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Book : 21


نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ، وَالْمُزَابَنَةِ، وَالْمُعَاوَمَةِ، وَالْمُخَابَرَةِ – قَالَ أَحَدُهُمَا: بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ – وَعَنِ الثُّنْيَا، وَرَخَّصَ فِي الْعَرَايَا

– وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، غَيْرَ أَنَّهُ لَا يَذْكُرُ بَيْعُ السِّنِينَ هِيَ الْمُعَاوَمَةُ


Muslim-3113

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3113. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “முஸாபனா”, “முஹாகலா”, “முகாபரா” ஆகியவற்றையும் கனிவதற்கு முன் (மரத்திலுள்ள) கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சலீம் பின் ஹய்யான் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் சயீத் பின் மீனா (ரஹ்) அவர்களிடம், “கனிதல் (“இஷ்காஹ்”) என்றால் என்ன?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “உண்பதற்கு ஏற்றவாறு சிவப்பாக, மஞ்சளாக மாறுவது” என விடையளித்தார்கள்.

Book : 21


«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُزَابَنَةِ، وَالْمُحَاقَلَةِ، وَالْمُخَابَرَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُشْقِحَ»، قَالَ: قُلْتُ لِسَعِيدٍ: مَا تُشْقِحُ؟ قَالَ: «تَحْمَارُّ وَتَصْفَارُّ، وَيُؤْكَلُ مِنْهَا»


Muslim-3112

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3112. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா”, “முஸாபனா”, “முகாபரா” ஆகிய வியாபாரங்களையும்,கனிவதற்கு முன் மரத்(திலுள்ள பழ)த்தை (உலர்ந்த பழத்திற்குப் பதிலாக) விற்பதையும் தடை செய்தார்கள். “கனிதல்” (“இஷ்காஹ்”) என்பது, பழம் சிவப்பாகவோ மஞ்சளாகவோ உண்பதற்கு ஏற்றதாகவோ மாறுவதாகும். “முஹாகலா” என்பது, (அறுவடை செய்யப்படாத) பயிர்களை அளவு அறியப்பட்ட (அறுவடை செய்யப்பட்ட) உணவுப் பொருளுக்குப் பதிலாக விற்பதாகும்.

“முஸாபனா” என்பது, பேரீச்ச மரத்(திலுள்ள பழத்)தை (பறிக்கப்பட்ட) குறிப்பிட்ட அளவிலான உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்குப் பதிலாக விற்பதாகும். “முகாபரா” என்பது, விளைச்சலில் மூன்றில் ஒரு பாகத்தை அல்லது நான்கில் ஒரு பாகத்தை அல்லது அது போன்றதை (தனக்குத் தந்துவிடவேண்டும் எனும் நிபந்தனையின் பேரில் ஒரு நிலத்தை)க் கொடுப்பதாகும்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸைத் பின் அபீ உனைஸா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான்

«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُحَاقَلَةِ، وَالْمُزَابَنَةِ، وَالْمُخَابَرَةِ، وَأَنْ تُشْتَرَى النَّخْلُ حَتَّى تُشْقِهَ»، وَالْإِشْقَاهُ: أَنْ يَحْمَرَّ، أَوْ يَصْفَرَّ، أَوْ يُؤْكَلَ مِنْهُ شَيْءٌ، وَالْمُحَاقَلَةُ: أَنْ يُبَاعَ الْحَقْلُ بِكَيْلٍ مِنَ الطَّعَامِ مَعْلُومٍ، وَالْمُزَابَنَةُ: أَنْ يُبَاعَ النَّخْلُ بِأَوْسَاقٍ مِنَ التَّمْرِ، وَالْمُخَابَرَةُ: الثُّلُثُ وَالرُّبُعُ وَأَشْبَاهُ ذَلِكَ “، قَالَ زَيْدٌ: قُلْتُ لِعَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ: أَسَمِعْتَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ يَذْكُرُ هَذَا عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: نَعَمْ


Muslim-3111

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3111. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முகாபரா”, “முஹாகலா”, “முஸாபனா” ஆகிய வியாபாரங்களையும், உண்ணும் பக்குவத்தை அடையாத (மரத்திலுள்ள) பழங்களை விற்பதையும் தடைசெய்தார்கள். பொற்காசு மற்றும் வெள்ளிக்காசுக்காக மட்டுமே அந்தப் பழங்களை விற்கலாம்; மற்றபடி “அராயா”வில் தவிர (மற்ற முறைகளில்) அதற்கு அனுமதியில்லை (என்றும் உத்தரவிட்டார்கள்).

இதன் அறிவிப்பாளரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஜாபிர் (ரலி) அவர்கள் (முகாபரா, முஸாபனா, முஹாகலா ஆகியவற்றுக்குப் பின்வருமாறு) எங்களிடம் விளக்கமளித்தார்கள்:

“முகாபரா” என்பது, ஒருவர் தரிசு நிலத்தை மற்றொருவருக்குக் கொடுக்க, அவர் செலவு செய்து (மரம் நட்டு) அதன் கனிகளில் சிலவற்றை எடுத்துக்கொள்வதாகும்.

“முஸாபனா” என்பது, மரத்திலுள்ள பேரீச்சம் செங்காயை, அளக்கப்பெற்ற உலர்ந்த பேரீச்சங் கனிகளுக்குப் பதிலாக விற்பதாகும்.

வேளாண்மையில்

«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنِ الْمُخَابَرَةِ وَالْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرَةِ حَتَّى تُطْعِمَ، وَلَا تُبَاعُ إِلَّا بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ، إِلَّا الْعَرَايَا» قَالَ عَطَاءٌ: فَسَّرَ لَنَا جَابِرٌ، قَالَ: ” أَمَّا الْمُخَابَرَةُ: فَالْأَرْضُ الْبَيْضَاءُ، يَدْفَعُهَا الرَّجُلُ إِلَى الرَّجُلِ فَيُنْفِقُ فِيهَا، ثُمَّ يَأْخُذُ مِنَ الثَّمَرِ، وَزَعَمَ أَنَّ الْمُزَابَنَةَ: بَيْعُ الرُّطَبِ فِي النَّخْلِ بِالتَّمْرِ كَيْلًا، وَالْمُحَاقَلَةُ فِي الزَّرْعِ عَلَى نَحْوِ ذَلِكَ، يَبِيعُ الزَّرْعَ الْقَائِمَ بِالْحَبِّ كَيْلًا


Muslim-3110

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 16

முஹாகலா, முஸாபனா, முகாபரா ஆகிய வியாபாரங்களும், பலன் உறுதிப்படாத நிலையில் மரத்திலுள்ள கனிகளை விற்பதும், மரத்திலுள்ள கனிகளின் பல ஆண்டு விளைச்சலை விற்பதும் (முஆவமா) தடை செய்யப்பட்டுள்ளன.

3110. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “முஹாகலா”, “முஸாபனா” மற்றும் “முகாபரா” ஆகிய வியாபாரங்களையும்,பலன் உறுதிப்படாத நிலையில் மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள். பொற்காசு மற்றும் வெள்ளிக்காசுக்காக மட்டுமே (மரத்திலுள்ள) உலராத பழங்களை விற்கலாம்; மற்றபடி “அராயா”வில் தவிர (மற்ற முறைகளில்) அதற்கு அனுமதியில்லை (என்றும் உத்தரவிட்டார்கள்).

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book

«نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْمُحَاقَلَةِ وَالْمُزَابَنَةِ وَالْمُخَابَرَةِ، وَعَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يَبْدُوَ صَلَاحُهُ، وَلَا يُبَاعُ إِلَّا بِالدِّينَارِ وَالدِّرْهَمِ، إِلَّا الْعَرَايَا»

– وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا أَبُو عَاصِمٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، وَأَبِي الزُّبَيْرِ أَنَّهُمَا سَمِعَا جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، يَقُولُ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَذَكَرَ بِمِثْلِهِ


Muslim-3109

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3109. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சமரத்தை ஒருவர் விலைக்கு வாங்கினால், (தற்போதுள்ள) அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; விலைக்கு வாங்கியவர் (தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர. (செல்வம் வைத்திருக்கும்) ஓர் அடிமையை ஒருவர் விலைக்கு வாங்கினால், அவ்வடிமையின் செல்வம் விற்றவருக்கே சேரும்; (அச்செல்வம் தமக்கே சேர வேண்டுமென) வாங்கியவர் நிபந்தனை விதித்திருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 21


«مَنِ ابْتَاعَ نَخْلًا بَعْدَ أَنْ تُؤَبَّرَ فَثَمَرَتُهَا لِلَّذِي بَاعَهَا، إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ، وَمَنِ ابْتَاعَ عَبْدًا فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ، إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»

– وَحَدَّثَنَاهُ يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ

وحَدَّثَنِي حَرْمَلَةُ بْنُ يَحْيَى، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، حَدَّثَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّ أَبَاهُ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ


Muslim-3108

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3108. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் பேரீச்சமரத்திற்கு மகரந்தச் சேர்க்கை செய்து, அதை வேரோடு விற்றால் மகரந்தச் சேர்க்கை செய்த அவருக்கே (தற்போதுள்ள) அதன் கனிகள் சேரும்; விலைக்கு வாங்கியவர் (அதன் கனிகள் தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 21


«أَيُّمَا امْرِئٍ أَبَّرَ نَخْلًا، ثُمَّ بَاعَ أَصْلَهَا، فَلِلَّذِي أَبَّرَ ثَمَرُ النَّخْلِ، إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»

– وَحَدَّثَنَاهُ أَبُو الرَّبِيعِ، وَأَبُو كَامِلٍ، قَالَا: حَدَّثَنَا حَمَّادٌ، ح وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، كِلَاهُمَا عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ


Muslim-3107

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3107. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சமரம் வேரோடு விலைக்கு வாங்கப்பட்டால், (தற்போதுள்ள) அதன் கனிகள் மகரந்தச் சேர்க்கை செய்த(விற்ற)வருக்கே சேரும்; (தமக்கே சேர வேண்டுமென) வாங்கியவர் முன்நிபந்தனை விதித்திருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 21


«أَيُّمَا نَخْلٍ اشْتُرِيَ أُصُولُهَا وَقَدْ أُبِّرَتْ، فَإِنَّ ثَمَرَهَا لِلَّذِي أَبَّرَهَا، إِلَّا أَنْ يَشْتَرِطَ الَّذِي اشْتَرَاهَا»


Muslim-3106

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 15

கனிகள் உள்ள பேரீச்ச மரத்தை விற்பது.

3106. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்சமரத்தை யாரேனும் விற்றால் (தற்போதுள்ள) அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்கே சேர வேண்டுமென) முன்நிபந்தனையிட்டிருந்தால் தவிர.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 21


«مَنْ بَاعَ نَخْلًا قَدْ أُبِّرَتْ، فَثَمَرَتُهَا لِلْبَائِعِ، إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»


Next Page » « Previous Page