Category: முஸ்லிம்

Muslim-3025

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 6

அடிமையை விடுதலை செய்வதன் சிறப்பு.

3025. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறைநம்பிக்கையுள்ள (முஃமினான) ஓர் அடிமையை யார் விடுதலை செய்கிறாரோ (விடுதலை செய்யப்பட்ட) அந்த அடிமையின் ஒவ்வோர் உறுப்புக்கும் பகரமாக (விடுதலை செய்தவரின்) ஓர் உறுப்பை நரகத்திலிருந்து அல்லாஹ் விடுதலை செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 20


«مَنْ أَعْتَقَ رَقَبَةً مُؤْمِنَةً، أَعْتَقَ اللهُ بِكُلِّ إِرْبٍ مِنْهَا إِرْبًا مِنْهُ مِنَ النَّارِ»


Muslim-3024

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3024. யஸீத் பின் ஷரீக் பின் தாரிக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் எங்களுக்கு உரையாற்றினார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நாம் ஓதிவருகின்ற இறைவேதத்தையும் (நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற) இந்த ஏட்டையும் தவிர (எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம்) வேறெதுவும் (நபியின் குடும்பத்தாரான) எங்களிடம் இருப்பதாக யார் கூறுகிறாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். (அப்போது அலீ (ரலி) அவர்களது வாள் உறை வைக்கும் பை ஒன்றில் ஓர் ஏடு மாட்டப்பட்டிருந்தது.) அந்த ஏட்டில் (உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும்) ஒட்டகங்களின் வயது குறித்தும், காயங்களுக்கான தண்டனை குறித்தும் எழுதப்பட்டிருந்தது.

மேலும், அதில் நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள் என (எழுதப்பட்டு) இருந்தது: மதீனா நகரம் “அய்ர்”எனும் மலையிலிருந்து “ஸவ்ர்” மலைவரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை உருவாக்குகிறாரோ, அல்லது (அவ்வாறு) புதிதாக ஒன்றை உருவாக்குபவருக்கு அடைக்கலம் அளிக்கிறாரோ

خَطَبَنَا عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ، فَقَالَ: مَنْ زَعَمَ أَنَّ عِنْدَنَا شَيْئًا نَقْرَؤُهُ إِلَّا كِتَابَ اللهِ وَهَذِهِ الصَّحِيفَةَ، قَالَ: وَصَحِيفَةٌ مُعَلَّقَةٌ فِي قِرَابِ سَيْفِهِ، فَقَدْ كَذَبَ، فِيهَا أَسْنَانُ الْإِبِلِ، وَأَشْيَاءُ مِنَ الْجِرَاحَاتِ، وَفِيهَا قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا، أَوْ آوَى مُحْدِثًا، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا، وَلَا عَدْلًا، وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ، وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ، أَوِ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يَقْبَلُ اللهُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفًا، وَلَا عَدْلًا»


Muslim-3023

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3023. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தமக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகிறாரோ அந்த அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் மறுமை நாளில் அவரிடமிருந்து ஏற்கப்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, அவர்கள் அல்லாதவர்களை உரிமையாளர்களாக ஆக்கிக்கொள்கிறாரோ” என இடம்பெற்றுள்ளது.

Book : 20


«مَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ عَدْلٌ، وَلَا صَرْفٌ»

-وحَدَّثَنِيهِ إِبْرَاهِيمُ بْنُ دِينَارٍ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ بْنُ مُوسَى، حَدَّثَنَا شَيْبَانُ، عَنِ الْأَعْمَشِ، بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ: «وَمَنْ وَالَى غَيْرَ مَوَالِيهِ بِغَيْرِ إِذْنِهِمْ»


Muslim-3022

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

3022. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் தம்மை விடுதலை செய்த உரிமையாளர்களின் அனுமதியின்றி, தமக்கு வாரிசாகும் உரிமையை வேறொரு கூட்டத்தாருக்கு வழங்குகிறாரோ அந்த அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்களின் சாபமும் உண்டாகும். மேலும், அவர் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவரிடமிருந்து ஏற்கப்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 20


«مَنْ تَوَلَّى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ، فَعَلَيْهِ لَعْنَةُ اللهِ وَالْمَلَائِكَةِ، لَا يُقْبَلُ مِنْهُ عَدْلٌ، وَلَا صَرْفٌ»


Muslim-3021

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 5

விடுதலை செய்த உரிமையாளர்கள் அல்லாத மற்றவர்களை ஓர் அடிமை தன் உரிமையாளர்கள் எனக் கூறலாகாது.

3021. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஒவ்வொரு குலத்தாரின் மீதும், (அவர்களில் ஒருவர் தவறுதலாகச் செய்துவிட்ட கொலைக் குற்றத்திற்கு) உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என விதியாக்கினார்கள். பிறகு “எந்த ஒரு முஸ்லிமும் மற்றொரு முஸ்லிமான மனிதரால் விடுதலை செய்யப்பட்ட அடிமைக்கு, அவரது அனுமதியின்றி வாரிசாகிக்கொள்வது சட்டப்படி கூடாது” என்றும் விதியாக்கினார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவ்வாறு செய்பவரை நபி (ஸல்) அவர்கள் (பல்வேறு குலங்களுக்கு எழுதிய) தமது கடிதத்தில் சபித்திருந்தார்கள் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டது.

Book : 20


كَتَبَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَلَى كُلِّ بَطْنٍ عُقُولَهُ»، ثُمَّ كَتَبَ: «أَنَّهُ لَا يَحِلُّ لِمُسْلِمٍ أَنْ يُتَوَالَى مَوْلَى رَجُلٍ مُسْلِمٍ بِغَيْرِ إِذْنِهِ»، ثُمَّ أُخْبِرْتُ أَنَّهُ لَعَنَ فِي صَحِيفَتِهِ مَنْ فَعَلَ ذَلِكَ


Muslim-3020

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 4

(முன்னாள் அடிமைக்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அன்பளிப்பாக வழங்குவதற்கும் வந்துள்ள தடை.

3020. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (முன்னாள் அடிமைக்கு) வாரிசாகும் உரிமையை விற்பதற்கும் அதை அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை விதித்தார்கள்.

முஸ்லிம் (பின் அல்ஹஜ்ஜாஜ்) ஆகிய நான் கூறுகிறேன்:

இந்த ஹதீஸை மக்கள் அனைவரும் அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்தே அறிவிக்கின்றனர்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஒன்பது அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், அப்துல் வஹ்ஹாப் பின் அப்தில் மஜீத் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களது அறிவிப்பில் விற்பதற்குத் தடை விதித்தார்கள் என்பது மட்டுமே இடம்பெற்றுள்ளது. “அன்பளிப்பாக வழங்குவதற்கும் தடை விதித்தார்கள்” எனும் குறிப்பு இடம் பெறவில்லை.

«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الْوَلَاءِ، وَعَنْ هِبَتِهِ»، قَالَ مُسْلِمٌ: «النَّاسُ كُلُّهُمْ عِيَالٌ عَلَى عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ فِي هَذَا الْحَدِيثِ»

– وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ عُيَيْنَةَ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، قَالُوا: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيدٍ، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا عُبَيْدُ اللهِ، ح وحَدَّثَنَا ابْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، أَخْبَرَنَا الضَّحَّاكُ يَعْنِي ابْنَ عُثْمَانَ، كُلُّ هَؤُلَاءِ عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، غَيْرَ أَنَّ الثَّقَفِيَّ لَيْسَ فِي حَدِيثِهِ عَنْ عُبَيْدِ اللهِ، إِلَّا الْبَيْعُ، وَلَمْ يَذْكُرِ الْهِبَةَ