Category: முஸ்லிம்

Muslim-2845

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2845. ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

குர்ஆன் அருளப்பெறும் காலத்தில் நாங்கள் “புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) செய்து கொண்டிருந்தோம்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அது தடை செய்யப்பட வேண்டிய ஒன்றாக இருந்தால் அவ்வாறு செய்யக் கூடாதெனக் குர்ஆனே நமக்குத் தடை விதித்திருக்கும்” என சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறினார்கள் எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

Book : 16


«كُنَّا نَعْزِلُ، وَالْقُرْآنُ يَنْزِلُ»، زَادَ إِسْحَاقُ، قَالَ سُفْيَانُ: لَوْ كَانَ شَيْئًا يُنْهَى عَنْهُ لَنَهَانَا عَنْهُ الْقُرْآنُ


Muslim-2844

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2844. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், “என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். நான் அவளிடம் “புணர்ச்சி இடைமுறிப்பு”ச் செய்துவருகிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அ(வ்வாறு அஸ்ல் செய்வ)து அல்லாஹ் நாடியுள்ள எதையும் தடுத்து விடப்போவதில்லை” என்றார்கள். அந்த மனிதர் (சில நாட்களுக்குப் பின்) வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களிடம் குறிப்பிட்ட அந்த அடிமைப் பெண் கருவுற்று விட்டாள்” என்றார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நான் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதரும் ஆவேன்” என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து” என்று ஹதீஸ் ஆரம்பமாகிறது.

Book : 16


سَأَلَ رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ عِنْدِي جَارِيَةً لِي، وَأَنَا أَعْزِلُ عَنْهَا، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ ذَلِكَ لَنْ يَمْنَعَ شَيْئًا أَرَادَهُ اللهُ» قَالَ: فَجَاءَ الرَّجُلُ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّ الْجَارِيَةَ الَّتِي كُنْتُ ذَكَرْتُهَا لَكَ حَمَلَتْ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا عَبْدُ اللهِ وَرَسُولُهُ»

– وحَدَّثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ الزُّبَيْرِيُّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ حَسَّانَ، قَاصُّ أَهْلِ مَكَّةَ، أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ عِيَاضِ بْنِ عَدِيِّ بْنِ الْخِيَارِ النَّوْفَلِيُّ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَعْنَى حَدِيثِ سُفْيَانَ


Muslim-2843

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2843. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “என்னிடம் ஓர் அடிமைப் பெண் இருக்கிறாள். அவளே எங்களுக்குப் பணிவிடை செய்பவளாகவும் தண்ணீர் சுமப்பவளாகவும் உள்ளாள். அவளிடம் நான் சென்றுவருகிறேன். (அதே சமயம்) அவள் கருவுற்றுவிடுவதை நான் விரும்பவில்லை” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ விரும்பினால் “புணர்ச்சி இடை முறிப்பு” (அஸ்ல்) செய்துகொள். ஆயினும், அவளுக்கு விதிக்கப்பட்டுள்ளது அவளிடம் நிச்சயம் வந்துசேரும்”என்றார்கள். அம்மனிதர் சில நாட்கள் கழிந்த பின் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அந்த அடிமைப் பெண் கருவுற்றுவிட்டாள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவளுக்கு விதிக்கப்பட்டது நிச்சயம் அவளிடம் வந்துசேரும் என உம்மிடம் நான் ஏற்கெனவே கூறிவிட்டேனே!” என்றார்கள்.

Book : 16


أَنَّ رَجُلًا أَتَى رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: إِنَّ لِي جَارِيَةً، هِيَ خَادِمُنَا وَسَانِيَتُنَا، وَأَنَا أَطُوفُ عَلَيْهَا، وَأَنَا أَكْرَهُ أَنْ تَحْمِلَ، فَقَالَ: «اعْزِلْ عَنْهَا إِنْ شِئْتَ، فَإِنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا»، فَلَبِثَ الرَّجُلُ، ثُمَّ أَتَاهُ، فَقَالَ: إِنَّ الْجَارِيَةَ قَدْ حَبِلَتْ، فَقَالَ: «قَدْ أَخْبَرْتُكَ أَنَّهُ سَيَأْتِيهَا مَا قُدِّرَ لَهَا»


Muslim-2842

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2842. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) செய்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “விந்தின் அனைத்து (உயிரணு)க் கூறுகளிலிருந்தும் குழந்தை உருவாவதில்லை. (ஒரே உயிரணு போதும்.) அல்லாஹ் ஒன்றைப் படைக்க நாடிவிட்டால் அவனை எதுவும் தடுக்க முடியாது” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 16


سُئِلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، عَنِ الْعَزْلِ، فَقَالَ: «مَا مِنْ كُلِّ الْمَاءِ يَكُونُ الْوَلَدُ، وَإِذَا أَرَادَ اللهُ خَلْقَ شَيْءٍ، لَمْ يَمْنَعْهُ شَيْءٌ»

– حَدَّثَنِي أَحْمَدُ بْنُ الْمُنْذِرِ الْبَصْرِيُّ، حَدَّثَنَا زَيْدُ بْنُ حُبَابٍ، حَدَّثَنَا مُعَاوِيَةُ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ أَبِي طَلْحَةَ الْهَاشِمِيُّ، عَنْ أَبِي الْوَدَّاكِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِهِ


Muslim-2841

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2841. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் “புணர்ச்சி இடைமுறிப்பு” (அஸ்ல்) குறித்துப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், “அதை உங்களில் ஒருவர் ஏன் செய்கிறார்?” என்று கேட்டுவிட்டு, -(கவனிக்கவும்: “உங்களில் எவரும் அவ்வாறு செய்ய வேண்டாம்”என்று அவர்கள் குறிப்பிடவில்லை)- “படைக்கப்பட உள்ள எந்த உயிரையும் அல்லாஹ் படைத்தே தீருவான்” என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16


ذُكِرَ الْعَزْلُ عِنْدَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” وَلِمَ يَفْعَلُ ذَلِكَ أَحَدُكُمْ؟ – وَلَمْ يَقُلْ: فَلَا يَفْعَلْ ذَلِكَ أَحَدُكُمْ – فَإِنَّهُ لَيْسَتْ نَفْسٌ مَخْلُوقَةٌ إِلَّا اللهُ خَالِقُهَا


Muslim-2840

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2840. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அருகில் “அஸ்ல்” (புணர்ச்சி இடைமுறிப்பு) பற்றிப் பேசப்பட்டது. அப்போது அவர்கள், “என்ன அது?” என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், “பாலூட்டும் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொள்ள விரும்பும் ஒருவர், அதனால் அவள் கருவுற்று விடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அவ்வாறே) தம் அடிமைப்பெண்ணோடு உறவு கொள்ள விரும்பும் ஒருவர்,அதனால் அவள் கருவுற்றுவிடுவதை விரும்பாமல் இருக்கலாம். (அப்போது “அஸ்ல்” செய்துகொள்வார்)” என்று விடையளித்தனர். நபி (ஸல்) அவர்கள், “அவ்வாறு செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல் லாஹ் பின் அவ்ன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் ஹசன் பின் அபில் ஹசன் யசார் (ரஹ்) அவர்களிடம் அறிவித்தேன். அப்போது அவர்கள், “அல்லாஹ்வின் மீதாணையாக! இது ஒரு கண்டனத்தைப் போன்றுள்ளது” என்று கூறினார்கள்.


ذُكِرَ الْعَزْلُ عِنْدَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «وَمَا ذَاكُمْ؟» قَالُوا: الرَّجُلُ تَكُونُ لَهُ الْمَرْأَةُ تُرْضِعُ، فَيُصِيبُ مِنْهَا، وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ، وَالرَّجُلُ تَكُونُ لَهُ الْأَمَةُ فَيُصِيبُ مِنْهَا، وَيَكْرَهُ أَنْ تَحْمِلَ مِنْهُ، قَالَ: «فَلَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ذَاكُمْ، فَإِنَّمَا هُوَ الْقَدَرُ»، قَالَ ابْنُ عَوْنٍ: فَحَدَّثْتُ بِهِ الْحَسَنَ، فَقَالَ: وَاللهِ لَكَأَنَّ هَذَا زَجْرٌ

– وحَدَّثَنِي حَجَّاجُ بْنُ الشَّاعِرِ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنِ ابْنِ عَوْنٍ، قَالَ: حَدَّثْتُ مُحَمَّدًا، عَنْ إِبْرَاهِيمَ، بِحَدِيثِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بِشْرٍ – يَعْنِي حَدِيثَ الْعَزْلِ – فَقَالَ: إِيَّايَ حَدَّثَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ

– حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى، حَدَّثَنَا هِشَامٌ، عَنْ مُحَمَّدٍ، عَنْ مَعْبَدِ بْنِ سِيرِينَ، قَالَ: قُلْنَا لِأَبِي سَعِيدٍ: هَلْ سَمِعْتَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَذْكُرُ فِي الْعَزْلِ شَيْئًا؟ قَالَ: نَعَمْ وَسَاقَ الْحَدِيثَ بِمَعْنَى حَدِيثِ ابْنِ عَوْنٍ إِلَى قَوْلِهِ الْقَدَرُ


Muslim-2839

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2839. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் “அஸ்ல்” (புணர்ச்சி இடைமுறிப்பு) குறித்து வினவப்பட்டது. அதற்கு அவர்கள், “அவ்வாறு (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. அதுவெல்லாம் விதியாகும்” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

(அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களின் அடிமையாயிருந்த) முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் “உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை” என்பது, தடையுத்தரவுக்கு நெருக்கமான சொல்லாட்சி என்று கூறினார்கள்.

Book : 16


سُئِلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الْعَزْلِ، فَقَالَ: «لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ذَاكُمْ، فَإِنَّمَا هُوَ الْقَدَرُ»، قَالَ: مُحَمَّدٌ: وَقَوْلُهُ: «لَا عَلَيْكُمْ» أَقْرَبُ إِلَى النَّهْيِ


Muslim-2838

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2838. மேற்கண்ட ஹதீஸ் மேலும் ஐந்து அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில், “அவ்வாறு நீங்கள் (அஸ்ல்) செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் விதியாகும்” என்று கூறினார்கள் என இடம் பெற்றுள்ளது.

பஹ்ஸ் பின் அசத் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் ஷுஅபா (ரஹ்) அவர்கள் “நான் அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம் “நீங்கள் இதை அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள்” என்று கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Book : 16


وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ، قَالَا: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، ح وحَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، ح وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَبَهْزٌ، قَالُوا جَمِيعًا: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ أَنَسِ بْنِ سِيرِينَ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، غَيْرَ أَنَّ فِي حَدِيثِهِمْ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْعَزْلِ: «لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا ذَاكُمْ، فَإِنَّمَا هُوَ الْقَدَرُ»، وَفِي رِوَايَةِ بَهْزٍ، قَالَ شُعْبَةُ: قُلْتُ لَهُ: سَمِعْتَهُ مِنْ أَبِي سَعِيدٍ؟ قَالَ: نَعَمْ


Muslim-2837

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2837. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அதை (அஸ்லை)ச் செய்யாமலிருப்பதால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. ஏனெனில், அதுவெல்லாம் (அதாவது கருத்தரிப்பதும் கருத்தரிக்காமல் இருப்பதும்) விதி யாகும்” என்றார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அனஸ் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) மஅபத் பின் சீரீன் (ரஹ்) அவர்களிடம், “இதை நீங்கள் அபூசயீத் (ரலி) அவர்களிடமிருந்து செவியுற்றீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம்” என்றார்கள்.

Book : 16


«لَا عَلَيْكُمْ أَنْ لَا تَفْعَلُوا، فَإِنَّمَا هُوَ الْقَدَرُ»


Muslim-2836

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2836. அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (பனூ முஸ்தலிக் போரில்) சில போர்க் கைதிகளைப் பெற்றோம். (எங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட பெண் கைதிகளுடன் உடலுறவு கொள்ளவும்) “அஸ்ல்” செய்து கொள்ளவும் விரும்பினோம். அது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போது அவர்கள், “நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டுதான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா? நீங்கள் (அஸ்ல்) செய்துகொண்டு தான் இருக்கிறீர்களா?” என்று கேட்டுவிட்டு, “மறுமை நாள்வரை உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும்” என்று கூறினார்கள்.

Book : 16


أَصَبْنَا سَبَايَا، فَكُنَّا نَعْزِلُ، ثُمَّ سَأَلْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ، فَقَالَ لَنَا: «وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ؟ وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ؟ وَإِنَّكُمْ لَتَفْعَلُونَ؟ مَا مِنْ نَسَمَةٍ كَائِنَةٍ إِلَى يَوْمِ الْقِيَامَةِ، إِلَّا هِيَ كَائِنَةٌ»


Next Page » « Previous Page