Category: முஸ்லிம்

Muslim-2815

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2815. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பெற்றால் ஏற்றுக்கொள்ளட்டும்.அவர் நோன்பு நோற்றிருந்தால் (அழைத்தவருக்காகப்) பிரார்த்திக்கட்டும்; நோன்பு நோற்காமலிருந்தால் உண்ணட்டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«إِذَا دُعِيَ أَحَدُكُمْ، فَلْيُجِبْ، فَإِنْ كَانَ صَائِمًا، فَلْيُصَلِّ، وَإِنْ كَانَ مُفْطِرًا، فَلْيَطْعَمْ»


Muslim-2814

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2814. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் உணவு உண்ண அழைக்கப்பெற்றால், ஏற்றுக்கொள்ளட்டும்.(அங்கு சென்று) விரும்பினால் உண்ணட்டும். இல்லையேல் (உண்பதை) விட்டுவிடட்டும்.

இதை ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் முஹம்மத் பின் அல்முஸன்னா (ரஹ்) அவர்களது அறிவிப்பில்”உணவு உண்ண” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் ஜாபிர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 16


«إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى طَعَامٍ، فَلْيُجِبْ، فَإِنْ شَاءَ طَعِمَ، وَإِنْ شَاءَ تَرَكَ»، وَلَمْ يَذْكُرِ ابْنُ الْمُثَنَّى: «إِلَى طَعَامٍ»

– وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ بِهَذَا الْإِسْنَادِ، بِمِثْلِهِ


Muslim-2813

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2813. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆட்டுக்கால் விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டாலும், ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«إِذَا دُعِيتُمْ إِلَى كُرَاعٍ، فَأَجِيبُوا»


Muslim-2812

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2812. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இந்த (மண)விருந்துக்கு நீங்கள் அழைக்கப்பட்டால் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை அறிவித்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (நஃபில் எனும் கூடுதல்) நோன்பு நோற்றிருந்த நிலையில்கூட மணவிருந்துக்கும் மற்ற விருந்துகளுக்கும் சென்றுவந்தார்கள்.

Book : 16


«أَجِيبُوا هَذِهِ الدَّعْوَةَ إِذَا دُعِيتُمْ لَهَا»، قَالَ: «وَكَانَ عَبْدُ اللهِ بْنُ عُمَرَ يَأْتِي الدَّعْوَةَ فِي الْعُرْسِ، وَغَيْرِ الْعُرْسِ، وَيَأْتِيهَا وَهُوَ صَائِمٌ»


Muslim-2811

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2811. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்.

இதை அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«ائْتُوا الدَّعْوَةَ إِذَا دُعِيتُمْ»


Muslim-2810

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2810. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மணவிருந்துக்கோ, மற்ற விருந்துக்கோ அழைக்கப்பட்டவர் அதை ஏற்றுச் செல்லட்டும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«مَنْ دُعِيَ إِلَى عُرْسٍ أَوْ نَحْوِهِ، فَلْيُجِبْ»


Muslim-2809

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2809. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் தம் சகோதரரை விருந்துக்கு அழைத்தால், அதை ஏற்று அவர் செல்லட்டும். அது மணவிருந்தாக இருந்தாலும் சரி, மற்ற விருந்தாக இருந்தாலும் சரி.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«إِذَا دَعَا أَحَدُكُمْ أَخَاهُ، فَلْيُجِبْ عُرْسًا كَانَ أَوْ نَحْوَهُ»


Muslim-2808

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2808. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் விருந்துக்கு அழைக்கப்பட்டால் செல்லுங்கள்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 16


«ائْتُوا الدَّعْوَةَ إِذَا دُعِيتُمْ»


Muslim-2807

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2807. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் மணவிருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்.

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 16


«إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى وَلِيمَةِ عُرْسٍ، فَلْيُجِبْ»


Muslim-2806

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2806. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் விருந்துக்கு (வலீமா) அழைக்கப்பட்டால், அதை ஏற்றுச் செல்லட்டும்!

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான காலித் பின் அல்ஹாரிஸ் (ரஹ்) அவர்கள், “வலீமா என்பது மணவிருந்தையே குறிக்கும் என உபைதுல்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்” என்றார்கள்.

Book : 16


«إِذَا دُعِيَ أَحَدُكُمْ إِلَى الْوَلِيمَةِ، فَلْيُجِبْ»، قَالَ خَالِدٌ: فَإِذَا عُبَيْدُ اللهِ يُنَزِّلُهُ عَلَى الْعُرْسِ


Next Page » « Previous Page