Category: முஸ்லிம்

Muslim-2705

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2705. அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் “குபா”விற்குச் செல்வார்கள்.

Book : 15


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا»


Muslim-2704

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2704. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் “குபா”விற்குச் செல்வார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَأْتِي قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا»

– وحَدَّثَنِي أَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ زَيْدُ بْنُ يَزِيدَ الثّقَفِيُّ بَصْرِيٌّ ثِقَةٌ، حَدَّثَنَا خَالِدٌ يَعْنِي ابْنَ الْحَارِثِ، عَنِ ابْنِ عَجْلَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِمِثْلِ حَدِيثِ يَحْيَى الْقَطَّانِ


Muslim-2703

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2703. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் “குபா”ப் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் “அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள்” எனும் குறிப்பு அப்துல்லாஹ் பின் நுமைர் (ரஹ்) அவர்களிடமிருந்து அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது.

Book : 15


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْتِي مَسْجِدَ قُبَاءٍ رَاكِبًا وَمَاشِيًا، فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ»، قَالَ أَبُو بَكْرٍ فِي رِوَايَتِهِ: قَالَ ابْنُ نُمَيْرٍ: فَيُصَلِّي فِيهِ رَكْعَتَيْنِ


Muslim-2702

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 97

“குபா”ப் பள்ளிவாசலின் சிறப்பும் அதில் தொழுவது மற்றும் அதைத் தரிசிப்பதன் சிறப்பும்.

2702. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வாகனத்திலும் நடந்தும் “குபா”விற்குச் செல்வார்கள்.

Book : 15


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَزُورُ قُبَاءً رَاكِبًا وَمَاشِيًا»


Muslim-2701

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 96

“இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல்” என்பது, மதீனாவிலுள்ள “மஸ்ஜிதுந் நபவீ பள்ளிவாசல் ஆகும்.

2701. அபூசலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அப்துர் ரஹ்மான் பின் அபீ சயீத் அல்குத்ரீ (ரஹ்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களிடம் நான், “இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என 9:108ஆவது வசனத்தில் கூறப்பெற்றுள்ளது) குறித்து தங்கள் தந்தையிடமிருந்து நீங்கள் எவ்வாறு செவியுற்றீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அப்துர் ரஹ்மான் பின் சயீத் (ரஹ்) அவர்கள், “என் தந்தை (அபூ சயீத் அல்குத்ரீ – ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரில் ஒருவரது இல்லத்தில் இருந்தபோது அவர்களிடம் நான் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! (மஸ்ஜிதுந் நபவீ மற்றும் மஸ்ஜிதுல் குபா இவ்விரு பள்ளிவாசல்களில் இறையச்சத்தின் மீது நிறுவப்பெற்ற பள்ளிவாசல் (என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளது) எது?” என்று கேட்டேன்.

அப்போது அல்லாஹ்வின்

مَرَّ بِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قُلْتُ لَهُ: كَيْفَ سَمِعْتَ أَبَاكَ يَذْكُرُ فِي الْمَسْجِدِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى؟ قَالَ: قَالَ أَبِي: دَخَلْتُ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي بَيْتِ بَعْضِ نِسَائِهِ، فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ، أَيُّ الْمَسْجِدَيْنِ الَّذِي أُسِّسَ عَلَى التَّقْوَى؟ قَالَ: فَأَخَذَ كَفًّا مِنْ حَصْبَاءَ، فَضَرَبَ بِهِ الْأَرْضَ، ثُمَّ قَالَ: «هُوَ مَسْجِدُكُمْ هَذَا» لِمَسْجِدِ الْمَدِينَةِ، قَالَ: فَقُلْتُ: أَشْهَدُ أَنِّي سَمِعْتُ أَبَاكَ هَكَذَا يَذْكُرُهُ.

– وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَسَعِيدُ بْنُ عَمْرٍو الْأَشْعَثِيُّ، قَالَ سَعِيدٌ: أَخْبَرَنَا، وَقَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَاعِيلَ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ، وَلَمْ يَذْكُرْ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي سَعِيدٍ فِي الْإِسْنَادِ


Muslim-2700

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2700. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கஅபா (அமைந்துள்ள) பள்ளிவாசல், எனது (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (ஜெரூலத்திலுள்ள) ஈலியா (அல்அக்ஸா) பள்ளிவாசல் ஆகிய மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே (அதிக நன்மை நாடி) பயணம் மேற்கொள்ளப்ப(ட வேண்)டும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


إِنَّمَا يُسَافَرُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِ الْكَعْبَةِ، وَمَسْجِدِي، وَمَسْجِدِ إِيلِيَاءَ


Muslim-2699

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2699. மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஆயினும், அதில் “மூன்று பள்ளிவாசல்களுக்கு மட்டுமே பயணம் மேற்கொள்ளப்படும்” என (நேர்மறை வாசகத்துடன்) இடம்பெற்றுள்ளது.

Book : 15


«تُشَدُّ الرِّحَالُ إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ»


Muslim-2698

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 95

மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (புனிதப்) பயணம் மேற்கொள்ளப்படாது.

2698. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம், (ஜெரூசலத்திலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெதற்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


لَا تُشَدُّ الرِّحَالُ إِلَّا إِلَى ثَلَاثَةِ مَسَاجِدَ: مَسْجِدِي هَذَا، وَمَسْجِدِ الْحَرَامِ، وَمَسْجِدِ الْأَقْصَى


Muslim-2697

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2697. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண் கடுமையாக நோய்வாய்ப்பட்ட போது, “அல்லாஹ் எனக்கு நிவாரணமளித்தால் நிச்சயம் நான் புறப்பட்டுச் சென்று (ஜெரூசலத்திலுள்ள) “பைத்துல் மக்திஸ்” பள்ளிவாசலில் தொழுவேன்” என்று கூறினார். அவருக்கு உடல் நலம் ஏற்பட்டது. பின்னர் அவர் பயணம் செல்ல ஆயத்தமாகி நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களிடம் சென்று சலாம் சொன்னார்; அ(வர்களிடம் தமது பயணத்திற்கான காரணத்)தைத் தெரிவித்தார். அப்போது மைமூனா (ரலி) அவர்கள் “நீ அமர்ந்து, (பயணத்திற்காக) நீ தயார் செய்து வைத்தவற்றை (இங்கேயே) சாப்பிடு. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலுக்குச் சென்று தொழு. ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இ(ந்த மஸ்ஜிதுந் நபவீ ஆலயத்)தில் தொழுவதானது, மற்ற பள்ளிவாசல்களில் ஆயிரம் தொழுகைகள் தொழுவதைவிடச் சிறந்ததாகும்; கஅபா (அமைந்துள்ள “மஸ்ஜிதுல் ஹராம்”) பள்ளிவாசலைத் தவிர” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

إِنَّ امْرَأَةً اشْتَكَتْ شَكْوَى، فَقَالَتْ: إِنْ شَفَانِي اللهُ لَأَخْرُجَنَّ فَلَأُصَلِّيَنَّ فِي بَيْتِ الْمَقْدِسِ، فَبَرَأَتْ، ثُمَّ تَجَهَّزَتْ تُرِيدُ الْخُرُوجَ، فَجَاءَتْ مَيْمُونَةَ زَوْجَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ تُسَلِّمُ عَلَيْهَا، فَأَخْبَرَتْهَا ذَلِكَ، فَقَالَتْ: اجْلِسِي فَكُلِي مَا صَنَعْتِ، وَصَلِّي فِي مَسْجِدِ الرَّسُولِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «صَلَاةٌ فِيهِ أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ مِنَ الْمَسَاجِدِ، إِلَّا مَسْجِدَ الْكَعْبَةِ»