Category: முஸ்லிம்

Muslim-2565

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2565. துஐப் அபூகபீஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலி ஒட்டகங்களுடன் என்னை (மக்காவிற்கு) அனுப்பி வைத்தார்கள். அப்போது, “இவற்றில் ஏதேனும் ஒன்று பாதிப்புக்குள்ளாகி இறந்துவிடுமோ என நீர் அஞ்சினால், உடனே அதை அறுத்துவிடுவீராக! பிறகு அதன் (கழுத்தில் கிடக்கும்) செருப்பில் அதன் இரத்தத்தை நனைத்து, அதன் விலாப் புறத்தில் அ(ந்த அடையாளத்)தைப் பதித்துவிடுவீராக! நீரோ உன் பயணக் குழுவினரில் எவருமோ அதை உண்ணாதீர்” என்று கூறினார்கள்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَبْعَثُ مَعَهُ بِالْبُدْنِ ثُمَّ يَقُولُ: «إِنْ عَطِبَ مِنْهَا شَيْءٌ، فَخَشِيتَ عَلَيْهِ مَوْتًا فَانْحَرْهَا، ثُمَّ اغْمِسْ نَعْلَهَا فِي دَمِهَا، ثُمَّ اضْرِبْ بِهِ صَفْحَتَهَا، وَلَا تَطْعَمْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ»


Muslim-2564

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 66

செல்லும் வழியில் பலிப்பிராணி பாதிப்புக்குள்ளாகிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

2564. மூசா பின் சலமா அல்ஹுதலீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் சினான் பின் சலமா (ரஹ்) அவர்களும் உம்ராவிற்குச் சென்றோம். சினான் தம்முடன் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து)வந்தார். அந்த ஒட்டகம் வழியில் களைத்துப்போய் நின்றுவிட்டது. இது (இப்படியே) செல்ல இயலாமல் நின்றுவிட்டால், இதை எப்படி நான் கொண்டுசெல்வேன் என்று தெரியாமல் அவர் விழித்தார். மேலும், அவர் “நான் ஊர் சென்றதும் இதுதொடர்பாக விரிவாகக் கேட்டறிவேன்” என்று சொல்லிக்கொண்டார். இதற்கிடையில் முற்பகல் நேரம் ஆகிவிட்டது. நாங்கள் “அல்பத்ஹா” எனும் இடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது சினான் (ரஹ்) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் இதைப்பற்றி நாம் பேசுவோம்” என்று கூறினார்கள். அவ்வாறே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (சென்று) தமது பலி ஒட்டகத்தின் நிலை பற்றிக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: விவரம் தெரிந்தவரிடம்தான்

انْطَلَقْتُ أَنَا وَسِنَانُ بْنُ سَلَمَةَ، مُعْتَمِرَيْنِ قَالَ: وَانْطَلَقَ سِنَانٌ مَعَهُ بِبَدَنَةٍ يَسُوقُهَا، فَأَزْحَفَتْ عَلَيْهِ بِالطَّرِيقِ، فَعَيِيَ بِشَأْنِهَا إِنْ هِيَ أُبْدِعَتْ كَيْفَ، يَأْتِي بِهَا فَقَالَ: لَئِنْ قَدِمْتُ الْبَلَدَ لَأَسْتَحْفِيَنَّ عَنْ ذَلِكَ، قَالَ: فَأَضْحَيْتُ، فَلَمَّا نَزَلْنَا الْبَطْحَاءَ، قَالَ: انْطَلِقْ إِلَى ابْنِ عَبَّاسٍ نَتَحَدَّثْ إِلَيْهِ، قَالَ: فَذَكَرَ لَهُ شَأْنَ بَدَنَتِهِ فَقَالَ: عَلَى الْخَبِيرِ سَقَطْتَ بَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِسِتَّ عَشْرَةَ بَدَنَةً مَعَ رَجُلٍ وَأَمَّرَهُ فِيهَا، قَالَ: فَمَضَى ثُمَّ رَجَعَ، فَقَالَ: يَا رَسُولَ اللهِ، كَيْفَ أَصْنَعُ بِمَا أُبْدِعَ عَلَيَّ مِنْهَا، قَالَ: «انْحَرْهَا، ثُمَّ اصْبُغْ نَعْلَيْهَا فِي دَمِهَا، ثُمَّ اجْعَلْهُ عَلَى صَفْحَتِهَا، وَلَا تَأْكُلْ مِنْهَا أَنْتَ وَلَا أَحَدٌ مِنْ أَهْلِ رُفْقَتِكَ»

– وحَدَّثَنَاه يَحْيَى بْنُ يَحْيَى، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا، وَقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ أَبِي التَّيَّاحِ، عَنْ مُوسَى بْنِ سَلَمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِثَمَانَ عَشْرَةَ بَدَنَةً مَعَ رَجُلٍ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ عَبْدِ الْوَارِثِ وَلَمْ يَذْكُرْ أَوَّلَ الْحَدِيثِ


Muslim-2563

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2563. அபுஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச் செல்வதைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் “பயண வாகனம் கிடைக்கும்வரை அதில் முறையோடு ஏறிச் செல்க” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

இதை மஅகில் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


سَأَلْتُ جَابِرًا، عَنْ رُكُوبِ الْهَدْيِ، فَقَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «ارْكَبْهَا بِالْمَعْرُوفِ، حَتَّى تَجِدَ ظَهْرًا»


Muslim-2562

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2562. அபுஸ்ஸுபைர் முஹம்மத் பின் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்களிடம் பலிப்பிராணியில் ஏறிச்செல்வதைப் பற்றிக் கேட்கப்பட்டது. அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் “நீங்கள் அதில் ஏறிச்செல்ல வேண்டிய நிலைக்குக் கட்டாயப்படுத்தப்பட்டால் பயண வாகனம் கிடைக்கும்வரை முறையோடு அதில் ஏறிச்செல்க” என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

இதை இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ، سُئِلَ عَنْ رُكُوبِ الْهَدْيِ، فَقَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «ارْكَبْهَا بِالْمَعْرُوفِ، إِذَا أُلْجِئْتَ إِلَيْهَا حَتَّى تَجِدَ ظَهْرًا»


Muslim-2561

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2561. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களைக் கடந்து “ஒரு பலி ஒட்டகம்” அல்லது “ஒரு பலிப்பிராணி” கொண்டு செல்லப்பட்டது. அப்போது (அதை இழுத்துக்கொண்டு நடந்து சென்றுகொண்டிருந்த மனிதரிடம்) நபி (ஸல்) அவர்கள், “அதில் ஏறிச்செல்க” என்றார்கள். அவர், “இது “பலி ஒட்டகம்” அல்லது “பலிப்பிராணி” ஆயிற்றே?” என்றார். நபி (ஸல்) அவர்கள், “இருக்கட்டும் (அதில் ஏறிச் செல்க)”என்றார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அனஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நபி (ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பலி ஒட்டகம் கொண்டுசெல்லப்பட்டது” என்று (ஐயப்பாடின்றி) ஹதீஸ் ஆரம்பிக்கிறது.

Book : 15


مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَدَنَةٍ أَوْ هَدِيَّةٍ، فَقَالَ: «ارْكَبْهَا» قَالَ: إِنَّهَا بَدَنَةٌ أَوْ هَدِيَّةٌ، فَقَالَ: «وَإِنْ»

– وحَدَّثَنَاه أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ بِشْرٍ، عَنْ مِسْعَرٍ، حَدَّثَنِي بُكَيْرُ بْنُ الْأَخْنَسِ، قَالَ: سَمِعْتُ أَنَسًا، يَقُولُ: مُرَّ عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَدَنَةٍ فَذَكَرَ مِثْلَهُ


Muslim-2560

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2560. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பலி ஒட்டகமொன்றை இழுத்துக்கொண்டு (நடந்து) சென்றுகொண்டிருந்த ஒரு மனிதரைக் கடந்து சென்றார்கள். அவரிடம், “அதில் ஏறிச் செல்க” என்றார்கள். அதற்கு அவர், “இது பலி ஒட்டகமாயிற்றே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அதில் ஏறிச் செல்க” என இரண்டு, அல்லது மூன்று முறை கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


مَرَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِرَجُلٍ يَسُوقُ بَدَنَةً فَقَالَ: «ارْكَبْهَا» فَقَالَ: إِنَّهَا بَدَنَةٌ، قَالَ: «ارْكَبْهَا» مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا


Muslim-2559

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2559. ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இவை அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்கள் எமக்கு அறிவித்த ஹதீஸ்களாகும். அவற்றில் பின்வரும் ஹதீஸும் ஒன்றாகும்:

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்க விடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) சென்றுகொண்டிருந்தார். அப்போது அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான், அதில் ஏறிச் செல்க” என்றார்கள். அதற்கு அவர், “(இது) பலி ஒட்டகமாயிற்றே, அல்லாஹ்வின் தூதரே?” என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உமக்குக் கேடுதான், அதில் ஏறிச்செல்க. உமக்குக் கேடுதான், அதில் ஏறிச்செல்க” என்று (மீண்டும் மீண்டும்) கூறினார்கள்.

Book : 15


بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ بَدَنَةً مُقَلَّدَةً قَالَ لَهُ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَيْلَكَ، ارْكَبْهَا» فَقَالَ: بَدَنَةٌ يَا رَسُولَ اللهِ، قَالَ: «وَيْلَكَ، ارْكَبْهَا، وَيْلَكَ، ارْكَبْهَا»


Muslim-2558

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 65

தேவைப்பட்டால், பலியிடுவதற்காகக் கொண்டுசெல்லப்படும் ஒட்டகத்தில் ஏறிப் பயணம் செய்யலாம்.

2558. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக் கொண்டு (நடந்து) செல்வதைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவரிடம்), “அதில் ஏறிச் செல்க” என்றார்கள். அவர் “அல்லாஹ்வின் தூதரே! இது, பலி ஒட்டகமாயிற்றே!” என்றார். அதற்கு “அதில் ஏறிச்செல்க” என்று கூறிய அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இரண்டாவது அல்லது மூன்றாவது தடவை “உனக்குக் கேடுதான்” என்று (செல்லமாகக் கண்டித்துச்) சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “ஒருவர், கழுத்தில் அடையாள மாலை தொங்கவிடப்பட்ட ஒரு பலி ஒட்டகத்தை இழுத்துக்கொண்டு (நடந்து) சென்றபோது…” என்று ஹதீஸ் தொடங்குகிறது.

Book : 15


أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا يَسُوقُ بَدَنَةً، فَقَالَ: «ارْكَبْهَا»، قَالَ: يَا رَسُولَ اللهِ، إِنَّهَا بَدَنَةٌ، فَقَالَ: «ارْكَبْهَا، وَيْلَكَ» فِي الثَّانِيَةِ أَوْ فِي الثَّالِثَةِ وحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا الْمُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْحِزَامِيُّ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الْأَعْرَجِ، بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: بَيْنَمَا رَجُلٌ يَسُوقُ بَدَنَةً مُقَلَّدَةً


Muslim-2557

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2557. மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பலிப் பிராணியை அனுப்பிவைத்தவரும் “இஹ்ராம்” கட்டியவரைப் போன்றே நடந்துகொள்ள வேண்டுமா என்று நான் கேட்டதற்கு) ஆயிஷா (ரலி) அவர்கள் (ஆச்சரியப்பட்டு) திரைக்குப் பின்னாலிருந்து கை தட்டுவதை நான் செவியுற்றேன். (தொடர்ந்து) அவர்கள், “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப்பிராணிகளின் அடையாள மாலைகளைத் திரி(த்துத் தயாரி)ப்பேன். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பலிப்பிராணிகளை (ஹஜ் காலத்தில் மக்காவிற்கு) அனுப்புவார்கள். “இஹ்ராம்”கட்டியவர் தடுத்துக்கொள்ளக் கூடிய எதையும் – தமது பலிப்பிராணி பலியிடப்படும்வரை – அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமக்காகத்) தடுத்துக்கொள்ளவில்லை” என்று கூறினார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15


سَمِعْتُ عَائِشَةَ، وَهِيَ مِنْ وَرَاءِ الْحِجَابِ تُصَفِّقُ، وَتَقُولُ: «كُنْتُ أَفْتِلُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ يَبْعَثُ بِهَا وَمَا يُمْسِكُ عَنْ شَيْءٍ، مِمَّا يُمْسِكُ عَنْهُ الْمُحْرِمُ، حَتَّى يُنْحَرَ هَدْيُهُ»

– وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ، حَدَّثَنَا دَاوُدُ، ح وحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، كِلَاهُمَا عَنِ الشَّعْبِيِّ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ بِمِثْلِهِ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ


Muslim-2556

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2556. அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு ஸியாத் (ஸியாத் பின் அபீசுஃப் யான்) அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, “(மக்காவிற்கு) பலிப்பிராணியை அனுப்பி வைக்கின்றவருக்கும் அப்பிராணி அறுக்கப்படும்வரை,ஹாஜிகளுக்குத் தடை செய்யப்பட்டுள்ள அனைத்தும் தடை செய்யப்படும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்களே? நானும் எனது பலிப்பிராணியை (மக்காவிற்கு) அனுப்பியுள்ளேன். எனவே, உங்களது தீர்ப்பை எனக்கு எழுதுங்கள்” என்று கேட்டார்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதைப் போன்றல்ல. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பலிப் பிராணியின் அடையாள மாலைகளை, என் கைகளாலேயே திரித்(துத் தயாரித்)தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது கையால் அந்த மாலையைப் பலிப்பிராணியின் கழுத்தில் தொங்கவிட்டார்கள். பிறகு (அந்தப்) பிராணியை என் தந்தை (அபூபக்ர்-ரலி) உடன் அனுப்பிவைத்தார்கள். (மக்காவில்) பலிப் பிராணி பலியிடப்படும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அனுமதித்திருந்த எதுவும் தடை செய்யப்படவில்லை”

أَنَّ ابْنَ زِيَادٍ كَتَبَ إِلَى عَائِشَةَ، أَنَّ عَبْدَ اللهِ بْنَ عَبَّاسٍ، قَالَ: مَنْ أَهْدَى هَدْيًا حَرُمَ عَلَيْهِ مَا يَحْرُمُ عَلَى الْحَاجِّ، حَتَّى يُنْحَرَ الْهَدْيُ، وَقَدْ بَعَثْتُ بِهَدْيِي، فَاكْتُبِي إِلَيَّ بِأَمْرِكِ، قَالَتْ عَمْرَةُ: قَالَتْ عَائِشَةُ لَيْسَ كَمَا قَالَ ابْنُ عَبَّاسٍ: «أَنَا فَتَلْتُ قَلَائِدَ هَدْيِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدَيَّ، ثُمَّ قَلَّدَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، ثُمَّ بَعَثَ بِهَا مَعَ أَبِي، فَلَمْ يَحْرُمْ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْءٌ أَحَلَّهُ اللهُ لَهُ، حَتَّى نُحِرَ الْهَدْيُ»


Next Page » « Previous Page