Category: முஸ்லிம்

Muslim-2485

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2485. சாலிம் பின் ஷவ்வால் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (நபி (ஸல்) அவர்களின் துணைவியார்) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் என்னை முஸ்தலிஃபாவிலிருந்து (மினாவிற்கு) இரவி(ன் இருளி)லேயே அனுப்பிவைத்தார்கள்” என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


أَنَّهُ دَخَلَ عَلَى أُمِّ حَبِيبَةَ فَأَخْبَرَتْهُ: «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ بِهَا مِنْ جَمْعٍ بِلَيْلٍ»


Muslim-2484

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2484. அஸ்மா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துல்லாஹ் பின் கைசான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபா இல்லத்தின் அருகே இருந்தபோது, என்னிடம் “சந்திரன் மறைந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். நான் “இல்லை” என்றேன். அவர்கள் சிறிது நேரம் தொழுதுவிட்டுப் பிறகு “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?”என்று (மீண்டும்) கேட்டார்கள். நான் “ஆம் (மறைந்துவிட்டது)” என்றேன். “என்னுடன் (மினாவுக்குப்) புறப்படு” என்று கூறினார்கள். அவ்வாறே நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். (மினா வந்ததும்) அவர்கள் “ஜம்ரா”வில் கல்லெறிந்துவிட்டுப் பின்னர் (திரும்பிவந்து) தமது கூடாரத்தில் தொழுதார்கள். அப்போது அவர்களிடம் நான், “அம்மா! நாம் விடிவதற்கு முன்பே (மினாவுக்கு) வந்து விட்டோம்” என்றேன். அவர்கள், “(இதில் தவறேதும்) இல்லை, மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு (விடியலுக்கு முன்பே மினாவிற்கு வர) அனுமதியளித்துள்ளார்கள்” என்று சொன்னார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில்

قَالَتْ لِي أَسْمَاءُ: وَهِيَ عِنْدَ دَارِ الْمُزْدَلِفَةِ هَلْ غَابَ الْقَمَرُ؟ قُلْتُ: لَا، فَصَلَّتْ سَاعَةً، ثُمَّ قَالَتْ: يَا بُنَيَّ هَلْ غَابَ الْقَمَرُ؟ قُلْتُ: نَعَمْ، قَالَتْ: ارْحَلْ بِي، فَارْتَحَلْنَا حَتَّى رَمَتِ الْجَمْرَةَ، ثُمَّ صَلَّتْ فِي مَنْزِلِهَا، فَقُلْتُ لَهَا: أَيْ هَنْتَاهْ لَقَدْ غَلَّسْنَا، قَالَتْ: كَلَّا، أَيْ بُنَيَّ، «إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِلظُّعُنِ»

– وحَدَّثَنِيهِ عَلِيُّ بْنُ خَشْرَمٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، بِهَذَا الْإِسْنَادِ، وَفِي رِوَايَتِهِ قَالَتْ: لَا، أَيْ بُنَيَّ، إِنَّ نَبِيَّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذِنَ لِظُعُنِهِ


Muslim-2482

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2482. காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று, நானும் அவர்களிடம் அனுமதி பெற்றுச் சென்று, மினாவில் சுப்ஹுத் தொழுது விட்டு, மக்கள் வருவதற்கு முன்பே “ஜம்ரா”வில் கல்லெறிந்திருந்தால் நன்றாயிருந்திருக்கும் என நான் விரும்பினேன்” என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஆயிஷா (ரலி) அவர்களிடம், “சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தாரா?” என்று கேட்கப்பட்டது. அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஆம். அவர் கனத்த உடலுடைய பெண்ணாக இருந்ததால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்” என்று விடையளித்தார்கள்.

Book : 15


وَدِدْتُ أَنِّي كُنْتُ اسْتَأْذَنْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ، فَأُصَلِّي الصُّبْحَ بِمِنًى، فَأَرْمِي الْجَمْرَةَ، قَبْلَ أَنْ يَأْتِيَ النَّاسُ، فَقِيلَ لِعَائِشَةَ: فَكَانَتْ سَوْدَةُ اسْتَأْذَنَتْهُ؟ قَالَتْ: نَعَمْ، إِنَّهَا كَانَتِ امْرَأَةً ثَقِيلَةً ثَبِطَةً، فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَذِنَ لَهَا


Muslim-2481

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2481. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

சவ்தா (ரலி) அவர்கள் கனத்த உடலுடைய மெதுவாக நடக்கும் பெண்ணாக இருந்தார். எனவே, அவர் முஸ்தலிஃபாவிலிருந்து இரவிலேயே புறப்பட்டுச் செல்ல அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதிகேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதியளித்தார்கள்.

சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி பெற்றதைப் போன்று நானும் அவர்களிடம் அனுமதி பெற்றிருந்தால் நன்றாயிருந்திருக்கும்!

இதன் அறிவிப்பாளரான காசிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆயிஷா (ரலி) அவர்கள் இமாமுடனேயே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப்) புறப்பட்டுச் செல்வார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


«كَانَتْ سَوْدَةُ امْرَأَةً ضَخْمَةً ثَبِطَةً، فَاسْتَأْذَنَتْ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تُفِيضَ مِنْ جَمْعٍ بِلَيْلٍ، فَأَذِنَ لَهَا» فَقَالَتْ عَائِشَةُ: «فَلَيْتَنِي كُنْتُ اسْتَأْذَنْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ» وَكَانَتْ عَائِشَةُ «لَا تُفِيضُ إِلَّا مَعَ الْإِمَامِ»


Muslim-2480

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 49

பெண்கள் (முதியோர், நோயாளிகள்) உள்ளிட்ட பலவீனர்களை, கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கு முன்பே இரவின் இறுதியில் முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குப் புறப்படச் செய்வது விரும்பத்தக்கதாகும்; மற்றவர்கள் சுப்ஹுத் தொழுகையை நிறைவேற்றும்வரை முஸ்தலிஃபாவிலேயே தங்கியிருப்பது விரும்பத்தக்கதாகும்.

2480. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் கூட்ட நெரிசல் ஏற்படுவதற்கும் முன்பே (முஸ்தலிஃபாவிலிருந்து மினாவிற்குத்) தாம் புறப்பட்டுச் செல்ல சவ்தா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முஸ்தலிஃபா இரவில் அனுமதி கேட்டார்கள்- (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார்) சவ்தா கனத்த உடலுடையவராக (மெதுவாக நடப்பவராக) இருந்தார்கள்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சவ்தா (ரலி) அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்படுவதற்கு முன்பே புறப்பட்டுச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை சுப்ஹுவரை அங்கேயே தங்கியிருக்கச் செய்தார்கள். பிறகு

اسْتَأْذَنَتْ سَوْدَةُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ الْمُزْدَلِفَةِ، تَدْفَعُ قَبْلَهُ، وَقَبْلَ حَطْمَةِ النَّاسِ، وَكَانَتِ امْرَأَةً ثَبِطَةً – يَقُولُ الْقَاسِمُ: وَالثَّبِطَةُ الثَّقِيلَةُ – قَالَ: فَأَذِنَ لَهَا، فَخَرَجَتْ قَبْلَ دَفْعِهِ، وَحَبَسَنَا حَتَّى أَصْبَحْنَا فَدَفَعْنَا بِدَفْعِهِ ” وَلَأَنْ أَكُونَ اسْتَأْذَنْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، كَمَا اسْتَأْذَنَتْهُ سَوْدَةُ، فَأَكُونَ أَدْفَعُ بِإِذْنِهِ، أَحَبُّ إِلَيَّ مِنْ مَفْرُوحٍ بِهِ


Muslim-2479

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 48

(ஹாஜிகள்) துல்ஹஜ் பத்தாம் நாளில் முஸ்தலிஃபாவில் சுப்ஹுத் தொழுகையை (அதன் ஆரம்ப நேரத்தில்) அதிக இருட்டிலேயே தொழுவது விரும்பத் தக்கதாகும்; சுப்ஹு நேரம் வந்துவிட்டது என்பதை உறுதி செய்து கொண்ட பின்னரே அவ்வாறு ஆரம்ப நேரத்தில் தொழ வேண்டும்.

2479. அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணத்தில்) எந்தத் தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் தொழாமல் வேறு நேரத்தில் தொழுததை நான் பார்த்ததில்லை; இரண்டு தொழுகைகளைத் தவிர. ஒன்று: முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதது. மற்றொன்று: அன்றைய (மறு)நாள் ஃபஜ்ர் தொழுகையை அதற்குரிய (வழக்கமான) நேரத்திற்கு முன்னரே (முஸ்தலிஃபாவில்) தொழுதது.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “ஃபஜ்ர்

مَا رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى صَلَاةً إِلَّا لِمِيقَاتِهَا، إِلَّا صَلَاتَيْنِ: صَلَاةَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ، وَصَلَّى الْفَجْرَ يَوْمَئِذٍ قَبْلَ مِيقَاتِهَا

– وحَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، جَمِيعًا عَنْ جَرِيرٍ، عَنِ الْأَعْمَشِ بِهَذَا الْإِسْنَادِ، وَقَالَ: قَبْلَ وَقْتِهَا بِغَلَسٍ


Muslim-2478

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2478. ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுடன் (அரஃபாவிலிருந்து) திரும்பி முஸ்தலிஃபாவிற்கு வந்து சேர்ந்தபோது, அவர்கள் ஒரேயோர் இகாமத்தில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுவித்துவிட்டுத் திரும்பினார்கள். பிறகு, “இவ்வாறே இந்த இடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுவித்தார்கள்” என்றும் கூறினார்கள்.

அத்தியாயம்: 15


أَفَضْنَا مَعَ ابْنِ عُمَرَ حَتَّى أَتَيْنَا جَمْعًا، فَصَلَّى بِنَا الْمَغْرِبَ وَالْعِشَاءَ بِإِقَامَةٍ وَاحِدَةٍ، ثُمَّ انْصَرَفَ، فَقَالَ: هَكَذَا صَلَّى بِنَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي هَذَا الْمَكَانِ


Muslim-2477

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2477. இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவில் மஃக்ரிபையும் இஷாவையும் (சேர்த்துத்) தொழுதார்கள். ஒரேயோர் இகாமத்தில் மூன்று ரக்அத்கள் மஃக்ரிபையும் இரண்டு ரக்அத்கள் இஷாவையும் தொழுதார்கள்.

Book : 15


«جَمَعَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ الْمَغْرِبِ وَالْعِشَاءِ بِجَمْعٍ، صَلَّى الْمَغْرِبَ ثَلَاثًا وَالْعِشَاءَ رَكْعَتَيْنِ بِإِقَامَةٍ وَاحِدَةٍ»


Muslim-2476

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

2476. மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “மஃக்ரிபையும் இஷாவையும் ஒரேயோர் இகாமத்தில் (சேர்த்துத்) தொழுதார்கள்” என இடம்பெற்றுள்ளது.

Book : 15



Next Page » « Previous Page