Category: முஸ்லிம்

Muslim-2455

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2455. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (“விடைபெறும்” ஹஜ் பயணத்தின் போது) அவர்களது வாகனத்தில் அமர்ந்திருந்தவரான ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “அரஃபா நாள்” மாலையிலும் “முஸ்தலிஃபா நாள்” காலையிலும் திரும்பிக்கொண்டிருந்த மக்களிடம், “மெதுவாகச் செல்லுங்கள்” என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு, மினாவிலுள்ள “முஹஸ்ஸிர்” ஓடைக்குள் நுழைந்ததும், “ஜம்ராவில் எறிவதற்காக, சுண்டி எறியப்படும் சிறு கற்களை எடுத்துக்கொள்ளுங்கள்” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “ஜம்ரத்துல் அகபா”வில் கல்லெறியும் வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக் கொண்டேயிருந்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

فِي عَشِيَّةِ عَرَفَةَ وَغَدَاةِ جَمْعٍ لِلنَّاسِ حِينَ دَفَعُوا «عَلَيْكُمْ بِالسَّكِينَةِ» وَهُوَ كَافٌّ نَاقَتَهُ، حَتَّى دَخَلَ مُحَسِّرًا – وَهُوَ مِنْ مِنًى – قَالَ: «عَلَيْكُمْ بِحَصَى الْخَذْفِ الَّذِي يُرْمَى بِهِ الْجَمْرَةُ» وَقَالَ: «لَمْ يَزَلْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي، حَتَّى رَمَى الْجَمْرَةَ»

– وحَدَّثَنِيهِ زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ لَمْ يَذْكُرْ فِي الْحَدِيثِ وَلَمْ يَزَلْ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُلَبِّي حَتَّى رَمَى الْجَمْرَةَ وَزَادَ فِي حَدِيثِهِ، وَالنَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُشِيرُ بِيَدِهِ كَمَا يَخْذِفُ الْإِنْسَانُ


Muslim-2454

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2454. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (“விடைபெறும்” ஹஜ்ஜில்) முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும்போது, தமது வாகனத்தில் தமக்குப் பின்னால் (என் சகோதரர்) ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களை ஏற்றிக்கொண்டார்கள். ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (துல்ஹஜ் பத்தாவது நாளில்) “ஜம்ரத்துல் அகபா”வில் கல்லெறியும்வரை தல்பியாச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்” என என்னிடம் தெரிவித்தார்கள். – இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْدَفَ الْفَضْلَ مِنْ جَمْعٍ، قَالَ: فَأَخْبَرَنِي ابْنُ عَبَّاسٍ أَنَّ الْفَضْلَ أَخْبَرَهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي، حَتَّى رَمَى جَمْرَةَ الْعَقَبَةِ»


Muslim-2453

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 45

ஹஜ் செய்பவர் துல்ஹஜ் பத்தாவது நாளன்று “ஜம்ரத்துல் அகபா”வில் கல்லெறியத் துவங்கும்வரை தொடர்ந்து தல்பியாச் சொல்லிக்கொண்டிருப்பது விரும்பத் தக்கதாகும்.

2453. உசாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(“விடைபெறும்” ஹஜ்ஜின்போது) அரஃபாவிலிருந்து திரும்புகையில் நான் வாகனத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் இருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்தலிஃபாவுக்கு அருகிலுள்ள இடப்புறப் பள்ளத்தாக்கை அடைந்ததும் ஒட்டகத்தை மண்டியிடவைத்துவிட்டுச் சென்று, சிறுநீர் கழித்துவிட்டுத் திரும்பிவந்தார்கள். நான் அவர்களுக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்யத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் சுருக்கமாக அங்கத் தூய்மை செய்தார்கள். நான், “தொழப்போகிறீர்களா, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “தொழுகை உனக்கு முன்னால் (உள்ள முஸ்தலிஃபாவில்)தான்” எனக் கூறி விட்டு, வாகனத்தில் ஏறி முஸ்தலிஃபா வந்ததும் தொழுதார்கள்.

பின்னர் முஸ்தலிஃபாவிலிருந்து புறப்படும் அதிகாலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வாகனத்தில் அவர்களுக்குப் பின்னால் ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் இருந்தார்கள்.

இந்த

«رَدِفْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ عَرَفَاتٍ، فَلَمَّا بَلَغَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الشِّعْبَ الْأَيْسَرَ، الَّذِي دُونَ الْمُزْدَلِفَةِ أَنَاخَ فَبَالَ، ثُمَّ جَاءَ فَصَبَبْتُ عَلَيْهِ الْوَضُوءَ، فَتَوَضَّأَ وُضُوءًا خَفِيفًا»، ثُمَّ قُلْتُ: الصَّلَاةَ يَا رَسُولَ اللهِ، فَقَالَ: «الصَّلَاةُ أَمَامَكَ فَرَكِبَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَتَّى أَتَى الْمُزْدَلِفَةَ، فَصَلَّى، ثُمَّ رَدِفَ الْفَضْلُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَدَاةَ جَمْعٍ»

– قَالَ كُرَيْبٌ: فَأَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عَبَّاسٍ، عَنِ الْفَضْلِ، «أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَزَلْ يُلَبِّي حَتَّى بَلَغَ الْجَمْرَةَ»


Muslim-2452

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் : 44

ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடுவது (சயீ) ஒரே தடவைதான் என்பது பற்றிய விளக்கம்.

2452. ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஹஜ் மற்றும் உம்ராவின்போது) நபி (ஸல்) அவர்களும் நபித்தோழர்களும் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஒரேயொரு தடவை தவிர (கூடுதலாகச்) சுற்றிவரவில்லை.

– மேற்கண்ட ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “ஆரம்பத்தில் சுற்றிவந்த ஒரேயொரு தடவை தவிர” என்று இடம்பெற்றுள்ளது.

Book : 15


«لَمْ يَطُفِ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَصْحَابُهُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ إِلَّا طَوَافًا وَاحِدًا»

– وحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ، وَقَالَ: إِلَّا طَوَافًا وَاحِدًا، طَوَافَهُ الْأَوَّلَ


Muslim-2451

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2451. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகள் (ஆரம்பக் காலத்தில்) ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை வெறுப்பவர்களாய் இருந்தனர்; “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று” (2:158) எனும் வசனம் அருளப்படும்வரை.

Book : 15


كَانَتِ الْأَنْصَارُ يَكْرَهُونَ أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، حَتَّى نَزَلَتْ: {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللهِ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا


Muslim-2450

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2450. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளும் “ஃகஸ்ஸான்” குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன் “மனாத்” எனும் சிலைக்காக “இஹ்ராம்” கட்டி “தல்பியா” கூறுபவர்களாய் இருந்தனர். எனவே, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை அவர்கள் பாவமாகக் கருதினர். (ஆனால்,) அதுவே அவர்களின் மூதாதையரிடையே நிலவிவந்த மரபாக இருந்தது. அன்சாரிகள் இஸ்லாத்தைத் தழுவியபோது,அதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவினர். இதுதொடர்பாகவே அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமன்று. யார் கூடுதலாக நன்மை செய்கிறாரோ (அவருக்கு) அல்லாஹ் நன்றி பாராட்டக்கூடியவனும் நன்கறிந்தவனும் ஆவான்” (2:158) எனும் வசனத்தை அருளினான்.

Book : 15


أَنَّ الْأَنْصَارَ، كَانُوا قَبْلَ أَنْ يُسْلِمُوا هُمْ وَغَسَّانُ، يُهِلُّونَ لِمَنَاةَ فَتَحَرَّجُوا أَنْ يَطُوفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَكَانَ ذَلِكَ سُنَّةً فِي آبَائِهِمْ مَنْ أَحْرَمَ لِمَنَاةَ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَإِنَّهُمْ سَأَلُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ حِينَ أَسْلَمُوا، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ فِي ذَلِكَ: {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللهِ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا، وَمَنْ تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللهَ شَاكِرٌ عَلِيمٌ


Muslim-2449

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2449. மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில், “நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டேன்” என்று தொடங்கி, மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளது. மேலும் அதில், பின்வருமாறும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்று காணப்படுகிறது:

அன்சாரிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதைப் பாவமாகக் கருதிவந்தோம்” என்று கூறினர். அப்போது வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று” (2:158) எனும் வசனத்தை அருளினான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவ்விரண்டுக்கும் இடையே சுற்றிவருவதை (தமது) வழிமுறையாக்கினார்கள். எனவே, அவ்விரண்டுக்குமிடையே சுற்றுவதைக் கைவிட எவருக்கும் (உரிமை) இல்லை.

Book : 15


سَأَلْتُ عَائِشَةَ، وَسَاقَ الْحَدِيثَ بِنَحْوِهِ، وَقَالَ فِي الْحَدِيثِ: فَلَمَّا سَأَلُوا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ فَقَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا نَتَحَرَّجُ أَنْ نَطُوفَ بِالصَّفَا وَالْمَرْوَةِ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا} [البقرة: 158] قَالَتْ عَائِشَةُ: قَدْ سَنَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الطَّوَافَ بَيْنَهُمَا، فَلَيْسَ لِأَحَدٍ أَنْ يَتْرُكَ الطَّوَافَ بِهِمَا


Muslim-2448

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2448. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத எவர்மீதும் (குற்றம்) ஏதுமிருப்பதாக நான் கருதவில்லை. (எனவே) அவ்விரண்டுக்குமிடையே நான் சுற்றி வராமலிருப்பதை நான் ஒரு பொருட்டாகவே எண்ண மாட்டேன்” என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “என் சகோதரி (அஸ்மாவின்) மகனே! நீ சொல்வது தவறு. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் (ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே) சுற்றிவந்தனர். எனவே, அது ஒரு நபிவழியாக ஆகிவிட்டது. “முஷல்லல்” எனும் இடத்திலிருந்த சிலைகளுக்காக “இஹ்ராம்” கட்டியவர்களே ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றி வராமலிருந்தனர். இஸ்லாம் வந்தபோது, அதைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் வினவினோம். அப்போதுதான் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ், “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமில்லை” எனும் (2:158ஆவது) வசனத்தை அருளினான். (இவ்வசனத்தில்) “அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை”

قُلْتُ لِعَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا أَرَى عَلَى أَحَدٍ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ شَيْئًا، وَمَا أُبَالِي أَنْ لَا أَطُوفَ بَيْنَهُمَا، قَالَتْ: ” بِئْسَ مَا قُلْتَ، يَا ابْنَ أُخْتِي، طَافَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَطَافَ الْمُسْلِمُونَ، فَكَانَتْ سُنَّةً وَإِنَّمَا كَانَ مَنْ أَهَلَّ لِمَنَاةَ الطَّاغِيَةِ الَّتِي بِالْمُشَلَّلِ، لَا يَطُوفُونَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا كَانَ الْإِسْلَامُ سَأَلْنَا النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ ذَلِكَ؟ فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ} [البقرة: 158] اللهِ، فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ يَطَّوَّفَ بِهِمَا، وَلَوْ كَانَتْ كَمَا تَقُولُ، لَكَانَتْ: فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا ” قَالَ الزُّهْرِيُّ: فَذَكَرْتُ ذَلِكَ لِأَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، فَأَعْجَبَهُ ذَلِكَ، وَقَالَ: ” إِنَّ هَذَا الْعِلْمُ، وَلَقَدْ سَمِعْتُ رِجَالًا مِنْ أَهْلِ الْعِلْمِ يَقُولُونَ: إِنَّمَا كَانَ مَنْ لَا يَطُوفُ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ مِنَ الْعَرَبِ، يَقُولُونَ: إِنَّ طَوَافَنَا بَيْنَ هَذَيْنِ الْحَجَرَيْنِ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ، وقَالَ آخَرُونَ مِنَ الْأَنْصَار: إِنَّمَا أُمِرْنَا بِالطَّوَافِ بِالْبَيْتِ وَلَمْ نُؤْمَرْ بِهِ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ: إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ. قَالَ أَبُو بَكْرِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ: فَأُرَاهَا قَدْ نَزَلَتْ فِي هَؤُلَاءِ وَهَؤُلَاءِ


Muslim-2447

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2447. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “நான் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராமலிருப்பதில் என்மீது குற்றமேதுமில்லை என்று கருதுகிறேன்” என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “ஏன் (எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்)?” என்று கேட்டார்கள். நான், “ஏனெனில் அல்லாஹ் “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று” (2:158) என்று கூறுகின்றான்” என்றேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: “அவ்விரண்டையும் சுற்றாமலிருப்பது குற்றமில்லை” என்றிருந்தால் நீ கூறும் கருத்து வரும். அன்சாரிகள் சிலர் தொடர்பாகவே இந்த வசனம் அருளப்பெற்றது. அவர்கள் அறியாமைக் காலத்தில் “இஹ்ராம்” கட்டினால் (மதீனாவிற்கு அருகில் “முஷல்லல்”எனும் குன்றிலிருந்த) “மனாத்” எனும் சிலைக்காக “இஹ்ராம்” கட்டுபவர்களாய் இருந்தனர். எனவே, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவருவதை அவர்கள் அனுமதிக்கப்பட்டதாகக் கருதவில்லை.

நபி (ஸல்) அவர்களுடன் அவர்கள் ஹஜ்ஜுக்காக வந்தபோது

قُلْتُ لِعَائِشَةَ: مَا أَرَى عَلَيَّ جُنَاحًا أَنْ لَا أَتَطَوَّفَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، قَالَتْ: «لِمَ؟» قُلْتُ: لِأَنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَقُولُ: {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ} [البقرة: 158] الْآيَةَ، فَقَالَتْ: ” لَوْ كَانَ كَمَا تَقُولُ، لَكَانَ: فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا، إِنَّمَا أُنْزِلَ هَذَا فِي أُنَاسٍ مِنَ الْأَنْصَار كَانُوا إِذَا أَهَلُّوا، أَهَلُّوا لِمَنَاةَ فِي الْجَاهِلِيَّةِ، فَلَا يَحِلُّ لَهُمْ أَنْ يَطَّوَّفُوا بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، فَلَمَّا قَدِمُوا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِلْحَجِّ، ذَكَرُوا ذَلِكَ لَهُ، فَأَنْزَلَ اللهُ تَعَالَى هَذِهِ الْآيَةَ، فَلَعَمْرِي، مَا أَتَمَّ اللهُ حَجَّ مَنْ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ


Muslim-2446

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம் :

43 ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடுவது (“சயீ” செய்வது) முக்கியக் கடமையாகும்; அதைச் செய்யாமல் ஹஜ் நிறைவேறாது.

2446. உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ஒருவர் ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராவிட்டாலும் அவர்மீது குற்றமில்லை என்று நான் கருதுகிறேன்” என்றேன். ஆயிஷா (ரலி) அவர்கள், “ஏன் (எதை வைத்து அப்படிச் சொல்கிறாய்)?” என்று கேட்டார்கள். நான், “ஏனெனில், அல்லாஹ் “ஸஃபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களில் உள்ளவை ஆகும். எனவே, யார் அந்த (கஅபா) ஆலயத்தில் ஹஜ்ஜோ உம்ராவோ செய்கிறாரோ, அவர்மீது அவ்விரண்டையும் சுற்றிவருவது குற்றமன்று” (2:158) என்று கூறுகின்றான்” என்றேன்.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே சுற்றிவராத மனிதரின் ஹஜ்ஜையோ உம்ராவையோ அல்லாஹ் முழுமையாக்கமாட்டான். அவ்விரண்டையும் சுற்றாமல் இருப்பது குற்றமில்லை என்றிருந்தால், நீ கூறும் கருத்து வரும். (“சுற்றுவது

قُلْتُ لَهَا: إِنِّي لَأَظُنُّ رَجُلًا، لَوْ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، مَا ضَرَّهُ، قَالَتْ: «لِمَ؟» قُلْتُ: لِأَنَّ اللهَ تَعَالَى يَقُولُ: {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ} [البقرة: 158] إِلَى آخِرِ الْآيَةِ، فَقَالَتْ: ” مَا أَتَمَّ اللهُ حَجَّ امْرِئٍ وَلَا عُمْرَتَهُ لَمْ يَطُفْ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، وَلَوْ كَانَ كَمَا تَقُولُ لَكَانَ: فَلَا جُنَاحَ عَلَيْهِ أَنْ لَا يَطَّوَّفَ بِهِمَا، وَهَلْ تَدْرِي فِيمَا كَانَ ذَاكَ؟ إِنَّمَا كَانَ ذَاكَ أَنَّ الْأَنْصَارَ كَانُوا يُهِلُّونَ فِي الْجَاهِلِيَّةِ لِصَنَمَيْنِ عَلَى شَطِّ الْبَحْرِ، يُقَالُ لَهُمَا إِسَافٌ وَنَائِلَةُ، ثُمَّ يَجِيئُونَ فَيَطُوفُونَ بَيْنَ الصَّفَا وَالْمَرْوَةِ، ثُمَّ يَحْلِقُونَ، فَلَمَّا جَاءَ الْإِسْلَامُ كَرِهُوا أَنْ يَطُوفُوا بَيْنَهُمَا لِلَّذِي كَانُوا يَصْنَعُونَ فِي الْجَاهِلِيَّةِ، قَالَتْ: فَأَنْزَلَ اللهُ عَزَّ وَجَلَّ {إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِنْ شَعَائِرِ اللهِ} [البقرة: 158] إِلَى آخِرِهَا، قَالَتْ: فَطَافُوا


Next Page » « Previous Page