Category: முஸ்லிம்

Muslim-2256

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2256. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும். எலி, தேள், (நீர்க்)காகம், பருந்து,வெறிநாய் ஆகியவைதாம் அவை.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

Book : 15


خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الْحَرَمِ: الْفَأْرَةُ، وَالْعَقْرَبُ، وَالْغُرَابُ، وَالْحُدَيَّا، وَالْكَلْبُ الْعَقُورُ


Muslim-2255

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2255. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்கு உள்ளேயும் கொல்லப்படும்.தேள், எலி, பருந்து, (நீர்க்)காகம்,வெறிநாய் ஆகியவைதாம் அவை.

இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

– மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

Book : 15


خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الْحَرَمِ: الْعَقْرَبُ، وَالْفَأْرَةُ، وَالْحُدَيَّا، وَالْغُرَابُ، وَالْكَلْبُ الْعَقُورُ

– وحَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ، قَالَا: حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الْإِسْنَادِ


Muslim-2254

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2254. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தீங்கிழைக்கக்கூடிய ஐந்து (வகை) உயிரினங்கள் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியிலும் கொல்லப்படும். பாம்பு, நீர்க்காகம், எலி, வெறிநாய், பருந்து ஆகியவைதாம் அவை. – இதை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 15


خَمْسٌ فَوَاسِقُ، يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحَيَّةُ، وَالْغُرَابُ الْأَبْقَعُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ، وَالْحُدَيَّا


Muslim-2253

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

பாடம்: 9

இஹ்ராம் கட்டியவர்களும் மற்றவர்களும் புனித (ஹரம்) எல்லைக்குள்ளும் வெளியேயும் கொல்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ள (தொல்லை தரும்) உயிரினங்கள்.

2253. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான்கு (வகை) உயிரினங்கள் தீங்கிழைப்பவை ஆகும். அவை புனித (ஹரம்) எல்லையிலும் வெளியிலும் கொல்லப்படும். (அவையாவன:) பருந்து, (நீர்க்)காகம், எலி, வெறிநாய்.

இதை நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உபைதுல்லாஹ் பின் மிக்ஸம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) காஸிம் பின் முஹம்மத் பின் அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரஹ்) அவர்களிடம், “பாம்பைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அது அற்பமாக (அடித்து)க் கொல்லப்படும்” என்றார்கள்.

இந்த ஹதீஸ்

أَرْبَعٌ كُلُّهُنَّ فَاسِقٌ، يُقْتَلْنَ فِي الْحِلِّ وَالْحَرَمِ: الْحِدَأَةُ، وَالْغُرَابُ، وَالْفَأْرَةُ، وَالْكَلْبُ الْعَقُورُ “

قَالَ: فَقُلْتُ لِلْقَاسِمِ: أَفَرَأَيْتَ الْحَيَّةَ؟ قَالَ: «تُقْتَلُ بِصُغْرٍ لَهَا»


Muslim-2252

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2252. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு உம்ராப் பயணத்தில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் “இஹ்ராம்” கட்டியிருந்தோம். அப்போது அவர்களுக்கு (வேட்டையாடப்பட்ட) ஒரு பறவை அன்பளிப்பாக வழங்கப்பட்டது. தல்ஹா (ரலி) அவர்கள் உறங்கிக்கொண்டிருந்தார்கள். எனவே, எங்களில் சிலர் அதைச் சாப்பிட்டனர். வேறுசிலர் (சந்தேகம் ஏற்பட்டதால் சாப்பிடாமல்) பேணுதலாக இருந்துவிட்டனர். தல்ஹா (ரலி) அவர்கள் உறக்கத்திலிருந்து விழித்தபோது, அதைச் சாப்பிட்டவர்களின் செயலைச் சரி கண்டார்கள் (குறை கூறவில்லை). மேலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இ(வ்வாறு வேட்டையாடப்பட்ட)தைச் சாப்பிட்டிருக்கிறோம்” என்று கூறினார்கள்.

Book : 152252. அப்துர் ரஹ்மான் பின் உஸ்மான் அத்தைமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு உம்ராப் பயணத்தில்) தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள்

كُنَّا مَعَ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ وَنَحْنُ حُرُمٌ فَأُهْدِيَ لَهُ طَيْرٌ، وَطَلْحَةُ رَاقِدٌ، فَمِنَّا مَنْ أَكَلَ، وَمِنَّا مَنْ تَوَرَّعَ، فَلَمَّا اسْتَيْقَظَ طَلْحَةُ وَفَّقَ مَنْ أَكَلَهُ، وَقَالَ: «أَكَلْنَاهُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-2251

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2251. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் “நான் “இஹ்ராம்” கட்டியிருந்த ஒரு குழுவினருடன் இருந்தேன். அப்போது நான் “இஹ்ராம்” கட்டாதிருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும், “உங்களில் யாரேனும் ஒருவர் (அதைக் கொல்லுமாறு) அவருக்கு சைகை செய்தாரா? அல்லது ஏதேனும் உத்தரவிட்டாரா?” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர்கள், “இல்லை, அல்லாஹ்வின் தூதரே!” என்றனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவ்வாறாயின் உண்ணுங்கள்” என்றார்கள் எனவும் இடம்பெற்றுள்ளது.

Book : 15


كَانَ أَبُو قَتَادَةَ فِي نَفَرٍ مُحْرِمِينَ، وَأَبُو قَتَادَةَ مُحِلٌّ، وَاقْتَصَّ الْحَدِيثَ، وَفِيهِ: قَالَ: «هَلْ أَشَارَ إِلَيْهِ إِنْسَانٌ مِنْكُمْ أَوْ أَمَرَهُ بِشَيْءٍ؟» قَالُوا: لَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: «فَكُلُوا»


Muslim-2250

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2250. மேற்கண்ட ஹதீஸ் அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

அதில் “நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “இஹ்ராம்” கட்டியவர்களாகப் புறப்பட்டோம். நான் “இஹ்ராம்” கட்டாதிருந்தேன்” என்று ஹதீஸ் தொடங்குகிறது. மேலும் அதில், “அ(ந்த மாமிசத்)தில் ஏதேனும் உங்களிடம் உள்ளதா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாங்கள், “அதன் கால் எங்களிடம் உள்ளது” என்றோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை வாங்கி உண்டார்கள்” என்றும் இடம் பெற்றுள்ளது.

Book : 15


أَنَّهُمْ خَرَجُوا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ مُحْرِمُونَ، وَأَبُو قَتَادَةَ مُحِلٌّ، وَسَاقَ الْحَدِيثَ، وَفِيهِ فَقَالَ: «هَلْ مَعَكُمْ مِنْهُ شَيْءٌ؟» قَالُوا مَعَنَا رِجْلُهُ، قَالَ: فَأَخَذَهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَكَلَهَا.


Muslim-2249

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2249. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஹுதைபியா (ஒப்பந்தப்) போருக்குச் சென்றேன். அப்போது மக்களில் என்னைத் தவிர, மற்ற அனைவரும் உம்ரா விற்காக “இஹ்ராம்” கட்டியிருந்தனர். நான் (வழியில்) ஒரு காட்டுக் கழுதையை வேட்டையாடி என் தோழர்களுக்கு உண்ணக் கொடுத்தேன். அப்போது அவர்கள் அனைவரும் “இஹ்ராம்” கட்டியிருந்தனர். பிறகு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று “எங்களிடம் அதன் இறைச்சியில் சிறிதளவு எஞ்சியுள்ளது” என்று சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “உண்ணுங்கள்” என்றார்கள். அப்போது அவர்கள் அனைவரும் “இஹ்ராம்” கட்டியிருந்தனர்.

Book : 15


أَنَّهُ غَزَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْحُدَيْبِيَةِ قَالَ: فَأَهَلُّوا بِعُمْرَةٍ، غَيْرِي، قَالَ: فَاصْطَدْتُ حِمَارَ وَحْشٍ، فَأَطْعَمْتُ أَصْحَابِي وَهُمْ مُحْرِمُونَ، ثُمَّ أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَنْبَأْتُهُ أَنَّ عِنْدَنَا مِنْ لَحْمِهِ فَاضِلَةً فَقَالَ: «كُلُوهُ» وَهُمْ مُحْرِمُونَ


Muslim-2248

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2248. மேற்கண்ட ஹதீஸ் மேலும் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது.

அவற்றில் ஷைபான் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “உங்களில் யாரேனும் அதைத் தாக்குமாறு அவரைத் தூண்டினாரா, அல்லது தாக்குமாறு சைகை செய்தாரா?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “நீங்கள் சைகை செய்தீர்களா, அல்லது (அவருக்கு) உதவி செய்தீர்களா, அல்லது நீங்களே வேட்டையாடினீர்களா?” என்று கேட்டார்கள் எனக் காணப்படுகிறது.

ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் “நீங்கள் (அவருக்கு) உதவி செய்தீர்களா என்று கேட்டார்களா? அல்லது நீங்கள் வேட்டையாடினீர்களா என்று கேட்டார்களா” என்று எனக்குத் தெரியவில்லை.

Book : 15


«أَمِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَنْ يَحْمِلَ عَلَيْهَا أَوْ أَشَارَ إِلَيْهَا؟» وَفِي رِوَايَةِ شُعْبَةَ قَالَ: «أَشَرْتُمْ أَوْ أَعَنْتُمْ أَوْ أَصَدْتُمْ؟» قَالَ شُعْبَةُ: لَا أَدْرِي، قَالَ: «أَعَنْتُمْ» أَوْ «أَصَدْتُمْ»


Muslim-2247

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

2247. அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ் செய்வதற்காகப் புறப்பட்டார்கள். அவர்களுடன் நாங்களும் புறப்பட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர்களில் சிலரை வேறு வழியில் திருப்பிவிட்டார்கள். அவர்களில் நானும் ஒருவன். அப்போது, “கடற்கரை வழியாகச் செல்லுங்கள்; நாம் சந்திப்போம்” என்று கூறினார்கள். அவ்வாறே நபித்தோழர்கள் கடற்கரை வழியாகச் செல்லத் தொடங்கினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி அவர்கள் திரும்பி வந்தபோது,என்னைத் தவிர அவர்கள் அனைவரும் “இஹ்ராம்” கட்டியிருந்தனர். நான் “இஹ்ராம்” கட்டியிருக்கவில்லை. இவ்வாறு அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, காட்டுக்கழுதைகளைக் கண்டனர். அவற்றை நான் தாக்கி, ஒரு பெட்டைக் கழுதையின் காலை வெட்டி (அதை வேட்டையாடி)னேன். பிறகு அவர்கள் (ஓரிடத்தில்) இறங்கி அதன் இறைச்சியைச் சாப்பிட்டனர்; “நாம் “இஹ்ராம்”கட்டிக்கொண்டே (வேட்டைப் பிராணியின்) இறைச்சியைச் சாப்பிட்டுவிட்டோமே” என்று கூறினர்.

பிறகு அந்தக் கழுதையின் இறைச்சியில் எஞ்சியுள்ளதை எடுத்துக்கொண்டு, அல்லாஹ்வின்

خَرَجَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاجًّا، وَخَرَجْنَا مَعَهُ، قَالَ: فَصَرَفَ مِنْ أَصْحَابِهِ فِيهِمْ أَبُو قَتَادَةَ، فَقَالَ: «خُذُوا سَاحِلَ الْبَحْرِ حَتَّى تَلْقَوْنِي» قَالَ: فَأَخَذُوا سَاحِلَ الْبَحْرِ، فَلَمَّا انْصَرَفُوا قِبَلَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَحْرَمُوا كُلُّهُمْ، إِلَّا أَبَا قَتَادَةَ، فَإِنَّهُ لَمْ يُحْرِمْ، فَبَيْنَمَا هُمْ يَسِيرُونَ إِذْ رَأَوْا حُمُرَ وَحْشٍ، فَحَمَلَ عَلَيْهَا أَبُو قَتَادَةَ، فَعَقَرَ مِنْهَا أَتَانًا، فَنَزَلُوا فَأَكَلُوا مِنْ لَحْمِهَا، قَالَ فَقَالُوا: أَكَلْنَا لَحْمًا وَنَحْنُ مُحْرِمُونَ، قَالَ: فَحَمَلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِ الْأَتَانِ، فَلَمَّا أَتَوْا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا: يَا رَسُولَ اللهِ، إِنَّا كُنَّا أَحْرَمْنَا، وَكَانَ أَبُو قَتَادَةَ لَمْ يُحْرِمْ، فَرَأَيْنَا حُمُرَ وَحْشٍ، فَحَمَلَ عَلَيْهَا أَبُو قَتَادَةَ، فَعَقَرَ مِنْهَا أَتَانًا، فَنَزَلْنَا فَأَكَلْنَا مِنْ لَحْمِهَا، فَقُلْنَا: نَأْكُلُ لَحْمَ صَيْدٍ وَنَحْنُ مُحْرِمُونَ، فَحَمَلْنَا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا، فَقَالَ: «هَلْ مِنْكُمْ أَحَدٌ أَمَرَهُ أَوْ أَشَارَ إِلَيْهِ بِشَيْءٍ؟» قَالَ قَالُوا: لَا، قَالَ: «فَكُلُوا مَا بَقِيَ مِنْ لَحْمِهَا»


Next Page » « Previous Page