Category: முஸ்லிம்

Muslim

Muslim-4660

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4660. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களுக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்;அவர்களது முகம் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.

Book : 43


«كَانَ نَبِيُّ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ كُرِبَ لِذَلِكَ وَتَرَبَّدَ وَجْهُهُ»


Muslim-4661

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4661. உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேதஅறிவிப்பு (வஹீ) அருளப்பெறும்போது, தமது தலையைத் தாழ்த்திக்கொள்வார்கள். நபித் தோழர்களும் தம் தலையைத் தாழ்த்திக்கொள்வார்கள். அந்நிலை விலக்கப்பட்டதும் தமது தலையை உயர்த்துவார்கள்.

Book : 43


«كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُنْزِلَ عَلَيْهِ الْوَحْيُ نَكَسَ رَأْسَهُ وَنَكَسَ أَصْحَابُهُ رُءُوسَهُمْ، فَلَمَّا أُتْلِيَ عَنْهُ رَفَعَ رَأْسَهُ»


Muslim-4662

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 24

நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வகிடெடுக்காமல் நெற்றியில் தொங்க விட்டதும், வகிடெடுத்து வாரிவிட்டதும்.

4662. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

வேதக்காரர்கள் (யூத, கிறித்தவர்கள்) தமது தலைமுடியை (வகிடெடுத்து வாரிவிடாமல் நெற்றியில்) தொங்கவிட்டுவந்தனர். இணைவைப்பாளர்கள் தம் தலைமுடியை வகிடெடுத்துப் பிரித்துவந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்கு இறைக்கட்டளை விதிக்கப்படாத விஷயங்களில் வேதக்காரர்களுக்கு ஒத்துப் போவதையே விரும்பி வந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முதலில்) முன்தலை முடியை நெற்றியில் தொங்கவிட்டுவந்தார்கள். பிற்காலத்தில் அதை வகிடெடுத்து (வாரி)விட்டார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

– மேற்கண்ட ஹதீஸ் இப்னுஅப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்தே மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

Book : 43


كَانَ أَهْلُ الْكِتَابِ يَسْدِلُونَ أَشْعَارَهُمْ، وَكَانَ الْمُشْرِكُونَ يَفْرُقُونَ رُءُوسَهُمْ، «وَكَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحِبُّ مُوَافَقَةَ أَهْلِ الْكِتَابِ فِيمَا لَمْ يُؤْمَرْ بِهِ، فَسَدَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاصِيَتَهُ، ثُمَّ فَرَقَ بَعْدُ»

– وحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ نَحْوَهُ


Muslim-4663

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 25

நபி (ஸல்) அவர்களின் உருவத் தோற்றமும் அவர்கள் அழகிய முகஅமைப்புக் கொண்டவர்களாய் இருந்தார்கள் என்பதும்.

4663. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுள்ள மனிதராகவும் (பரந்த முதுகும், விரிந்த மார்பும் அமைந்து) இரு தோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். இரு காதுகளின் சோனையை எட்டும் அளவுக்குத் தலைமுடி கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் சிவப்பு நிற அங்கி அணிந்திருந்தார்கள். (அந்த ஆடையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட அழகான எவரையும் எப்போதும் நான் கண்டதேயில்லை.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 43


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مَرْبُوعًا بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ عَظِيمَ الْجُمَّةِ إِلَى شَحْمَةِ أُذُنَيْهِ عَلَيْهِ حُلَّةٌ حَمْرَاءُ مَا رَأَيْتُ شَيْئًا قَطُّ أَحْسَنَ مِنْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»


Muslim-4664

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4664. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைவிட நீண்ட முடிவைத்து, சிவப்பு நிற அங்கி அணிந்திருந்த அழகான ஒருவரை நான் கண்டதேயில்லை. அவர்களது தலைமுடி தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது. (விரிந்த முதுகும் பரந்த மார்பும் கொண்டு) அவர்கள் இருதோள்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாக இருந்தார்கள். அவர்கள் அதிக உயரமுடையவராகவும் இருக்கவில்லை; குட்டையானவராகவும் இருக்கவில்லை. (நடுத்தர உயரமுடையவராகவே இருந்தார்கள்).

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அவற்றில் அபூகுரைப் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (அதிகமான) தலைமுடி இருந்தது” என்று காணப்படுகிறது.

Book : 43


«مَا رَأَيْتُ مِنْ ذِي لِمَّةٍ أَحْسَنَ فِي حُلَّةٍ حَمْرَاءَ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَعْرُهُ يَضْرِبُ مَنْكِبَيْهِ بَعِيدَ مَا بَيْنَ الْمَنْكِبَيْنِ، لَيْسَ بِالطَّوِيلِ وَلَا بِالْقَصِيرِ»

قَالَ أَبُو كُرَيْبٍ: لَهُ شَعَرٌ


Muslim-4665

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4665. பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகான முகம் உடையவர்களாகவும் அழகான உருவ அமைப்புக் கொண்டவர்களாகவும் இருந்தார்கள். அவர்கள் ஒரேயடியாக உயரமானவராகவும் இருக்கவில்லை;குட்டையானவராகவும் இருக்கவில்லை.

Book : 43


«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَحْسَنَ النَّاسِ وَجْهًا وَأَحْسَنَهُمْ خَلْقًا لَيْسَ بِالطَّوِيلِ الذَّاهِبِ وَلَا بِالْقَصِيرِ»


Muslim-4666

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 26

நபி (ஸல்) அவர்களது தலைமுடியின் நிலை.

4666. கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி எப்படி இருந்தது?”என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அவர்களது தலைமுடி, அலையலையானதாக இருந்தது. சுருள் முடியாகவும் இல்லை; படிந்த முடியாகவும் இல்லை. அது அவர்களது காது மடல்களுக்கும் தோளுக்கும் இடையே தொங்கிக்கொண்டிருந்தது” என்று பதிலளித்தார்கள்.

Book : 43


قُلْتُ لِأَنَسِ بْنِ مَالِكٍ: ” كَيْفَ كَانَ شَعَرُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ قَالَ: كَانَ شَعَرًا رَجِلًا لَيْسَ بِالْجَعْدِ وَلَا السَّبْطِ بَيْنَ أُذُنَيْهِ وَعَاتِقِهِ


Muslim-4667

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4667. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) அவர்களின் தோள்களைத் தொட்டுக்கொண்டிருந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

Book : 43


«أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَضْرِبُ شَعَرُهُ مَنْكِبَيْهِ»


Muslim-4668

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

4668. அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தலைமுடி (சில வேளைகளில்) இரு காது மடல்களின் பாதிவரை இருந்தது.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

அத்தியாயம்: 43


«كَانَ شَعَرُ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ»


Muslim-4669

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி ✅

பாடம் : 27

நபி (ஸல்) அவர்களின் வாய், கண்கள், குதிகால்கள் ஆகியவற்றின் நிலை.

4669. ஷுஅபா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாலமான வாயும் விரிந்த கண்ணும் மெலிந்த குதிகால்களும் உடையவர்களாக இருந்தார்கள்” என்று ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்கள் கூறியதைத் தாம் கேட்டதாக சிமாக் பின் ஹர்ப் (ரஹ்) அவர்கள் தெரிவித்தார்கள்.

நான் சிமாக் (ரஹ்) அவர்களிடம், “விசாலமான வாய் (“ளலீஉல் ஃபம்”) என்றால் என்ன?” என்று கேட்டேன். அவர்கள் “பெரிய வாய்” என்றார்கள். “விரிந்த கண் (“அஷ்கலுல் ஐன்”) என்றால் என்ன?” என்று கேட்டதற்கு “நீளமான கண் பிளவு” என்றார்கள்.

“மெலிந்த குதிகால்கள் (“மன்ஹூசுல் அகிப்”) என்றால் என்ன?” என்று கேட்டதற்கு, “குதிகாலில் சிறிதளவு சதைப்பற்று காணப்படுவது” என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

«كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَلِيعَ الْفَمِ، أَشْكَلَ الْعَيْنِ مَنْهُوسَ الْعَقِبَيْنِ» قَالَ: قُلْتُ لِسِمَاكٍ: مَا ضَلِيعُ الْفَمِ؟ قَالَ: «عَظِيمُ الْفَمِ»، قَالَ قُلْتُ: مَا أَشْكَلُ الْعَيْنِ؟ قَالَ: «طَوِيلُ شَقِّ الْعَيْنِ»، قَالَ: قُلْتُ: مَا مَنْهُوسُ الْعَقِبِ؟ قَالَ: «قَلِيلُ لَحْمِ الْعَقِبِ»